என்ன பண்பாடு ஆகா!
பார்ப்பனீயத்தின் முன்னர் மண்ணியிட்ட மன்னர்கள் முதல் குடியரசு தலைவர்கள் வரை இந்த நாட்டில் சாதாரணமானது தான். அதிகாரம் கையில் இருக்கையில் மடாதிபதிகள் ஆட்சிகளை அசைத்து விளையாடிய சித்து விளையாட்டுக்களை கண்டு தமிழ்நாடு பழக்கப்பட்டது தான்.
இதை நன்றாக புரிந்து வைத்திருப்பதால் தானோ ஜெயலலிதா கட்சியின் முதல் மட்ட தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டன் வரையில் மண்டியிட்டு காளை மாடு போல தலையாட்ட வைக்கிற வித்தையை கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செய்கிறார். கடந்த காலங்களில் மேடைகளில் ஒரே ஒரு இருக்கை மட்டும் இருக்க மகாராணியார் வீற்றிருக்க வேட்பாளர்கள் பவ்வியமாக 180 டிகிரியில் வளைந்திருந்த காட்சி அதிகாரத்தின் ஆணவமாக தெரிந்தது. இந்த தேர்தலில் வண்டிக்கு முன்னால் குந்தவைக்கபட்ட நந்திகளாக வேட்பாளர்கள் இருக்க, காவல்தெய்வம் வண்டியில் அமர்ந்திருக்கிறார். எவ்வளவு மரியாதை, பண்பு, கண்ணியம். இது தான் நாட்டை நல்வழிப்படுத்த புறப்பட்டவர்களுக்கு அழகு.
ஜெயலலிதா கார் கூட கொடுத்து வச்சது தான் மண்டியிட வைக்க கரன்சியும், அதிகாரமும், அதற்கு வாலாட்டும் கூட்டமும் இருக்கும் வரை. மண்டியிடவும், காலில் விழுந்து கால்தூசாய் கிடக்க மீண்டும் தேர்வு செய்வோம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு. அதன் பின்னர் மண்டியிடுவது தமிழகத்தின் காலக்கடமையாகட்டும்.
திரு
படம் உதவி: தட்ஸ்தமிழ்.காம்
6 பின்னூட்டங்கள்:
உண்மைதான். இப்படிப்பட்ட சுயமரியாதை அற்றவர்கள் இருப்பதால்தான் தொடர்ந்து உங்கள் பூமியில் பாகிஸ்தானியரும் பங்களாதேஷியரும் உள்ளேயே இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் கொல்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள் அடுத்த அரசியல் பதவிக்காக ஓட்டுப்பொறுக்கி தலைவர்கள் முன் மண்டியிடுகிறார்கள்.
தொடர்ந்து இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் நடப்பதும் அப்பாவி மக்கள் இறப்பதும் ஏன் ஆச்சரியமான விஷயம் இல்லை என்றால் இதுதான் காரணம்.
ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it..
என்ன சார் சொல்லுறீங்க.!இதை காட்டித் தான் கட்சியை அவர் எப்படி விரல் நுனியில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்- அப்படீன்ணு அறிவு ஜீவிகள் சொல்லுறாங்க!
//ஆரோக்கியம் said...
உண்மைதான். இப்படிப்பட்ட சுயமரியாதை அற்றவர்கள் இருப்பதால்தான் தொடர்ந்து உங்கள் பூமியில் பாகிஸ்தானியரும் பங்களாதேஷியரும் உள்ளேயே இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் கொல்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள் அடுத்த அரசியல் பதவிக்காக ஓட்டுப்பொறுக்கி தலைவர்கள் முன் மண்டியிடுகிறார்கள்.
தொடர்ந்து இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் நடப்பதும் அப்பாவி மக்கள் இறப்பதும் ஏன் ஆச்சரியமான விஷயம் இல்லை என்றால் இதுதான் காரணம்.//
உண்மை தான், எங்கள் பூமியில் (மிக அழுத்தமாக படியுங்கள்) :) ஆரியர்கள் கைபர், போலன் கணவாய்கள் வழி படையெடுத்து வந்து சூறையாடியது முதல் பார்ப்பனீய தீவிரவாதம் செய்த குழப்பங்களின் விழைவாக எங்களுக்குள்ளேயே சண்டையிடுகிறோம். இந்து தீவிரவாதம் தந்து பாசிசத்தால் ஏற்படுத்திய கலவரங்களின் பின்விளைவான பிற தீவிரவாதங்களையும் நாங்கள் சமாளிப்போம். பெரியார், அம்பேத்கார், புத்தர் என எங்களின் தலைவர்கள் அதற்கான மனதிறனை தந்திருக்கிறார்கள் நண்பரே.
(உங்களது இந்த சிண்டு வேலையை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள், எடுதப்பட்ட கருத்துக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு? மதவெறியை கக்கும் உம் போன்றவர்கள் எப்போது தான் திருந்துவதாக எண்ணம்?)
அக்கிரமம்.
வேற என்னத்த சொல்ல?
//tbr.joseph said...
அக்கிரமம்.
வேற என்னத்த சொல்ல?//
ஜோசப் சார் வேற வார்த்தையே இல்லை எனக்கும். தேர்தல் காலத்திலேயே இது நடக்குதுன்னா, வெற்றி பெற்றால்? நினைக்கவே முடியலை
சாலையோ அழுக்கு
சட்டையோ வெளுப்பு
இரண்டில் ஒன்று
எதிர்மறையானால்
.
.
.
நெடுஞ்சாண்கிடைதான்!
'படமும் பதிவும் அருமை' எனச் சொல்ல முடியவில்லை;
தமிழனுக்குச் சிறுமை.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com