இந்துத்துவ வெறியும், காந்தியின் கொலைகாரர்களும்
இந்து மதவெறி தேசியமயப்படுத்தப்பட்டு இது தான் தேசியம், அது தேசவிரோதம், அது பயங்கரவாதம் என ஒரு கூட்டம் நவீன-காவி-பாசிச-தேசியம் பேசி வருவகிறது. அதன் தொடர்ச்சியாக தேசியம் என்கிற மாயையை மத, இன அடையாளங்களுக்குள் அடைத்து இந்துத்துவ வெறிக்கு எதிராக குலரெழுப்புபவர்கள் அனைவரும் துரோகிகள், அவர்கள் வந்தேறிகள், விரட்டியடிக்கப்படவேண்டியவர்கள் என போலியான விளக்கங்கள் கூறி கரச்சேவை காலித்தனத்தை ஊடகங்கள், மேடைகள், அரசியல் அரங்குகள் வழி பரப்புரை செய்து வருகிறது. இந்த நிலையில் எது போலி, எது உண்மை, எது வரலாறு, எது திரித்தல் என்பதை இனம் காண அறியும் சுயதேடல் மற்றும் அவசியம் கருதி நான் கண்டெடுத்த சில வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்கிறேன்.
1948 ஜனவரி 30 சரித்திரத்தில் என்றும் மாறாத கொலைவெறியின் அடையாள நாள். ஆம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் ப்ங்காற்றிய காந்தியை கொன்று இந்து வெறி பிடித்த பார்ப்பனீய கொள்கையாளர்கள் (இது ஒரு கருத்தியல் பற்றியதே தவிர குறிப்பிட்ட இனத்தை குறிப்பிட்ட சொல்லாடல் அல்ல) இரத்தத்தில் குளித்து எழுந்த நாள். காந்தி கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும் துயர அலையாய் பரவ, மராட்டிய மாநிலமெங்கும் பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதன் பின்னணி என்ன? ஏன் இந்த கொலை வெறி? கோட்சே என்கிற காந்தியின் கொலைகாரன் தனிமனிதனா இல்லை ஒரு தத்துவமா? இல்லை ஒரு சமூகமா? தனி மனிதன் என்றால் ஏன் ஒரு ச்மூகமே காந்தியின் மரணத்தை கொண்டாட வேண்டும்?
காந்தி கொலை செய்யப்பட்ட 50 வருடங்களுக்கு பின்னர் காந்தியின் கொலைகாரர்களின் தத்துவத்தில் ஊறிய பாரதீய ஜனதா கட்சி இந்திய கூட்டமைப்பை ஆட்சி செலுத்த, கொலைகாரர்களின் குருவான சர்ச்சைக்குரிய வீர்சாவர்க்கர் நாடாளுமன்ற வளாகத்தில் சிலையாக அழகுபடுத்தப்பட்டிருக்கிறார். கொலைக்காரகளையும், கொலை செய்யப்பட்டவனையும் ஒரே நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பார்க்கிற மனுநீதியின் அடையாள சின்னம் இது.
இன்று வலைப்பூக்களில் பிற மதங்கள், நாடுகள் மீது காழ்ப்புணர்வும், வக்கிரமும் குழைத்து துப்பும் மனநிலை பாதிப்பின் தொடக்கம் சாவர்க்கர் என்கிற சித்பவன் பார்பனரிடமிருந்து பிறந்தது தான். இந்து மத வெறியை பரப்பவும், பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், அவர்களது பிடியில் இந்திய அதிகாரம் அனைத்தும் இருத்தல் வேண்டும், அகண்ட இந்தியா உருவாக்கப்படல் என்ற நோக்கத்திற்காக இந்து மகாசபை ஏற்படுத்தப்பட்டது. அதன் நடவடிக்கைகள் சாதி, மத மேலாண்மை வெறியை இளைய தலைமுறையினர் மத்தியில் வளர்த்தது. இன்றைய பா.ஜ.க தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் அந்த காலகட்டத்தில் இந்து மகாசபை நடவடிக்கை வழி உருவான இந்து தீவிரவாத தலைவர்கள் என்பதை நாடறியும்.
கலவரங்களை உருவாக்குவதும், வரலாற்றை திரித்து எழுதுவது, அதற்காக செயற்கையாக ஆதாரங்களை உருவாக்குவது, கொலை, வன்முறையில் ஈடுபட தயங்காத வெறிபிடித்த கூட்டத்தை பன்முக அமைப்புகளாக வளர்த்தெடுப்பது என பல யுக்திகள் கொண்டு செயல்பட துவங்கியது இந்து மகாசபையும் அதன் சார்பு அமைப்புகளும். ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு விடுதலையடையும் முன்னர் இந்து நாடு, இந்துஸ்தானி கலாச்சாரம், இந்தி மொழி என இந்துத்துவ வெறி கோட்பாடுகளில் கனவு கண்டு வந்த பார்ப்பனீயம் இந்தியாவில் இந்துத்துவ மதவெறி வளர்த்த வரலாற்றின் தொடக்கம் இது. இதற்கு அது கையாணட் யுக்திகள் என்ன?
இன்னும் தொடர்வேன்...
திரு
உங்கள் கருத்து என்ன?
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com