Saturday, April 29, 2006

நடுநிலையும் தினமலர் நாளிதழும்

தினமலர் பத்திரிக்கையின் நடுநிலை பற்றி இன்று வந்த வலைப்பதிவுகள் படித்த பின்னர் சில பழைய நினைவுகளும் வருகிறது.

1980களின் இறுதியில் திடீரென தமிழகம் முதல் உலகமெங்கும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பு தோன்றியது. காரணம் தினமலர் வெளியிட்ட 'உண்மை உண்மையைத் தவிர வேறில்லை' பாணியிலான ஒரு செய்தி. அந்த செய்தி விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் அவரது தளபதிகளில் ஒருவரால் கொல்லப்பட்டதாக முதல் பக்கத்தில் வெளிவந்தது. இந்த செய்தியை முதலில் வெளியிட்டது தினமலர் என அறிவிப்பு வேறு. மறுநாள் பத்திரிக்கையில் பிரபாகரன் அன்றைய தினமலர் பத்திரிக்கையை கையில் வைத்திருக்கும் படம் வெளிவந்ததும் இந்த முறை தினமலரில் அல்ல. இந்த உறுதிப்படுத்தாத செய்தியை ஒரு போராளி இயக்கத் தலைவரை பற்றி வெளியிட தினமலருக்கு வந்த அவசரம் என்னவோ? இன்னும் விளங்கவில்லை! அதற்கு வருத்தம் தெரிவித்ததா தினமலர்? பத்திரிக்கை தர்மம் இது தான்!

பாபர் மசூதி x இராமர் கோவில் பிரச்சனையில்ம் தடையை மீறி திரு.அத்வானி அவர்கள் இரதயாத்திரை சென்ற போது பீகார் அரசால் கைது செய்யப்பட்டார். கலவரம் வருமோ? என்ன நடக்கப் போகிறதோ என நாடே பதட்டத்தில் இருந்தது. அந்த அந்திசாயும் வேளை தினமலர் வழக்கத்தை மீறி மாலைப்பதிப்பு வெளியிட்டு இலவசமாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வீசியது. தொடர்ந்து மக்கள் மனங்களில் வெறி பரவியது.

தினமலர் தலைப்பில், செய்திகளில் இருக்கிற ஆதிக்க எண்ணமும், அவசரக் குடுக்கைத் தனமான கருத்து திணிப்புகளும் என்று தான் முடிவுக்கு வருமோ? சார்புத்தன்மையிலிருந்து விலகும் வரை தினமலருக்கு நடுநிலை நாளிதழ் என்ற அடைமொழி அவசியமா?

அதுவரை, எழுதுகோலின் அடையாளத்தை சிதைக்கும் வரிசையில் தினமலரும் ஒரு ஊடகம் அவ்வளவே!

3 பின்னூட்டங்கள்:

Sami said...

நடுநிலமை மண்ணாங்கட்டியெல்லாம் தினமலரிடம் எதிர்பார்ப்பது தவறு.இதுவரை அரசியலில் கட்சிகள் கூட்டணி அமைத்தன,இந்த முறை பத்திரிகைகளும் அதில் சேர்ந்துள்ளன,இப்பொழுது சொல்லுங்கள் தினமலர் எந்த கூட்டணியின் பக்கம் என்று....

Pot"tea" kadai said...

உரக்கச் சொல்லுவேன் தினமலர் நடுநிலை நாளிதழ் என்று...
காரணம்
ஹி...ஹி...

Machi said...

ஒரு விளம்பர உத்திக்காக தான் தினமலர் "நடுநிலை நாளேடு" என்று சொல்லிக்கொள்கிறது. அது எப்போதுமே சார்புநிலை நாளேடுதான். பொய்ச்செய்தி போடுவதுடன் அது தவறு என்று (எல்லோரும்) அறிந்தபின்னும் அதற்கு மன்னிப்பு கூட கேட்காத நாளிதழும் கூட.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com