சாயிராம் சத்ய ஸ்ரீ சாயி பாபா (ஒளிஒலி)
உற்றுப்பாருங்கள்! உங்களால் இது முடியுமா? வாயிலிருந்து லிங்கம் எடுப்பது எளிதான செயலா? ஆச்சரியம் தரும் அற்புதமா? இல்லை அற்பமான செயலா? சாயிராம்!
தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்
திரு
உற்றுப்பாருங்கள்! உங்களால் இது முடியுமா? வாயிலிருந்து லிங்கம் எடுப்பது எளிதான செயலா? ஆச்சரியம் தரும் அற்புதமா? இல்லை அற்பமான செயலா? சாயிராம்!
தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்
திரு
39 பின்னூட்டங்கள்:
இலிங்கம் வாயிலிருந்து வந்ததா? கைகுட்டையில் இருந்ததா?
சாய்ராம்.
லிங்கத்துக்கு பதிலாய் பெட்ரோல் வந்திருந்தால் எரி பொருளில்
தன்னிறைவு பெற்றிருக்கலாம்.
யாராச்சும் அவர்கிட்ட இதை சொல்லனும்
எங்க ஊரு குரங்காட்டிக்கப்புறம் கொஞ்சம் பொழுது போக்காய் இருக்கறது இந்தாளாட காமெடிதான்
ஜெய் சாய்ராம்.
பக்தியுடன்
பக்தன்
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மந்திரவாதி, மதவாதி மற்றும் ஏமாற்றுவாதி.....
அவரைக் குறை கூறவேண்டுமென்றால்...பகட்டான படிப்பாளிகளும்... பகுத்தறிவிலா பாமரர்களும் மந்தை மந்தைகளாய்...அவ்வித்தையில் புத்தி மழுங்கி, சித்தம் கலங்கி..அவரையே இறைவனென்று சொல்லித் திரிபவர்களை என்னவென்று சொல்வது...
வேடிக்கையான வேதனை...
திரு,
நகைச்சுவை என்று வகைப்படுத்துவதற்கு பதிலாக அவசரத்தில் மாற்றி வகைப்படுத்திவிட்டீர்கள்..சரி விடுங்க..
நல்ல நகைச்சுவை.. நன்றி.
சாய்பாபா பக்தர்கள் என இரண்டு லூசுகளின் வலைபதிவில் சில தொடுப்புகளை பின்னூட்டமாகப் போட்டேன். அவர்கள் அதை அனுமதிக்கவே இல்லை. இதோ அந்த இணைப்புகள். இவற்றில் அவர் ஏமாற்று மாஜிக் வேலைகள் செய்யும் வீடியோக்களை ஸ்லோ மோஷனில் பார்க்கலாம்.
http://home.hetnet.nl/~ex-baba/engels/movies.html
http://www.exbaba.com/
http://www.sokaren.se/INDEX135.HTML
http://home.hetnet.nl/~ex-baba/engels/witnesses.html
http://www.indian-skeptic.org/html/video.htm
அவரு கைக்குட்டையிலிருந்து லிங்கம் எடுத்தாலும் வாயிலிருந்து வந்ததாக தான் நாங்கள் நம்புவோம்.
ஜெய் ஜெய் சாய்ராம்.
திரு,
இவ்வளவு தானா? இதுக்கேவா ஏமாந்துகிட்டிருக்காங்க நம்ம மக்கள்?
அடப் பாவி!
சீக்கிரம் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு லிங்கம் மட்டுமில்லாம வெரைட்டியா, கும்பிட வரும் ஆட்களின், சட்டை புடவை கலருக்குப் பொருத்தமா கடவுள் டாலர், பாசி மணி, பேனான்னு எடுத்துக் கொடுத்தா இன்னும் நல்லா ஜாலியா இருக்கும்ல?!
அட நீங்க வேறே...
இதெல்லாம் இப்படி ப்ரூவ் பண்ணாமட்டும்
நாங்க என்னா திருந்திடவா போறோம்.
சீரழியறதுக்குன்னே பாப்பான் உருவாக்கின கூட்டம். அவ்வளவு சீக்கி்ரம் உருப்பட்டுருவமா என்ன..
இது ஏமாற்று வேலை எனும் கோணத்தை விட தினசரியாக மன அழுத்தங்களில் நிம்மதி இன்றி அலையும் சாமான்யர்களுக்கு எல்கேஜி குழந்தைகள் மாதிரி பெரும் நம்பிக்கையோடு பெரும் கூட்டமாய் வரும் சாமான்யர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகத் தெரிந்தே செய்யப்படும் விளையாட்டே இம்மாதிரி லிங்கம் கக்குவது, காற்றிலிருந்து பூ வரவழைப்பது, திருநீறு வரவழைத்துத் தருவது என்பது.
மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. சலனமுற்று கோபதாபங்கள் போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்பப்பட வைப்பது அமைதியற்ற மனமே ஆகும்.
உண்மையான மகிழ்ச்சி என்பது சலனமற்ற மனம் பெற்றிருப்பதே ஆகும். True happiness is measured by the tranquility of mind.
இந்நிகழ்வு அறிவியல் விஞ்ஞானிகளுக்காக நடத்தப்படுவது இல்லை. மன அமைதியுற்று அல்லல் படும் சாமன்யர்களுக்கு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மன உளைச்சலில் இருப்போர்க்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக.
மன அமைதி குன்றியவன் பி.எச்.டி ஆய்வுப்பட்டம் படித்திருந்தாலும் he loses his discriminating intellect properly functioning. அவனுக்கு அவசியம் மீள முடியும் எனும் நம்பிக்கையே. இது அம்மாதிரியான உளவியல் செயல்.
இந்நிகழ்வை நடத்தும் நபருக்கும் தான் செய்வது என்ன என்பது தெரியும். அதன் நோக்கமும் எவரையும் ஏமாற்றுவது அல்ல.
சென்னைக்கு தண்ணீர் வர எல் அண்ட் டி நிறுவனத்தை வைத்து கிருஷ்ணா நதி நீர் கண்டலேறுவிலிருந்து சேதமின்றி வந்து சேர கான்க்ரீட் கால்வாய்க்கு எந்த ஆரவாரமும் இன்றி 200கோடியில் இதே சாய்பாபா செய்ததற்கு திராவிடக் கொழுந்துகள் நன்றிகூட தெரிவித்ததாக நினைவில்லை.
என்ன செய்ய எனக்கு மாலை போடாதே ஆனால் அந்தக் காசைக் கையில் குடு என்ற ஈ.வெ.ராவைக் கொண்டாடத் தெரிந்த திராவிட அரசுகள், திராவிடக் கொழுந்துகளுக்கு சாய்பாபா 200 கோடிக்கு சென்னையின் பிரதானமான ஒரு குடிதண்ணீர் திட்டத்தை கைக்காசைப் போட்டு செய்து தந்தாலும் நன்றி சொல்லாமல் பார்ப்பனக் கூட்டம் என்று சொல்லச் சொல்வதைத்தானே அரசியல் திரா'விட'ப் பெத்தடின் 40ஆண்டுகளில் சாதித்திருக்கிறது.
நான் சாய்பாபா பக்தனில்லை.
அன்புடன்,
ஹரிஹரன்
அன்பின் ஹரிஹரன்,
திராவிட குஞ்சுகள் தீ விட்டு எரிவதால் புட்டபர்த்தி dude செய்வது நியாயமாகாது. அவர் ஓரு பவர் புரோக்கர். இந்து மதம் என்று எதற்கு நீங்கள் கொடி பிடிக்கிறிர்களோ அதைதான் இவர்கள் அறுவடை செய்து தவறுகள் வெளியே தெரியாமல் இருக்க பிச்சை காசுகளும் இரைக்கிறார்கள். திரு இப்பதிவில் இட்டது ஒரு சிறு வீடியோவே. இவரை பற்றிய ஏராளமான தகவல்கள் வலைத்தளமெங்கும் உண்டு.
உங்கள் மதம் காக்க் ஆசை உண்டெனில்
அதை முதலில் இவர்களிடமிருந்து விடுவியுங்கள். சட்டப்படி வித்தை காட்டி பணம் சம்பாதிப்பது தவறில்லை. ஆனால் மதத்தையும், கடவுளையும்,மக்கள் அறியாமையும் வித்தைகள் காட்டி பிடிக்குள் வைத்திருப்பது MORALLY wrong.
I do not know what appeals to people about Sr Sai Baba. But appeal, it does. it is not only Hindus who throng Puttaparthi or WhiteField.
I have seen a lot of Westerners, Japanese and many other nationalities.
I cannot explain this.
அன்பின் அனானி,
மனம் கொந்தளிப்பது நின்றவுடன் அறிவு தானாகவே சிந்திக்கத் தொடங்கும் எப்படி எல்கேஜி முடிந்ததும் அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்குச் செல்கிறார்களோ அம்மாதிரியே அவர்களுக்குள்ளேயே தேடுதல் உந்துசக்தி அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும்.
இந்துமதம் ஒரு சாய்பாபாவிடமோ, ஒரு ஜெயேந்திரரிடமோ, ஒரு பங்காரு அடிகளிடமோ சிறைப்படுத்தப்பட்டு விடக்கூடிய விஷயம் அல்ல.
It is upto the individual to put his effort to evolve philosophically with all his sincerity in his SEEKING.
எனக்குத் தெரிந்த வகையில் மதத்தையும் கடவுளையும் வைத்துப் கடவுள் இல்லை, மதம் இல்லைன்னு சொல்லி அந்தக் கடவுளர், சமயங்களை எதிர்மறையாக இழிவுசெய்தவாறே அதிகாரத்திலிருந்து கொண்டு ஆயிரம் ஊழல் செய்து பெருஞ்செல்வம் சேர்த்து சூத்திரன் நான் பார்ப்பன சூழ்ச்சி என்போர் செய்வது not just morally wrong... it has been proving for quite some time that it is extremely detrimental.
ஏன் அனானியாக நேரடியாக விமரிசிக்கலாமே அறிந்து கொள்ள உதவுமே என்றுதான்,
அன்புடன்,
ஹரிஹரன்
என்னை சாய்பாபாவின் பக்தன் என சொல்லிக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை....
அடியேனும் இதனைச் சொல்லிக் கொள்கிறேன். சாயிபஜன் என்று ஒரு தனி வலைப்பூவே வைத்திருக்கிறேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
//எந்த ஆரவாரமும் இன்றி 200கோடியில் இதே சாய்பாபா செய்ததற்கு திராவிடக் கொழுந்துகள் நன்றிகூட தெரிவித்ததாக நினைவில்லை.//
எந்த ஆரவாரமும் இன்றி கேரள அம்மே அமிர்தாநந்தமயி சுனாமி விடுகள் கட்ட 200 கோடி தந்து, பக்தர்கள் மூலம் உடல் உழைப்பையும் தந்ததை எத்தனை பார்பன பவிசுகள் பாராட்டியது என்று ஹரிஹரன் சொல்வாறெனில் நல்லது.
அனானி நண்பரே. சத்ய சாயிபாபா ஒரு பார்ப்பனர் என்ற எண்ணத்தில் நீங்கள் பேசுவதாகத் தெரிகிறது. அவரும் பார்ப்பனர் இல்லை; அம்மா அமிர்தானந்தமயியும் பார்ப்பனர் இல்லை.
சரி. நீங்கள் தான் சொல்லுங்களேன். எத்தனை திராவிடக் கொழுந்துகள் அமிர்தானந்தமயி அம்மாவின் அருஞ்செயலுக்கு நன்றி தெரிவித்தார்கள்? அவர்களுக்கு யாராயிருந்தால் என்ன? அமிர்தானந்த மயியோ சாய்பாபாவோ பங்காரு அடிகளாரோ யாராயிருந்தாலும் அவர்கள் செய்யும் நல்லதைப் பற்றி எந்த திராவிடக் கொழுந்துகள் வாய் திறக்கிறார்கள். திட்டுவதற்கு மட்டும் உடனே வந்துவிடுவார்கள் வரிந்து கட்டிக் கொண்டு.
Dear Hariharan,
Thanks for the post.
I posted as Anonymous not because I did not want to disclose my identity .I am a new blogger and havent created my nlog ID as yet for two reasons. Being about 55 years old I am a late user of Computers and therefore not quite adept. I am trying to pick up and soon will be able to post in Tamil my Mother tongue once I master the little nuances in handling the Tamil editor.
You are correct. Hindu religion or more correctly Hindu thoughts are too vast and do not stand threatened by God Men.Equally it doesn't derive its strength from God Men either.
During my student days I used to be quite influenced By Bertrand Russell and used to pride myself as an agnostic.But leanings towards spirituality developed in my early thirtees.
But among God men Sai Baba is unique in that he has a great no of followers/devotees cutting across religion/ethnicity/nationality etc.
My email id is rs2803@rediffmail.com
Pls do send me a mail and I will be happy to exchange some notes on an interesting conversation I once had with an old Mexican lady in Bangalore Airport about 15 years ago.She was an enthusiastic devotee of Sri Puttparthi Sai Baba.
Perhaps you can also advise me on using the tamil editor.
Sridharan
// குமரன் (Kumaran) said...
இலிங்கம் வாயிலிருந்து வந்ததா? கைகுட்டையில் இருந்ததா?
சாய்ராம்.//
நல்லா பாருங்க குமரன்! கைக்குட்டையில இருந்ததா லிங்கம்... என்ன செய்ய நம்ம அவதாரங்களின் வல்லமைக்கு கைக்குட்டை தேவைப்படுகிறது.
//Anonymous said...
லிங்கத்துக்கு பதிலாய் பெட்ரோல் வந்திருந்தால் எரி பொருளில்
தன்னிறைவு பெற்றிருக்கலாம்.
யாராச்சும் அவர்கிட்ட இதை சொல்லனும்
எங்க ஊரு குரங்காட்டிக்கப்புறம் கொஞ்சம் பொழுது போக்காய் இருக்கறது இந்தாளாட காமெடிதான்
ஜெய் சாய்ராம்.
பக்தியுடன்
பக்தன்//
சாயிராம் :)
//Sarah said...
இதைத்தான் எங்கள் ஊரில் சொல்வார்கள்
"கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கரவனுக்கு எங்க போச்சு புத்தின்னு"
சாரா//
கேக்கிறவன் இல்ல இங்க சாரா... பாக்கிறவன்... கண் முன்னாடி கை காட்டும் வித்தைகளின் ஜாலம்... :)
//blogsenthil said...
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மந்திரவாதி, மதவாதி மற்றும் ஏமாற்றுவாதி.....
அவரைக் குறை கூறவேண்டுமென்றால்...பகட்டான படிப்பாளிகளும்... பகுத்தறிவிலா பாமரர்களும் மந்தை மந்தைகளாய்...அவ்வித்தையில் புத்தி மழுங்கி, சித்தம் கலங்கி..அவரையே இறைவனென்று சொல்லித் திரிபவர்களை என்னவென்று சொல்வது...
வேடிக்கையான வேதனை...//
நியாயமான இந்த கேள்வி
//Sivabalan said...
திரு,
நகைச்சுவை என்று வகைப்படுத்துவதற்கு பதிலாக அவசரத்தில் மாற்றி வகைப்படுத்திவிட்டீர்கள்..சரி விடுங்க..
நல்ல நகைச்சுவை.. நன்றி.//
யோசித்தேன் சிவா. :)
//Anonymous said...
சாய்பாபா பக்தர்கள் என இரண்டு லூசுகளின் வலைபதிவில் சில தொடுப்புகளை பின்னூட்டமாகப் போட்டேன். அவர்கள் அதை அனுமதிக்கவே இல்லை. இதோ அந்த இணைப்புகள். இவற்றில் அவர் ஏமாற்று மாஜிக் வேலைகள் செய்யும் வீடியோக்களை ஸ்லோ மோஷனில் பார்க்கலாம்.
http://home.hetnet.nl/~ex-baba/engels/movies.html
http://www.exbaba.com/
http://www.sokaren.se/INDEX135.HTML
http://home.hetnet.nl/~ex-baba/engels/witnesses.html
http://www.indian-skeptic.org/html/video.htm
9/19/2006 12:44:05 AM//
சுட்டிகளுக்கு நன்றி அனானி நண்பரே
//குறும்பன் said...
அவரு கைக்குட்டையிலிருந்து லிங்கம் எடுத்தாலும் வாயிலிருந்து வந்ததாக தான் நாங்கள் நம்புவோம்.
ஜெய் ஜெய் சாய்ராம்.//
நல்ல பக்தன் ஜெய் ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சாய்ராம்
//பொன்ஸ் said...
திரு,
இவ்வளவு தானா? இதுக்கேவா ஏமாந்துகிட்டிருக்காங்க நம்ம மக்கள்?
அடப் பாவி!//
பொன்ஸ் இது மட்டுமா? இன்னும் நிறைய ஜகஜால கில்லாடி வேலைகள் தான் சாயிபாபா! அது பற்றி விளக்கமாக பதிவு இட வேலைப்பளு இன்னும் சில வாரங்களுக்கு இடம் தரவில்லை. சில வாரங்களில் இந்த வாலும் கடவுளின் வேலை பற்றி பிறகு பதிவு இடுகிறேன்.
//சீக்கிரம் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு லிங்கம் மட்டுமில்லாம வெரைட்டியா, கும்பிட வரும் ஆட்களின், சட்டை புடவை கலருக்குப் பொருத்தமா கடவுள் டாலர், பாசி மணி, பேனான்னு எடுத்துக் கொடுத்தா இன்னும் நல்லா ஜாலியா இருக்கும்ல?!// நானும் ஒரு சிஸ்யன் ஆகலாமான்னு யோசிக்கிறேன் :) பிரதமர், குடியரசு தலைவர் வந்தா கணினி, விமானம், கப்பல், ராக்கட் என பல சங்கதிகளை எடுத்து கொடுக்கலாம். :)
//சதயம் said...
சரி விடுங்க, "NO BODY IS PERFECT...EVEN THE GOD".இருப்பது ஒரு வாழ்க்கை...அதை குறை நிறைகளோடு நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதே நம்ம கொள்கை.//
நல்ல கொள்கை. மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து மோசடி செய்து பணம், புகழ், அதிகாரன் அனைத்தும் சேர்ப்பவனை யாரும் குறை சொல்லாம ஏத்துக்கணும் இல்லீங்களா?
//இந்த மாதிரி நிறைய வீடியோக்களை நானும் ஆராய்ந்திருக்கிறேன்..அட மெய்யாலுமே கைக்குட்டைக்குள்ள இருந்துதான் எடுக்கிறார்ன்னு முடிவுக்கும் வந்திருக்கிறேன்.//
அப்போ இது மாஜிக் தானே? அதை சாய்பாபாவும் அவரது பக்தர்களும் ஒத்துக்கொள்வதில்லையே ஏன்?
//Anonymous said...
அட நீங்க வேறே...
இதெல்லாம் இப்படி ப்ரூவ் பண்ணாமட்டும்
நாங்க என்னா திருந்திடவா போறோம்.//
திருந்தக்கூடாதுன்னு தானே இந்த மாயாஜாலமெல்லாம் நம்மை மயக்கி வைக்க தேவைப்படுகிறது!
//வணக்கத்துடன் said...
அய்யா,
இவர் மாதிரி இல்லாம, பிரேமானந்தா சாமி நெசமாவே வாய் வழியா லிங்கம் எடுப்பார் - இரத்த கக்கலுடன் என கேள்வி பட்டுள்ளேன்!//
சாயிபாபாவின் நகல் பிரேமானந்தா. பாபவுக்கு இந்திய அரசு அடிமை...
//Hariharan said...
இது ஏமாற்று வேலை எனும் கோணத்தை விட தினசரியாக மன அழுத்தங்களில் நிம்மதி இன்றி அலையும் சாமான்யர்களுக்கு எல்கேஜி குழந்தைகள் மாதிரி பெரும் நம்பிக்கையோடு பெரும் கூட்டமாய் வரும் சாமான்யர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகத் தெரிந்தே செய்யப்படும் விளையாட்டே இம்மாதிரி லிங்கம் கக்குவது, காற்றிலிருந்து பூ வரவழைப்பது, திருநீறு வரவழைத்துத் தருவது என்பது.//
மாயாஜால காட்சிகள் ஆன்மீகத்திற்கு அவசியமென்றால் அது மாயையா? மக்களை மாய உலகத்தில் பொய்யாக வைப்பதா ஆன்மீகம்?
//மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. சலனமுற்று கோபதாபங்கள் போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்பப்பட வைப்பது அமைதியற்ற மனமே ஆகும்.// அப்படிப்பட்ட மனதை வித்தைகள் காட்டி ஏமாற்றுவது மோசடி தானே?
//உண்மையான மகிழ்ச்சி என்பது சலனமற்ற மனம் பெற்றிருப்பதே ஆகும். True happiness is measured by the tranquility of mind.//
ஏற்கிறேன். அதற்கும் பாபாவின் மாயாஜாலத்திற்கும் என்ன தொடர்பு?
//இந்நிகழ்வு அறிவியல் விஞ்ஞானிகளுக்காக நடத்தப்படுவது இல்லை. மன அமைதியுற்று அல்லல் படும் சாமன்யர்களுக்கு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மன உளைச்சலில் இருப்போர்க்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக.
மன அமைதி குன்றியவன் பி.எச்.டி ஆய்வுப்பட்டம் படித்திருந்தாலும் he loses his discriminating intellect properly functioning. அவனுக்கு அவசியம் மீள முடியும் எனும் நம்பிக்கையே. இது அம்மாதிரியான உளவியல் செயல்.
இந்நிகழ்வை நடத்தும் நபருக்கும் தான் செய்வது என்ன என்பது தெரியும். அதன் நோக்கமும் எவரையும் ஏமாற்றுவது அல்ல.//
அவர் கடவுளல்ல என்பதை ஒத்துக்கொள்ளட்டுமே! அவரது வித்தைகளா ஆன்மீகம்?
//சென்னைக்கு தண்ணீர் வர எல் அண்ட் டி நிறுவனத்தை வைத்து கிருஷ்ணா நதி நீர் கண்டலேறுவிலிருந்து சேதமின்றி வந்து சேர கான்க்ரீட் கால்வாய்க்கு எந்த ஆரவாரமும் இன்றி 200கோடியில் இதே சாய்பாபா செய்ததற்கு திராவிடக் கொழுந்துகள் நன்றிகூட தெரிவித்ததாக நினைவில்லை.// யாருடய பணம் அது? மக்களை ஏமாற்றி சேர்த்த பணம் தானே!
//என்ன செய்ய எனக்கு மாலை போடாதே ஆனால் அந்தக் காசைக் கையில் குடு என்ற ஈ.வெ.ராவைக் கொண்டாடத் தெரிந்த திராவிட அரசுகள், திராவிடக் கொழுந்துகளுக்கு சாய்பாபா 200 கோடிக்கு சென்னையின் பிரதானமான ஒரு குடிதண்ணீர் திட்டத்தை கைக்காசைப் போட்டு செய்து தந்தாலும் நன்றி சொல்லாமல் பார்ப்பனக் கூட்டம் என்று சொல்லச் சொல்வதைத்தானே அரசியல் திரா'விட'ப் பெத்தடின் 40ஆண்டுகளில் சாதித்திருக்கிறது.
நான் சாய்பாபா பக்தனில்லை. அன்புடன், ஹரிஹரன்//
ஹரிஹரன், தனது சொந்த பணத்தை, சொத்தை எல்லாம் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்க பார்ப்பனீயத்தை எதிர்க்க பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தியவர் அறிவுமேதை பெரியார். தனது சொந்த பணமாக இருந்தும் கூட 3ம் வகுப்பு ரயிலில் பயணம் செய்தவர் பெரியார். அவர் எங்கே?
தானே கடவுள் என ஏமாற்றி பொருள், செல்வம், புகழ், அதிகாரத்தை சேர்க்கிற சாயிபாபா எங்கே?
//சதயம் said...
என்னை சாய்பாபாவின் பக்தன் என சொல்லிக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை....//
நல்லது அது உங்களது நம்பிக்கை!
//Anonymous said...
அன்பின் ஹரிஹரன்,
திராவிட குஞ்சுகள் தீ விட்டு எரிவதால் புட்டபர்த்தி dude செய்வது நியாயமாகாது. அவர் ஓரு பவர் புரோக்கர். இந்து மதம் என்று எதற்கு நீங்கள் கொடி பிடிக்கிறிர்களோ அதைதான் இவர்கள் அறுவடை செய்து தவறுகள் வெளியே தெரியாமல் இருக்க பிச்சை காசுகளும் இரைக்கிறார்கள். திரு இப்பதிவில் இட்டது ஒரு சிறு வீடியோவே. இவரை பற்றிய ஏராளமான தகவல்கள் வலைத்தளமெங்கும் உண்டு.//
நன்றி அனானி!
ஹரிஹரன்,
இரண்டு தளங்களில் உரையாடுகிறோம்
1) ஊழல் செய்வது. திருடுவது,
2) மதங்களை பயன்படுத்தி அறியாமை வளர்ப்பது
முதலில் சொன்ன விடயம் திராவிடம், ஆரியம், இறைபக்தி, பெரியார் பக்தி, பக்தியே இல்லாதவன் என்று எல்லா நிலைகளிலும் பரவியிருப்பது. கையில் கிடைக்கும் எதிலும் காசு பார்ப்பது என்ற எண்ணத்தின் அடிப்படையில் வருவது. தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்ற தளத்தில் இதை பார்க்க வேண்டும். இதை செப்பனிடுதல் மிக கடினம். மக்களின் அடிப்படை மனோபாவம் மாற வேண்டும். அவன் செய்கிறான், நான் செய்கிறேன் என்ற குருட்டு பழக்கவழக்கம் நிற்க வேண்டும். தன் அளவில் தான் சரியாக இருக்க அடுத்தவனை அளவுகோலாய் பிடிக்காமல் இருக்க தெரிய வேண்டும். குறைகள் குறைக்கப்பட்ட சட்ட ஒழுங்கு அமைப்புகளும், மக்களுக்கு அடிப்படை அரசியலைப்பு சட்ட அறிவும் அதை மதித்து நடக்க வேண்டிய உணர்வும் வருங்கால் இது நடக்கும்.
இரண்டாவது விஷயம் சாய்பாபா போன்றவர்கள் செய்வது. சட்டம் வித்தைகள் காட்டுவதை அனுமதிக்கிறது. திரைப்படங்கள், மந்திரவாதிகள,குரங்காட்டிகள் எல்லாருக்கும் அவர்கள் வித்தைகளை மக்களுக்கு காட்டி பணம் சம்பாதிக்கும் உரிமை உண்டு. அவர்கள் வரிகளை ஒழுங்காக செலுத்தி அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயலாற்றும் போது சட்டப்படி குறை சொல்ல ஏதுமில்லை. மந்திரவாதிகள் மதங்களை பயன்படுத்துதல் மனசாட்சியின் படி தவறு.
உணர்வு பூர்வமான சில தேவைகளை மதங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த சாமியார் கூட்டம் அதை தன் தேவைக்கேற்ப திரித்து மதங்களை கொச்சைபடுத்துகின்றனர். சித்து வேலைகள் செய்து நான் உன்னை விட பெரியவன் என்று பார்ப்பவரிடம் ஆண்டவனாகவும், ஆண்டவனினுக்கு அடுத்தப் படியாகவும் தங்களை நிறுவுகின்றனர். நிறுவப்பட்டதிற்கு அடுத்த நிலை சிந்தனைகளும் அந்த சித்து வேலை கோட்பாடுகளை கண்ட பரவசத்திலும் நம்பிக்கையிலும் முன் நகர்கின்றன.
அடித்தளமே அறியாமையாக உள்ள சமூகம் உருவாக இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அறியாமை மேல் எழும்பும் கோட்டை கொத்தளங்களும் மூடநம்பிக்கைகளை பிரமாண்ட படுத்தி மூளை சலவை செய்யப்பட்ட ஆட்டு மந்தை சமூதாயத்தையே வேண்டுகின்றன. இந்த கண்மூடி மனோபாவம் நின்று விட கூடாதேன்பதற்காக பஜன்களும் பாட்டுகளும் கொண்டு வரப்படுகின்றன். இடைவிடாது சொல்லும் போது ஆவேசம் உடலில் பற்ற குழப்பம் தீருவதாக நினைக்கும் இடத்திற்கு மக்கள் போகிறார்கள். அந்த இடத்தின் சுகம் மேலும் மேலும் சுழலில் அவர்களை வைத்திருக்கிறது. இந்த அமைப்பில் உள்ளே எப்படி போனாம் என தெரியாது ஆனால் வெளியே வர முடியாது
உண்மையில் மனிதனை உயர்த்தும் சிந்தனை உள்ள சாமியார் எவனுமிருந்தால் அவன் முதலில் ஏன் என்று கேள்வி கேட்கவே சொல்லி தரவேண்டும். கடவுளை தகிக்கும் நிலையில் தர வேண்டும். மற்றுமோரு போதை பொருளாக கடவுளை காட்டக் கூடாது. உண்மையான வழி மற்றும் நேர்மையான வழி கடினமானதாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துச் சென்று மக்களிடம் காட்டும் நேர்மையும், நிதானமும் அவர்களுக்கு ்வேண்டும். ஆண்டவனின் சித்து வேலை இந்த பிரபஞ்சமே இனி புதிதாய் காட்ட என்ன உள்ளதென கற்பிக்க வேண்டும். இறைவனை வணங்கு , என்னை வணங்காதே என்றும் கூறும் மனோதிடம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். கைகாட்டி மரம் ஊராக கூடாது. அதற்கு அந்த நினைப்பும் வர கூடாது. அது வெறும் கருவியே. மக்கள் தயாராகவில்லை இவ்வளவு பெரிய தத்துவங்கள் புரியாதென்றால் என்றால் இவன்தான் அந்த இடத்திற்கு கூட்டி செல்ல வேண்டும். அதை விடுத்து மக்கள் தேவைக்கு வேஷம் கட்டுகிறேன் என்றால், அப்புறம் வேஷம் காத்தலே இவன் வாழ்க்கையாகி விடும். இது சராசரி மனிதனான எனக்கு புரிகையில் எல்லாம் வல்லவனாக நினைத்துக் கொள்ளும் சாமியாருக்கு தெரியாதா?
எந்த கடவுளை மக்கள் வழிப்பட வேண்டும். யார் கடவுள் என்பதெல்லாம் என்னை பொருத்த வரை தனி மனித சுதந்திரம். அவர்கள் வழிப்பாட்டினால் அடுத்தவர் உரிமைகள் பாதிக்கப்பட்டாலோ, அரசியலைப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலில் அவர்கள் ஈடுபட்டாலோதான் அது பொதுப் பிரச்சனை. மதங்களின் பெயர் கெட இந்த மனிதர்கள் துணை போகிறார்களே என்ற என் தனிப்பட்ட ஆதங்கமே இந்த பதிப்பு. மற்றப்படி இப்படிதான் இருப்பேன் என யாரும் கூறினால் என்னால் சொல்ல முடிவது ஒரு ALL THE BEST
இப்போதைக்கு அனானியாக இருத்தலே வசதியாக இருக்கிறது. தவறாக எண்ண வேண்டாம்
அன்பின் அனானி,
எனது பார்வையில் சாய்பாபா, பங்காரு,ஜெயேந்திரர், அமிர்தானந்தமயி போன்றவர்கள் கடவுளின் அவதாரம் என்பதை விட அவர்கள் சிறந்த philontherapist என்றே நினைக்கிறேன்.
யார் நார் கடவுளின் அவதாரம் என்ற contextல் நாம் எல்லாருமே அவ்வகையே!
நம்முள்ளிருக்கும் அந்த கடவுள் தன்மையை பிரதிபலிப்பதில்தான் வேறுபாடுகள் !
அறிவுப் பூர்வமாக இந்துமத தத்துவங்களின் ஆழமான அர்தங்களை அறிவதற்கு நான் சார்ந்திருப்பது "சின்மயா மிஷன்"
சாய்பாபா பவர் புரோக்கர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் கடவுள் மறுப்பு நிறுவன பெரியார் மதத்தின் கி.வீரமணியின் செயல் பாடுகள் பாருங்கள் ஒரு தேர்தலுக்கு திமுக சார்பு, அடுத்த தேர்தலுக்கு அதிமுக சார்பு proving nothing but "idealogical Langurism"
அன்புடன்,
ஹரிஹரன்
அன்பின் அனானி,
//உண்மையில் மனிதனை உயர்த்தும் சிந்தனை உள்ள சாமியார் எவனுமிருந்தால் அவன் முதலில் ஏன் என்று கேள்வி கேட்கவே சொல்லி தரவேண்டும். கடவுளை தகிக்கும் நிலையில் தர வேண்டும்.//
அம்மாதிரி ரமணர் போன்ற குருக்களும் இருக்கின்றார்கள். காணும் எவரையும் குருவாக ஏற்றுக் கொள்ள இந்துமதம் கட்டாயப்படுத்த வில்லை.
குருவோடு அறிவார்ந்த மல்யுத்தம் intellectual wrestling நடத்த வேறெந்த சமயத்தையும் விட இந்து மதம் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது.
ஆட்டு மந்தை மனோபாவத்துடன் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் போது இயல்பாகவே சப்ளை/டிமாண்ட் வந்துவிட வாய்ப்பிருக்கிறது.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு மாலை நேரத்தில் தனிப்பட்ட முறையில் குறை கேட்டு நிவர்த்தி செய்வதும் இயலாமல் போகும்.
நம்பிக்கையோடு வருபவரை சாமான்யனை வராதே போ என்று துரத்திவிடவும் முடியாது.
பழநி பாதயாத்திரை , சபரிமலை பாதயாத்திரை என்று இருமுடி கட்டி நடந்து உண்டியலில் பணம் போட்டு தன் பிரச்சினையை பழநி மிருகனும் ஐயப்பனும் தீர்ப்பார்கள் என்று பாமரன் நம்புவதால் அவன் பிரச்சினை தீர்ந்து விடப்போகிறதா?
பழநி முருகன் தனது நவபாஷணச் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ப்ருஷ்டத்தை சுரண்டியே இளைக்க வைத்துவிட்டார்கள், சிலையின் காதை எம்ஜிஆர் சிகிச்சைக்கு துண்டித்து எடுத்துவிட்டார்கள் என்று ஒரளவுக்கு உண்மையான தகவல்களை பாதயாத்திரையாக வரும் பாமரனுக்குச் சொல்லி ஏற்கணவே நொந்து போயிருக்கும் அவன் கடைசி நம்பிக்கையாக கொண்டிருக்கும் இறைவனே சிரமப்படுகிறார் என்றுரைப்பது எந்த விதமான மன அமைதியை தந்துவிடாது.
சுயம் பற்றிய கான்ஷியஸ்னஸ் உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மாறுபடுகிறது அதற்கேற்பவே அவனது குழப்பங்களுக்கு மன அமைதி தேடும் முறைகளும், தேடுதலுக்கு தேர்வு செய்யும் குரு, வழிமுறை என்பதும்.
ஆன்மீகத்தின் உண்மையானது எங்கும் எல்லாமும் கடவுளே மந்திரம்,சடங்குகள் எல்லாம் ஒருநிலைக்குப் பின்பாக அவசியமற்றது என்பது தேடுதலின் போது தெரியவரும்.
தானாக தேடிக் கண்டுணரும் இதற்கும், கடவுளே இல்லை என்று விதண்டாவாதம் செய்வோரது மந்திரம்,சடங்குகள் பொய் என்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது.
தானாக முயன்று தன்னைஅறியும் தேடுதல் ஒரு கூட்டுப்புழு அதன் கூட்டினைச் சிரமப்பட்டு முயன்று கிழித்துக் கொண்டு பட்டுப்பூச்சியாக தானாக வெளிவருவதைப் போன்றது.
கடவுளே இல்லை, புனித நூல்கள் பொய் என்ற அறுத்தெறியும் பாங்கு கூட்டுப்புழுவுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு கூட்டைக்கிழித்து பட்டாம்பூச்சியை வெளியேற வைப்பதற்கு ஒப்பானது. கூட்டுப்புழுவின் இயற்கைக்கு மாறாக எளிதாக வெளிவந்தாலும் இறகைவிரித்துப் பட்டாம்பூச்சியாக பறக்க முடியாமல் மாண்டுபோகும்.
ரமணர் போன்றோர் பெருங்கூட்டமாக பக்தர்களைச் சந்தித்தில்லை... தேடுதலில் சுயமாய் சிந்திக்கும் அடுத்த கட்டத்திலிருப்பவராலேயே இம்மாதிரி குருவை அடையாலம் காண இயலும் அவரது போதனைகளும் அம்மாதிரி இருக்கும்.
வெகுஜனங்கள் திரளாக வரும்போது அங்கு தேடுதலுக்கு மிக அவசியமான கான்ஷியஸ்னஸ் சுத்திகரிக்கப்படாத கச்சாவாக என்ற அளவிலேயே இருக்கும். சாய்பாபா, பங்காரு போன்ற சமய இடங்கள் வெகுதியான ஆரம்பப்பள்ளிகள் மாதிரி, சின்மயாமிஷன், சங்கரமடம் மேல்நிலைப்பள்ளி மாதிரி, ரமணர் மாதிரியான குருக்களின் போதனைகள் பல்கலைக்கழகக் கல்வி மாதிரி ஸ்பெஷலைஸ்டு.
ஆரம்பப்பள்ளிகளில் சிலபஸே சறுக்கு மரம்,ஊஞ்சல் விளையாட்டு, ஸ்லீப்ப்ங்லைன்,ஸ்டாண்டிங் லைன் என்று எழுத்துக்களை உருவாக்கா கோடுகள், படம் பார்த்து , ரைம்ஸ் கேட்டு என கேளிக்கைதான் பாடமே. மேஜிக்கை வாய்பிளந்துதான் பார்ப்பார்கள் அவர்களது கெப்பாசிட்டி அவ்வளவுதான்.
எனக்கும் சாய்பாபாவின் லிங்க மேஜிக் சிரிப்பை வரவழைத்தது ஆனால் வெறுப்பைத் தரவில்லை.
சாய்பாபாவிடம் இந்திய அரசு அடிமை என்பதெல்லாம் டூ மச்சாக இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.
சாய்பாபாவின் முயற்சியில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நீர்வள மேம்பாடுப்பணிகள் போன்ற நல்ல விஷயங்களைப் பாராட்டுகிறேன்.
சாய்பாபாவை ஏமாற்றுக்காரராகப் பார்க்கும் பார்வைக் கோணம் சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.
பழுத்த மரம் கல்லடிபடும். இணையத்தில் அவர் பற்றி மோசமாக பிறரால் ஆதாரமின்றி எழுதப்படும் எழுத்துக்களால் பயனில்லை.
நல்லவைகளை நல்ல கோணத்தில் பார்க்கும் பாஸிட்டிவ் அப்ரோச்சினால் பாஸிட்டிவ் எனர்ஜி கிட்டும் என்ற அறிவியற்கூற்றுப்படி பார்வையை அமைத்துக்கொள்ளவே விருப்பம் எனக்கு.
அனானியாகவே நீங்கள் இருக்கத் தீர்மானித்தது எனக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற முடியாமல் போனது.
அன்புடன்,
ஹரிஹரன்
Endha news theriuma thiru ungaluku. Avarukku curly hair erupathala oru oru hairum looks like OMM nu soluranga pa(tamilzha,englisha,teluguva i dont know)ungaluku theriumanu solunga.
pavithra.
சாய் பாபாவுக்கு லிங்கம் பிடிக்கும் என்பது உலகறிந்தது. அது சரி, ஜெயேந்திரன் பிலாந்திரபிஸ்டா? கரிகரா கரிகரா! கண்ணிருந்தும் குருடராய் தன்னை ஏமாற்றிக் கொள்வதும் ஒரு கலை. கரிகரன் ஒரு உண்மையான கலைஞர்தான். அப்பீல் அப்பீல் என்ரு அளக்கிறார் ஒருவர். இட்லருக்கும் நரேந்திர மோடிக்கும் அத்வானிக்கும் கூடத்தான் அப்பீல் இருக்கிறதே? வாழ்வின் துயரங்களை, சவால்களை எதிர்கொள்ள அஞ்சி முதுகெலும்பில்லாமல் அல்லது வேறு வழியின்றி தங்கள் பலவீனத்தாலேயே இந்த மூடர்கள் சாமியார்களிடம் பலியாகிறார்கள். பலவீனமும் முட்டாள்தனமும் இந்த கலைக்குரிய தகுதிகள். சந்தேகம் இல்லாமல் இவர்கள் கலைஞர்கள்தான் கரிகரனைப் போல.
திரு இது ஹரிஹரனுக்கான நீண்ட பதில் தங்களுக்கு விருப்பமிருப்பின் பிரசுரிக்கவும். பொறுமையுடன் இவற்றை படித்து பிரசுரிப்பதற்கு நன்றி.
//அம்மாதிரி ரமணர் போன்ற குருக்களும் இருக்கின்றார்கள். காணும் எவரையும் குருவாக ஏற்றுக் கொள்ள இந்துமதம் கட்டாயப்படுத்த வில்லை.
குருவோடு அறிவார்ந்த மல்யுத்தம் intellectual wrestling நடத்த வேறெந்த சமயத்தையும் விட இந்து மதம் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது.//
எனக்கு கடவுள் என்ற உருவகங்கள் மீது நம்பிக்கையில்லை. கடவுள் என்று ஓருவர் இருப்பின் அவர்தான் எல்லாவற்றின் இருப்பிற்கும், இல்லாமைக்கும் காரணமாவார். அப்படிபட்டவருக்கு என்னுடைய அங்கீகாரம் தேவை இல்லை. அவருக்கும் எதிர்பார்பென்று ஒன்றும் இருக்க இயலாது. குரு, சீடன் என்ற ஆன்மீக தேடல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சுனாமி நேரத்தின் உதவியிலும், குஜராத் பூகம்பத்தின் உதவியிலும், மேலவளவுர் போராட்டத்திலும் , காவல் துறையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக அடைக்கலம் கொடுத்து ஆண்டுகள் பல போராடிய மனிதரிடத்திலும் ,யாரோ ஒரு பெண்ணின் கல்வி தேவைக்காக அங்குமிங்கும் அலைந்து நேரம் செலவிட்டு செய்ய முன் வரும் நல்ல உள்ளங்களிலும் உண்மையும், சத்தியமும் உண்டு.தன் தேவைகள் ஆயிரமிருக்க பிறருக்காக அதை மறந்து ஒருவர் முன் வருகையில் உண்மையான ஞான தேடல்கள் நிகழ்வதாக நினைக்கிறேன். சக மனிதனுக்கு மரியாதை செலுத்ததிலும்,சுயமரியாதைக்கு பங்கம் வராமல் காப்பதிலும் , அடுத்தவர் கண்டு பொறாமை படாத நேரத்திலும் ,அவருக்கு கேடு செய்யாமல் இருக்கும் குணத்திலும் ஞான தேடல்கள் உண்டு.
//ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு மாலை நேரத்தில் தனிப்பட்ட முறையில் குறை கேட்டு நிவர்த்தி செய்வதும் இயலாமல் போகும்.
நம்பிக்கையோடு வருபவரை சாமான்யனை வராதே போ என்று துரத்திவிடவும் முடியாது.
பழநி பாதயாத்திரை , சபரிமலை பாதயாத்திரை என்று இருமுடி கட்டி நடந்து உண்டியலில் பணம் போட்டு தன் பிரச்சினையை பழநி மிருகனும் ஐயப்பனும் தீர்ப்பார்கள் என்று பாமரன் நம்புவதால் அவன் பிரச்சினை தீர்ந்து விடப்போகிறதா?
பழநி முருகன் தனது நவபாஷணச் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ப்ருஷ்டத்தை சுரண்டியே இளைக்க வைத்துவிட்டார்கள், சிலையின் காதை எம்ஜிஆர் சிகிச்சைக்கு துண்டித்து எடுத்துவிட்டார்கள் என்று ஒரளவுக்கு உண்மையான தகவல்களை பாதயாத்திரையாக வரும் பாமரனுக்குச் சொல்லி ஏற்கணவே நொந்து போயிருக்கும் அவன் கடைசி நம்பிக்கையாக கொண்டிருக்கும் இறைவனே சிரமப்படுகிறார் என்றுரைப்பது எந்த விதமான மன அமைதியை தந்துவிடாது.//
மனரீதியான பிரச்சனைகளுக்கு மன நல மருத்துவர் அனுகும் முறையில் அனுகினால் போதாதா? எனக்கு பாதாபிஷேகம் செய், பஜனைகள் பாடு , இடை விடாது என்னை புகழ்ந்து கொண்டிரு என்று கூறுவதல் சோகமாயிருப்பின் கொஞ்சம் போதை பொருள் எடுத்துக் கொள், சாப்பிடு சோகம் போகும் என்று கூறுதற்கு ஒப்பாகும். ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் எல்லா பழக்க வழக்கங்களையும் கண்டிக்க வேண்டியதுதான். அவர்கள் கேட்க மாட்டார்கள், சொல்லி என்ன செய்வது என்றால் இது போன்றவை தவறு என்பதே தெரியாமல் போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொண்டே இருந்தால் அவர்கள இன்னும் நூறு ஆண்டுகளிலாவது கொஞ்சம் மாறலாம். சொல்லாமலே விட்டு விடுவது அந்த சிறு மாற்றத்தையும் தள்ளி போடும். போதை பொருள் உபயோகமே அதிகரிக்கும்.
//தானாக முயன்று தன்னைஅறியும் தேடுதல் ஒரு கூட்டுப்புழு அதன் கூட்டினைச் சிரமப்பட்டு முயன்று கிழித்துக் கொண்டு பட்டுப்பூச்சியாக தானாக வெளிவருவதைப் போன்றது.
கடவுளே இல்லை, புனித நூல்கள் பொய் என்ற அறுத்தெறியும் பாங்கு கூட்டுப்புழுவுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு கூட்டைக்கிழித்து பட்டாம்பூச்சியை வெளியேற வைப்பதற்கு ஒப்பானது. கூட்டுப்புழுவின் இயற்கைக்கு மாறாக எளிதாக வெளிவந்தாலும் இறகைவிரித்துப் பட்டாம்பூச்சியாக பறக்க முடியாமல் மாண்டுபோகும்.
ரமணர் போன்றோர் பெருங்கூட்டமாக பக்தர்களைச் சந்தித்தில்லை... தேடுதலில் சுயமாய் சிந்திக்கும் அடுத்த கட்டத்திலிருப்பவராலேயே இம்மாதிரி குருவை அடையாலம் காண இயலும் அவரது போதனைகளும் அம்மாதிரி இருக்கும்.வெகுஜனங்கள் திரளாக வரும்போது அங்கு தேடுதலுக்கு மிக அவசியமான கான்ஷியஸ்னஸ் சுத்திகரிக்கப்படாத கச்சாவாக என்ற அளவிலேயே இருக்கும். சாய்பாபா, பங்காரு போன்ற சமய இடங்கள் வெகுதியான ஆரம்பப்பள்ளிகள் மாதிரி, சின்மயாமிஷன், சங்கரமடம் மேல்நிலைப்பள்ளி மாதிரி, ரமணர் மாதிரியான குருக்களின் போதனைகள் பல்கலைக்கழகக் கல்வி மாதிரி ஸ்பெஷலைஸ்டு. ஆரம்பப்பள்ளிகளில் சிலபஸே சறுக்கு மரம்,ஊஞ்சல் விளையாட்டு, ஸ்லீப்ப்ங்லைன்,ஸ்டாண்டிங் லைன் என்று எழுத்துக்களை உருவாக்கா கோடுகள், படம் பார்த்து , ரைம்ஸ் கேட்டு என கேளிக்கைதான் பாடமே. மேஜிக்கை வாய்பிளந்துதான் பார்ப்பார்கள் அவர்களது கெப்பாசிட்டி அவ்வளவுதான்.//
அறியாமை என்பதை நீங்கள் கூட்டு புழுக்களுடன் ஒப்பிடுகிறீர்கள். கூட்டுப்புழுவுக்கு பட்டாம் பூச்சியாய் பரிணாம வளர்ச்சி உண்டு. ஆனால் சாமியார் கூட்டம் அறிவின் பரிணாம வளர்ச்சிக்கா வழிக்காட்டுகிறது. இடை விடாது துதி என்ற மனாபாவத்தையல்லவா ஊக்குவிக்கிறது. சாமியார் கூட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் சாகும் போதும் அந்த சாமியார் பெயரைதான் சொல்லி சாகிறார்கள், சாவது உன் கர்மாதான் என்று முடித்து விடுகிறார்கள்.
அறியாமை என்பது நோய். அதற்கு மருந்தளித்தலே முறை. மருந்து கசக்கும், நோய்க்கு பழகிக் கொள். நான் கிலுகிலுப்பை போல் மாய வித்தைகள் காட்டுகிறேன் பார்த்து சந்தோஷம் கொள் என்று சொல்லுவதா அதன் தீர்வு. மருந்து கசப்பினும் அருந்து அறிவை வளர்க்கும் என்றல்லவா சொல்ல வேண்டும்.
//எனக்கும் சாய்பாபாவின் லிங்க மேஜிக் சிரிப்பை வரவழைத்தது ஆனால் வெறுப்பைத் தரவில்லை.//
எனக்கும் சாய்பாபா மேலேல்லாம் கோபமில்லை. அவருக்கு அது தொழில். அவர் ஒரு பொருளை விற்கிறார். அதை லிங்கமெடுத்து, வீபுதிகள் கொட்டி அலங்கரித்து செய்கிறார். முதலீடு அலங்காரமான பேச்சுகளும், அடுத்தவர் பலவீனமும்,லிங்கமும்தான். ஆனால் கிடைப்பதை பாருங்கள். ஆடம்பர வாழ்க்கை. விரல் நுனி அதிகாரம். காலில் விழுந்து கதறும் பக்தர் கூட்டம்.
துப்பினால் கூட தீர்த்தமாகும் செல்வாக்கு.அவருக்கு ஆதாயம் நிறைய உண்டு. எனக்கு தெரிந்து அவர் புத்திசாலி, பகுத்தறிவு உள்ளவர். அதனால் சந்தையின் மனநிலை அறிந்து இத்தனை வருடங்கள் ஆட்டி வைத்து தரங்குறைந்த பொருள் விற்க முடிகிறது. அவருடைய வாடிக்கையாளர் மீதே இரக்கமும் , வருத்தமும். வாங்கும் பொருள் போதை தருவது, அது தரமே இல்லாதது என்ற உண்மை அவர்களுக்கு தெரியவில்லை. தரமான பொருள் சந்தைக்கு வர வேண்டுமெனபதே என் அவா.
//சாய்பாபாவின் முயற்சியில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நீர்வள மேம்பாடுப்பணிகள் போன்ற நல்ல விஷயங்களைப் பாராட்டுகிறேன்.//
மத அமைப்புகள் பெருமளவில் நிதி உதவி பெற்று அதன் எல்லைகளை விரிக்கின்றன. அதிகமாக பணம் புரளும் எந்த இடத்திலும் வரி சலுகை வேண்டியும், விளம்பரம் வேண்டியும் ஒரு சில காரியங்கள் செய்யப் படுகின்றன. அந்த உதவிகளில் எதிர்பார்ப்புகள் உண்டு. இவற்றை இவர்கள் செய்யாமல் போனால் ஏன் இவர்கள் ஒன்றுமே செய்யவவில்லை என்ற கேளவியும் வரும். சந்தை பொருளாதாரத்தில் விளம்பரங்கள் அவசியம், புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், பழைய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் இவை உதவும். ஆனால் இது போன்ற உதவிகள் சமூகத்தில் அறியாமை நோயை விரிவாக்கவே பயன் படுத்தப் படுகின்றன. நல்ல தரமான அரசும், அரசியலமைப்பும் இல்லாமல் போகும் நேரத்தில் இது போன்ற விளம்பர பிரியர்கள் அதிகம் முன்னிலை படுத்த படுகிறார்கள்.
//பழுத்த மரம் கல்லடிபடும். இணையத்தில் அவர் பற்றி மோசமாக பிறரால் ஆதாரமின்றி எழுதப்படும் எழுத்துக்களால் பயனில்லை. நல்லவைகளை நல்ல கோணத்தில் பார்க்கும் பாஸிட்டிவ் அப்ரோச்சினால் பாஸிட்டிவ் எனர்ஜி கிட்டும் என்ற அறிவியற்கூற்றுப்படி பார்வையை அமைத்துக்கொள்ளவே விருப்பம் எனக்கு.//
மக்களின் அறியாமையையும், பலவீனத்தையும் , அடித்தளமாக கொண்டு அதை வளர்க்கும் விதங்களில் செயல்படும் எந்த அமைப்பும்( கடவுள் மறுப்பு, கடவுள் காப்பு) நிராகரிக்க பட வேண்டியதே. பாஸிட்டிவ் அப்ரோச் என்ற போர்வை கொண்டு இவற்றின் செயல்களை நியாப்படுத்துதல் கண்களை மூடிக் கொள்கிறேன் உலகம் இருண்டு விட்டது என்று கூறுதற்கு ஒப்பாகும். ஒரு விதமான நெகடிவ் அப்ரோச்.
You are right.
Any one can have appeal.
Dr kalaignar has. Puratchi Thalaivi has.
Quota Dr Ramadoss has.
Periyaar had.
Vijaykanth has.
Rajani kanth has.
By the way by calling Hariharan as karikaran you are also craving for appeal I suppose.
regards,
Sridhar
rs2803@rediffmail.com
//எனக்கு கடவுள் என்ற உருவகங்கள் மீது நம்பிக்கையில்லை. கடவுள் என்று ஓருவர் இருப்பின் அவர்தான் எல்லாவற்றின் இருப்பிற்கும், இல்லாமைக்கும் காரணமாவார். அப்படிபட்டவருக்கு என்னுடைய அங்கீகாரம் தேவை இல்லை. அவருக்கும் எதிர்பார்பென்று ஒன்றும் இருக்க இயலாது. குரு, சீடன் என்ற ஆன்மீக தேடல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. //
குரு சீடன் ஆன்மீகம் இவைகளின் மீதான நம்பிக்கையின்மை-தங்களது நம்பிக்கை. வாழ்வைச் செலுத்த அடிப்படையாக எதிலாவது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.
//சுனாமி நேரத்தின் உதவியிலும், குஜராத் பூகம்பத்தின் உதவியிலும், மேலவளவுர் போராட்டத்திலும் , காவல் துறையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக அடைக்கலம் கொடுத்து ஆண்டுகள் பல போராடிய மனிதரிடத்திலும் ,யாரோ ஒரு பெண்ணின் கல்வி தேவைக்காக அங்குமிங்கும் அலைந்து நேரம் செலவிட்டு செய்ய முன் வரும் நல்ல உள்ளங்களிலும் உண்மையும், சத்தியமும் உண்டு.தன் தேவைகள் ஆயிரமிருக்க பிறருக்காக அதை மறந்து ஒருவர் முன் வருகையில் உண்மையான ஞான தேடல்கள் நிகழ்வதாக நினைக்கிறேன்.//
இயல்பிலேயே இச்செயல்களில் ஈடுபடுவோர்க்கு "கான்ஷியஸ்னஸ்" வெகுஜனத்தினை விட பல மடங்கு சுத்திகரிக்கப்பட்ட நிலையில் காணப்படும்.
ஆன்மீக வழிகளில் "கர்ம யோக"த்தில் தீவிரமாக இருப்பவர்கள், இவர்களது பக்தி சகமனிதனின் மெட்டீரியல் தேவைகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது.
இதர ஆன்மீக வழிகளான "பக்தி யோகம்" தன்னுள் பெருக்கெடுக்கும் தான் என்ற அகம்பாவம் ஈகோ குறைத்து / தவிர்த்து மென்மையான மனமுடையவனாக மனிதனை மாற்ற துதிகள், பஜனைகள் என்று வழிகாட்டும்.
தாங்கள் சுட்டிய மேலவளவு கொடூரம், காவல்நிலையக் கற்பழிப்புக் கொடூரம், பொருளிருந்தும் கல்விக்கு ஏழை எளியோர்க்கு உதவாமை இவை யாவும் தனிமனித மனத்தின் கடுமையான அகங்காரத்தின் கடுமையான வக்கிர வெளிப்பாடுகளே!
நீங்கள் பாதிக்கப்பட்டோர்க்கு உதவியவர்களைப் மட்டும் பார்க்கின்றீர்கள். இம்மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும் கடின நபர்களின் மனங்கள் சக மனிதர்களாலும் மனித சட்டங்களாலும் மட்டுமே திருத்தப்பட்டுவிட முடியாத அளவுக்கு கடினமானவை. தன்னை மிஞ்சிய தன்னை தண்டிக்கும் அதிகாரம் படைத்த சர்வ சக்தி உண்டு என்ற எண்ணம் ஏற்படுத்தும் பயம் காரணமாக மாற்றம் கொஞ்ச கொஞ்சமாக ஏற்படுத்த முடியும்.
//சக மனிதனுக்கு மரியாதை செலுத்ததிலும்,சுயமரியாதைக்கு பங்கம் வராமல் காப்பதிலும் , அடுத்தவர் கண்டு பொறாமை படாத நேரத்திலும் ,அவருக்கு கேடு செய்யாமல் இருக்கும் குணத்திலும் ஞான தேடல்கள் உண்டு.//
ஆன்மீகத்தின் அடுத்த பகுதியான "ஞானயோகம்" இருக்கும் எல்லாமும் இறையே என்ற மெய்ஞானத்தினை போதிக்கும் நம் இந்தியப் பாரம்பர்ய வணக்கத்தின் போது இரு கை கூப்பி வணக்கம் சொல்வது பெயர் தாங்கி நிற்கும் உடலை அல்ல, உனது உடலினுள் உள் உறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.
பெரியவர் , சிறியவர், ஏழை, பணக்காரன், படித்தவன் படிக்காதவன் என எவர் இரு கை கூப்பி நமஸ்கரித்தாலும் பதிலுக்கு நாமும் இருகை கூப்பி நமஸ்கரிப்பது எல்லாம் இறையே என்பதாலேயே.
//எனக்கு பாதாபிஷேகம் செய், பஜனைகள் பாடு , இடை விடாது என்னை புகழ்ந்து கொண்டிரு என்று கூறுவதல் சோகமாயிருப்பின் கொஞ்சம் போதை பொருள் எடுத்துக் கொள், சாப்பிடு சோகம் போகும் என்று கூறுதற்கு ஒப்பாகும். ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் எல்லா பழக்க வழக்கங்களையும் கண்டிக்க வேண்டியதுதான்.//
தனி மனிதன் தன் மன அகங்காரம் ஈகோ விடொழிப்பது தான் இங்கே பிரதானம். பஜனை, துதிகளின் அர்த்தம் மனம் அதன் ஈகோவினின்று தன்னை விடுவித்துக் கொள்தலே. இறையிடம் சரணடைவதே. எல்லோருமே கடவுள் தான். ஆனால் அந்தக் கடவுள் தன்மையை எல்லோரும் பிரதிபலிப்பதில்லை. ஈகோ, காமம், ஆசை நம்மில் கடவுள்தன்மையை அது இருப்பதைக்கூட அறிய விடுவதில்லை.
உலகில் பெரும்பாலோர் பக்தி யோகத்தில் இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.
ஒருசிலர் கர்ம யோகத்தில் தன்னைத் தாண்டி அடுத்தவர் துயர் துடைக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுகிறார்கள்.
அடுத்த சிலர் ஏன், அது எதற்கு என்று தன் சந்தேகத்திற்கு விடை தேடும் ஞான யோகத்தில் இருக்கிறார்கள்.
உண்மையில் எல்லோருமே இந்த பக்தி, கர்ம, ஞான யோக வழியில்தான் இருக்கிறார்கள்.
இதில் தங்களது Body,Mind,Intellect-textureஐப் பொருத்து தங்களுக்குள்ளும் தங்கள் செயல்பாடுகள் வழி வெளியேயும் இந்த பக்தி,கர்ம,ஞானயோக வழியிலான தங்கள் நடத்தல் வெளிப்படும்.
//ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் எல்லா பழக்க வழக்கங்களையும் கண்டிக்க வேண்டியதுதான்.//
இன்று நடைமுறையில் வெகுதியாக பக்தி என்று இது எனக்குத் தந்தால் முருகா உனக்கு அலகு குத்தி, மொட்டையடித்து, காவடி எடுத்து, பாதயாத்திரையாக , அங்கப்பிரதட்சண்மாக என் கணவரை வரச்சொல்கிறேன் என்று சொல்வது ஒரு காண்டிராக்ட் மாதிரியானது. வெறும் நம்பிக்கை. மனோபாவம் இங்கு வேறு! உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடனான பக்தியின்போது மேற்சொன்ன நேர்த்திக்கடன்களின் தாத்பர்யம் அர்த்தம் வேறு!
தங்களது ஆட்சேபங்கள், கண்டனங்கள் குறைந்தபட்சம் ஆட்டுமந்தைபோல் என்ன செய்கிறோம் என்று அறியாமல் கூட்டமாக கூடிச்செய்யும் Herd Mentality மாற்றிச் செய்வதன் உள்ளர்த்தம் உணரவாவது உதவட்டும்.
அன்புடன்,
ஹரிஹரன்
கரிகரன் ஐயா, நீங்கள் சொல்லும் மந்தை மனப்பாங்கு உங்களை விட சிறப்பாக வேறு யாருக்கும் பொருந்தாது. கேள்விகள் கேட்பது முக்கியம். எதையும் கேள்வி கேட்கவேண்டும். கேள்விகள் கேட்காதவர்கள் சாமியார்களிடம் ஏமாறுவார்கள். அட அது கூட ஒரு விதத்தில் பரவாயில்லை. ஆயிரக்கணக்கான மத வெறியர்களுடன் சேர்ந்துகொண்டு வேறொரு மதத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று போடும் அளவிற்கு உங்கள் மந்தை மனப்பாங்கு மாறும்போது தான் பிரச்சனை ஆகிறது. மற்றபடி நீங்கள் சொல்பவை ராமகிருஷ்ண விஜயத்திலும் ஞானபூமியிலும் விஜயபாரதத்திலும் ஆர்கனைசரிலும் படித்த காமெடிகள்தான். ஜெய் சிரிராம் ஜெய் சாய்ராம்!!!
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com