வைகோவிற்கு பகிரங்க கேள்விகள்
அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது.
உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள்.
//வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.// என உங்களது மனம் கவர்ந்த தலைவியை குளிர்விக்க முழக்கமிடுகிறீர்கள்.
நீங்கள் அடிக்கடி மனசாட்சி என முழக்கமிடுவீர்களே அந்த மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது உண்மையா? சுனாமி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் கலந்துகொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.
மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது. அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை. அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?
அ.தி.மு.க கரைவேட்டிகளிடம் அதிகாரத்தை கொடுத்து அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள், அரிசி, பருப்பு என வழங்கி அரசியல் பார்த்தது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிக்காக பல கிலோமீட்டர் தொலைவு அலைக்கழிக்கப்பட்டனர். மன்னர் மாளிகையில் பிறந்த முதலமைச்சர் செல்வி ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆறுதல் (!) வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல அரசியல் தலைவர்கள் நேரடியாக தரைவழியாக ஆறுதல் சொல்ல வந்ததை பார்த்து தங்கத்தாரகை (!) பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்த மையங்களில் பார்த்தார்.
அறிவிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை முறைப்படி செயல்படுத்த மக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுக்களை உருவாக்க பலர் அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாமல் மறுபடியும் அ.தி.மு.க கரைவேட்டிகள் சொன்ன ஆட்களுக்குத் தான் நிவாரணம். கணிசமான தொகையை அ.தி.மு.க கட்சியின் கரைவேட்டிகள் கொள்ளையிட்டனர். அதன் பங்கு போயஸ் தோட்டம் முதல் மன்னார்குடி கும்பல் வரை போனதும் மறைக்கமுடியாத உண்மை.
கடற்கரை பகுதிகளின் நீண்டகால திட்டமிடலுக்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் உலக வங்கி கொடுத்த தொகை $434 மில்லியன். தமிழ்நாட்டு, பாண்டிச்சேரி வாழ் கடற்கரை மக்களின் கல்வி மற்றும் பயிற்சிக்காக $2.5 மில்லியன் வழங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி (உலக வங்கி கிளை) $143.75 மில்லியன் தொகை மறுவாழ்வு திட்டங்களுக்காக போக்குவரத்து கட்டுமானங்கள், கிராம சீரமைப்பு, வாழ்வாதாரங்களை மீட்கும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கியது. ஜப்பான் நிதியிலிருந்து $2.5 மில்லியன் தொகை வழங்கப்பட்டது. இது தவிர மத்திய அரசு நிதி மற்ரும் பொதுமக்கள் கொடுத்த நிதி ஏராளம். இந்த பணத்தின் கணக்கு அல்லது அது சார்ந்த திட்டங்கள் எங்கே? வெளிப்படையான தன்மையே ஒரு நல்லாட்சிக்கு அடிப்படை (transparancy is the basis of good governance). அதனால் இந்த தகவல்களை உங்களால் ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? வீரச்சவடால்களை கேட்டு தமிழ்மக்கள் வாழ்வு புண்ணாகியது மட்டுமே மிச்சம்.
( கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் கோடிமுனை பகுதியில் பாதிக்கப்பட்ட மகக்ளுக்காக குளச்சல் களிமார் பகுதியில் உப்பளத்தை நிரப்பி வீடுகட்ட சரிசெய்யப்படுகிற நிலம். படம் எடுக்கப்பட்டது டிசம்பர் 29, 2005ல். இதில் வைகோ சொன்ன படி அரசு வேகமான நடவடிக்கை எடுத்து கட்டிய வீடு எங்கே? வீடு கட்ட பணம் கொடுப்பதும் அரசு அல்ல, காரித்தாஸ் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள்)
மக்கள் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் திரட்டிய உள்நாட்டு வெளி நாட்டு நிதியில் தான் அதிகமான புனரமைப்புகள் நடந்தன. இன்றும் நடைபெறுகிறது. மக்கள் இன்னும் தகரம், ஓலைக்கிற்று கொட்டகைகளிலும், வெலையில்லாமலும், மனதிடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாடும் அவலம் இன்றும் கடற்கரை கிராமங்களில் நிதர்சனம். கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் ஆய்வு செய்ததில் நான் கண்ட உண்மையும் இதுவே. மக்களின் கண்ணீரை வார்த்தை பசப்புரைகளால் மறைத்துவிட முனைகிறீர்களா?
மக்கள் பசியில், வறுமையில், வேலையில்லாமல், பேரழிவுகளால் செத்துக்கொண்டிருக்கையில் ஹெலிகாப்டரில், குளிர்சாதன மேடைகளில் வலம் வருவது தான் முதல்வரின் சிக்கனமும், மக்கள் பணம் மீதுள்ள அக்கறையா? ரோம் பற்றி எரிந்தவேளை பிடில் வாசித்த சார் மன்னன் வரலாறு நீங்கள் மறந்திருக்கலாம்.
மக்கள் வாழ்விற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், உலக வங்கி கடன், மத்திய அரசு நிதி முதல்வர் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யவும், அவருக்கு பிடித்தமான பச்சை நிறத்தில் கழிப்பறை கட்டவும் என வீணடிப்பது தான் உங்கள் பார்வையில் நல்லாட்சியா?
அய்யாவும், அண்ணாவும் தந்த வழியில் நடப்பதாக முழங்கும் நீங்கள் எங்காவது அய்யாவோ, அண்ணாவோ, மக்கள் தலைவர் காமராசரோ இப்படிப்பட்டவைகளை ஏற்றதாக படித்ததோ பார்த்ததோ உண்டா?
மக்கள் வாழ்வு மீது அக்கறை இருந்தால் கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை புள்ளிவிவர கணக்குடன் வெளியிடுங்களேன். அதில் தமிழகம் வாங்கிய கடன் தொகை, நிவாரண நிதி, மத்திய அரசு நிதி இவற்றையும் அது செலவிடப்பட்ட விதத்தையும் வெளியிடும் தைரியமும், நேர்மையும், யாருக்கும் வணங்காத தன்மையும் உங்களுக்கு உண்டா?
மக்களை ஏமாற்ற உணர்ச்சிகளை வீரச்சவடால்களில் குழைத்து சொல்லெறியும் உங்களுக்கு அரசியலில் நீடிக்க, கட்சியை தக்க வைக்க இதெல்லாம் தேவைப்படுகிறது. என்ன செய்வது, தமிழ்மக்களும் உணர்ச்சி வசப்படும் மக்கள், உங்கள் பேச்சில் மயங்கி விடலாம் என கனவு காண்கிறீர்கள். கனவு பலிக்குமா தேர்தல் பதில் சொல்லும்.
கேள்விகள் தொடரும்...
திரு
15 பின்னூட்டங்கள்:
அண்ணே, உணர்ச்சி வசப்படாதீங்க. அவர் காமெடி பன்றார்னு பெரும்பாண்மையான தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்கள் பதிவு இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான்.
அதோட இந்தச் சுட்டியில் உள்ள செய்தியையும் படிக்கவும்.
http://www.tmmkonline.org/tml/others/109921.htm
இந்த காமெடியனுக்கு இதெல்லாம் தெரியாதா?
ஸ்டாலினுக்கு கட்சியை தாரை வார்த்து கொடுத்துவிட்டு போகிறார் இவர்.ஐயோ பாவம்...
நாட்டுமக்களுக்கு என்னென்னவோ கவலை இருக்க இவருக்குப் பாவம் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியல "ச்ன் டிவி" வளர்ந்ததுதான் இவருக்கு கண் உறுத்துது.தினகரன் ரூ.1/- தருவது எதோசதிகாரமாம்.ஆடு வெட்டக் கூடாது கோழி வெட்டக் கூடாது எனச் சென்னது மட்டும் ஜனநாயகமாம்...நல்லா சோக்காகீதுபா வை கோ உன் நாடகம்
இன்னாபா...இவ்லோ அப்பட்டமா அல்லாத்தையும் கய்ட்டி கடாசற...
எனக்கு டவுட்டு இன்னான்ன...வைகோ க்கு வய்சாசா இல்ல கலீஞர்க்கு வய்சாச்சா...கலிஞர்க்கு வய்சாச்சுன்னு கொளைக்கரதுன்ங்க, வைகோ நைனாவொட பேச்ச கேட்டுச்சுங்ளா? எலக்கியம், ஒலக வரலாரு, தமியலக்கணம் அல்லாத்தையும் பீஸ் பீஸா கீச்சவரு வளர்மதியோட ஒன்னு விட்ட அன்னன் மாரி ஒர்மயில பேசராரே...
//அழகப்பன் said...
அண்ணே, உணர்ச்சி வசப்படாதீங்க. அவர் காமெடி பன்றார்னு பெரும்பாண்மையான தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்கள் பதிவு இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான்.//
அவசியம் கருதி எழுதியது தான் அழகப்பன். நன்றி.
//அதோட இந்தச் சுட்டியில் உள்ள செய்தியையும் படிக்கவும்.
http://www.tmmkonline.org/tml/others/109921.htm//
எழுத்துரு பிரச்சனையால் படிக்க முடியல.
//முத்து ( தமிழினி) said
ஸ்டாலினுக்கு கட்சியை தாரை வார்த்து கொடுத்துவிட்டு போகிறார் இவர்.ஐயோ பாவம்...//
வைகோ கூட்டணி தாவப்போறக்கதை கடந்த டிசம்பரில் அவரது கொள்கைப்பரப்பு செயலாளரின் அரசியல் குருக்கள் வழி தெரிந்தது தான். அவரது நிற்பந்தம் அப்படி என்ன செய்வார், பரிதாபம்.
//ப்ரியன் said...
நாட்டுமக்களுக்கு என்னென்னவோ கவலை இருக்க இவருக்குப் பாவம் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியல "ச்ன் டிவி" வளர்ந்ததுதான் இவருக்கு கண் உறுத்துது.//
இது தான் இன்று தமிழ்நாட்டில் வாழ்வாதார பிரச்சனை. இவர் அந்த கூட்டணியில இருந்தப்போ அதைப்பற்றி பேசியிருக்காரா?
//Pot"tea" kadai said...
இன்னாபா...இவ்லோ அப்பட்டமா அல்லாத்தையும் கய்ட்டி கடாசற...
எனக்கு டவுட்டு இன்னான்ன...வைகோ க்கு வய்சாசா இல்ல கலீஞர்க்கு வய்சாச்சா...கலிஞர்க்கு வய்சாச்சுன்னு கொளைக்கரதுன்ங்க, வைகோ நைனாவொட பேச்ச கேட்டுச்சுங்ளா? எலக்கியம், ஒலக வரலாரு, தமியலக்கணம் அல்லாத்தையும் பீஸ் பீஸா கீச்சவரு வளர்மதியோட ஒன்னு விட்ட அன்னன் மாரி ஒர்மயில பேசராரே...//
:)
//kunchamanee has left a new comment on your post "வைகோவிற்கு பகிரங்க கேள்விகள்":
dai porreinkagal dnk is family party karunaneethee thrudannn//
இந்த பதிவிற்கு வந்த பாராட்டு இது. ஏதோ ஒரு நண்பரை நல்லபடியாக மனநிலையில் பாதித்திருக்கிறது :) அவரது பிளாக்கர் இங்கே http://www.blogger.com/profile/16845004. தைரியம் உள்ளவர் யாராக இருந்தாலும் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்து வாதிட வாருங்கள். ஒளிந்திருந்து சவடால்கள் வேண்டாம். இது உங்கள் பண்பை நீங்கள் வெளியிடும் விதம் இது என்பதை அறியத் தரவே இதை பதிகிறேன்.
////திறமையான, மக்கள் விரும்பக்கூடிய, சேவை மனப்பாண்மை உள்ள ஒரு மாற்று தலைவரை உருவாக்கி வைத்திருக்காததும் கலைஞரின் தவறுதான். ///
யார் சொன்னது? பேராசிரியர் இல்லையா? நீங்கள் சொல்வது போல் அன்பும், பண்பும், திறமையும் மிக்க ஒரு தலைவர் அவர். திமுக வில் ஒரு அடிப்படை பிரச்சனை என்னவென்றால் கலைஞர் குடும்பத்தினரை தவிர வேறு தலைவர்கள் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்கள்.
ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள திமுகவினர் வேண்டுமானால் தயாராக இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
////ஆனால் திமுகவை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள், தயவு செய்து நரேஷ் குப்தா அவர்கள் சொல்லியிருக்கும் 'எந்த சின்னத்துக்கும் ஆதரவு இல்லை' என்ற தேர்வை உபயோகிக்கவும். ////
ஸ்டாலினை ஒப்புக்கொள்ள முடியாதவர்களும் அதையே செய்யவும்....
R. Prabu
An humble request. Please don't politicise the tsunmai relief operation. Even the opposition parties including DMK never tried that.
//மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது.
அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை.
அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?
Vaiko has put his Vote Bank capital at greater risk by joining hands with Jayalalitha who put him under POTA.
Instead, he should have started 3rd front atleat 2 years ago, who knows, he might have great chance to capture the power.
Atleast Vijayakanth has guts to do that though he won't get votes.
// 'ரஜினி' ராம்கி said...
An humble request. Please don't politicise the tsunmai relief operation. Even the opposition parties including DMK never tried that.//மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது.
அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை.
அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?
// //
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே!
தவறாக புரிந்துகொண்டீர்களென நினைக்கிறேன். Tusnami rescue operation செய்ய வேண்டிய கடமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உண்டு. அது யாராக இருப்பினும். அந்த விதத்தில் அ.தி.மு.க அரசு அந்த கடமையை செய்ய காலதாமதமும், முறைகேட்டையும் செய்ததை சுட்டிக்காடுகிறேன். மற்றபடி மக்களின் தலைவர்கள் என்பது எந்த குறிப்பிட்ட அரசியல் தலைவரையுமல்ல.
மற்றபடி சுனாமி வைத்து அரசியல் பண்ண நான் அரசிவாதியுமல்ல, எந்த கட்சியின் வழி நடப்பவனுமல்ல. வைகோ சொல்வது தவறு என்பது என் வாதம். இது ஆதாரப்பூர்வமானது. நன்றி!
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி நாகரீக கோ.., பிரபு
//தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.//
அய்யா,
உண்மையாக நடந்தது என்ன என்று வைகோவிற்கு தெரியாது என நினைக்கிறேன்.
சுனாமி பாதித்த மக்களுக்கு பல மாநிலங்களிலிருந்து பெங்களூர், மைசூர், ஆந்திரா, உள்ளிட்ட இடங்களிலுருந்து, நிவாரணப் பொருள்களை மக்கள் லாரி லாரியாகக் கொண்டு வந்தனர்,
கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த பொருள்களை சுனாமி பாதித்த மக்களுக்கு கொண்டு வந்தவர்கள் நேரடியாக வழங்க தமிழக அரசு தடையாகவே இருந்தது. அவற்றை அரசிடம் அவற்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால் அவை பின்னர் அ.தி.மு.க வினர் விற்பனைக்கு அனுப்பியதாகவும் செய்திகள் வந்தன.
மக்களும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த பொருட்கள் அவ்வளவு அதிகம், ஆனால், அத்தனை நிவாரணமும் செயாவின் சாதனையாக வைகோ பேசிவருகிறார்.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com