Friday, November 10, 2006

ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம், வலைப்பதிவாளர்கள் இன்ன பிற...

இந்திய சமூகத்தின் சாதிக்கொடுமைகள் பற்றிய அவலங்களை எழுதுகிற வேளைகளில் எல்லாம் நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? இதில் நீ உனது வாழ்வை வளப்படுத்துகிறாயா? இந்த நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தலாமே? என பல அறிவுரைகள் வருகின்றன. இவ்வளவு சமூக அக்கறையில் வலைப்பதிவில் கேள்விகள் கேட்கிறார்களே என மனம் சிலிர்க்கிறது.

இந்த வலையுலக பிரம்மாக்களின் (அவர் தானே சாதி வர்ண முறையை உருவாக்கியவர்) கேள்விகளை ஒரு முறைக்கு மறுமுறை படித்து சிந்தித்ததில் கிடைத்தவை இங்கே.

மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியை சார்ந்த ஆட்களின் கலவரத்தையும் அந்த பீதியில் குடும்பங்கள் சின்னாபின்னமாக சிதறியதையும் சிறுவயதில் என் கண்முன் கண்டிருக்கிறேன். அந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பலவற்றின் உயிர் எங்கள் வீட்டில் தஞ்சமடைந்திருந்தது. இருட்டில் தூரத்தில் டார்ச் வெளிச்சம் வரும் போதே அது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களா இல்லை அவர்களின் கைக்கூலியாக செயல்பட்ட காவலர்களா என பதட்டமடைந்த நாட்கள் அவை. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள தூண்டிய துயரமான நிகழ்வுகள் அவை. இவ்வளவு கலவரங்களையும் தலைமையேற்று நடத்தியதில் ஒருவரான இந்து முன்னணியை சார்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் பகல் வேளைகளில் எங்களுடன் கலந்துரையாடும் போது காட்டிய அடக்கம், பண்பு என்னை இன்றும் வியக்க வைக்கிறது. அதிர்ந்து பேசமாட்டார். இவரா இப்படிப்பட்ட கலவரங்களின் நாயகர்களில் ஒருவர் என வியந்திருக்கிறேன். களத்தில் கண்முன் கண்ட நிகழ்வுகளும் அதில் அவரது பங்கும் இந்த கேள்விக்கு விடையை தந்தது. இன்றும் அவர் எனக்கு நட்புக்குரியவர். அவர் பல தடவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை, அந்த தொகுதியில் வாழும் மக்கள் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ அல்ல இருந்தும் ஏன் வெற்றி பெறவில்லை என எண்ணிப்பார்க்கிறேன்.

சாதிக்கொடுமைகளையும் பார்ப்பனீய சிந்தனையையும் நிலை நிறுத்த துடிப்பவர்கள் சமூக அக்கறை என்ற போர்வையில் சமாதானவாதிகள் போன்ற வேடத்துடன் வலம் வருகிறார்கள். இந்திய சமூகத்தின் சாதி ஆதிக்கத்தின் புதிய வரலாறு சமாதான வேடத்துடன் வஞ்சகத்தை மறைத்து வைத்து இயங்குகிறது. அதற்கான சிந்தனை, ஆள்சேர்ப்பு, களங்களை உருவாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் என்கிற பார்ப்பனீய மதவெறி இயக்கம் மிக நன்றாகவே செய்து வருகிறது. சாதாரண மக்களின் ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி நாம் அனைவரும் இந்துக்கள் என்ற வட்டத்தில் ஒரு மதத்தினர் என்ற பொய்யான மாயையை உருவாக்கி பார்ப்பனீய ஆதிக்கத்தை தக்க வைக்க ஆள் சேர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவம் என்கிற மதவெறி கொள்கைக்கும் மாரியாத்தா, குலதெய்வங்கள் என நாட்டார் வழக்கியல் தெய்வ வழிபாட்டுமுறைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் உண்டு. எந்த மக்கள் பார்ப்பனீயத்தால் அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அந்த மக்களை ஒன்று திரட்டி தனது அரசியல் இலட்சியத்தை அடையும் படையை உருவாக்குகிறது ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு பார்ப்பனர் அல்லாத ஒருவர் வர முடியாத அளவு வர்ணாஸ்ரம சாதியாதிக்க கொள்கையில் ஊறியது அது. பார்ப்பனீய தலைமையின் அதிகாரத்தில் கட்டுண்டு கிடக்கிற அடியாள் பட்டளத்தை உருவாக்கி ஆயுதப் பயிற்சி களங்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதன் அரசியல் சூட்சுமம் மகா ஆபத்தானது. அதன் வெளிப்பாடு நாட்டில் பல கலவரங்களாக, சூறையாடல், பாலியல் பலாத்காரம், படுகொலைகள், வழிபாட்டுத்தலங்களை அழித்தல் என பரந்து விரிகிறது. யார் இதை செய்கிறார்கள்? உயர் சாதியினர் இல்லையே? அடித்துக் கொள்வதும் இதை செய்வதும் மற்ற சாதியினர் தானே என பார்ப்பனீயவாதிகள் இதற்கு விளக்கம் வேறு தருகின்றனர். இந்த கரச்சேவை காலி அடியாள் பட்டாளத்தை உருவாக்கி, கட்டுப்படுத்துவது யார்? பார்ப்பனீயவாதிகளின் கரம் ஒவ்வொரு மதக்கலவரத்தின் பின்னாலும், சாதிக்கொடுமைகளின் பின்னாலும் இருப்பது கண்கூடான உண்மை.

சாணார் என்றழைக்கப்பட்ட மக்கள் சாதிக்கொடுமையினால் தனது மானத்தை மறைத்து பெண்கள் இடுப்புக்கு மேல் துணி அணிய மறுக்கப்பட்ட நிலை தென்தமிழகத்தில் 19ம் நூற்றாண்டுவரை இருந்தது. இந்த கொடுமையை நடத்தியது மேல்சாதியினர். அதை எதிர்த்து அந்த அடக்கப்பட்ட மக்களிடமிருந்து உருவானவர் தான் முத்துக்குட்டி சாமி என்கிற இளைஞர். அவரது வழிமுறை இன்று அய்யாவழி என பலரால் வாழ்வில் கடைபிடிக்கப்படுகிறது. அவர் தோற்றுவித்த வழிமுறையில் அனைவரும் தலையில் துண்டணிந்து தான் வழிபாடு நடத்தவேண்டும் என்ற உயர்வை மனித மனங்களில் விதைத்தது. அந்த வழிபாட்டுத்தலங்களில் அந்த மக்களே வழிபாடு நடத்தலாம் அதற்கு இடைத்தரகர்கள் அவசியமில்லை. இது பார்ப்பனீய மதத்தின் கொடுமையை எதிர்த்து உருவான ஒரு புரட்சிகர வாழ்வியல், வழிபாட்டுமுறை. ஏன் தலையில் தலைப்பாகையுடன் வழிபாடு செய்ய வேண்டும்? மேல்சாதியினர் முன்னால் தோழில் துண்டணிய கூடாது; இடுப்பில் கட்ட வேண்டும் அல்லது கையில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் என்றிருந்த காலத்தில் பிறந்த விடுதலை வழி இது. கடவுள் முன்னால் தலைப்பாகையுடன் வழிபாடு செய்வதன் மூலம் எவருக்கும் அடிமையில்லாத முழு சுயமரியாதையுடைய மனிதர்கள் நாம் என அந்த மக்களுக்கு கற்பித்த விடுதலை இறையியல் வழிபாடு தான் அய்யாவழி.

அய்யாவாழி பற்றி விக்கிபீடியாவின் விளக்கம் இதோ:

//அய்யாவழி, Ayyavazhi (தமிழ்:அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.
அய்யாவழி ஒரு தனி சமயமாக அரசால் அங்கீகரிக்கப்படாத போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. இது அரசால் அங்கீகரிக்கப்படாததால் அய்யாவழி மக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுகிறார்கள்.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக[1] சமய[2] ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். //

குமரிமாவட்டத்திலுள்ள சாமிதோப்பு என்னும் இடத்தில் அமைந்துள்ள அய்யாவழி பதி மிகவும் பிரபலமான தலைமை பதி. பாலபிரஜாதிபதி அடிகளார் இந்த பதியின் வழியாக தமிழகத்தின் பல பகுதியில் மக்களிடையே ஆற்றி வருகிற மதநல்லிணக்கம் பலர் அறிந்தது. ஒருமுறை வேலையில்லா திண்டாட்டம் பற்றி நடந்த ஒரு பொது மேடையில் அடிகளாரும், மறைந்த தமிழார்வலர். வலம்புரிஜான் அவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த மேடையில் உரையாறும் போது பாலபிரஜாதிபதி அடிகளாருடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அடிகளாரின் சமூக அக்கறையும், இரக்கமும், பண்பும், மனிதத்தன்மையும், எளிமையும் என்னை வியக்க வைத்தது. வாய்ப்பு கிடைத்தால் இந்த விடுமுறையில் அடிகளாரை சந்தித்து பேட்டி எடுக்கவேண்டும் என ஆவலாக இருக்கிறது.

இன்று அய்யாவழி மதத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக திரிக்கும் பணியை பார்ப்பனீயவாதிகளும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் செய்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் யார் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதற்கான விளக்கம் இஸ்லாமிய, சீக்கிய, பார்ப்பனீய, கிறிஸ்த்தவ மதங்களல்லாத இப்படிப்பட்ட சிறு மதங்களையும் இந்துக்கள் என சேர்த்து வைக்கிறது. அந்த மக்களின் அடையாளத்தை அழிக்கும் பார்ப்பனீய மோசடி இது.

மனிதநேயத்திற்கு உதாரணமான வள்ளலார் வழிமுறைக்கும் இதே நிலை ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. புத்தன் காட்டிய வழிக்கும் இது தான் நடந்தது. இது எல்லா தலவழிபாட்டு முறைகளிலும் பார்ப்பனீய இந்துத்துவம் எடுக்கிற பண்பாட்டு படையெடுப்பு. வரலாற்றை அழிப்பது, திரிப்பது, திருத்தி தங்களுக்கு சாதகமாக எழுதுவது என அனைத்திலும் பார்ப்பனீயவாதிகள் கை தேர்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கலாச்சாரப் பிரிவுகள் இந்த பணியை செய்து வருகிறது. இதற்கான சமையலறை ஆய்வாளர்கள் பலர் தங்களது முன்முடிவுகளுடன் ஆய்வு அறிக்கைகளை உருவாக்கி வருகின்றனர். வலைப்பூவிலும் இந்த திரித்தல் பணி பல வடிவங்களில் சிறப்பாக நடக்கிறது.

வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள்.

ஒரு பிரச்சனையை பொது தளத்தில் வைத்து விவாதிப்பது மாற்றத்திற்கு மிக அவசியம். பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது. பிரச்சனைகளையும் அதன் காரணங்களையும் பலரது பார்வைக்கு கொண்டுவராமல் இருந்தால் சிந்திக்கும் திறனும், அறியும் தன்மையுமில்லாமல் அடக்குமுறைகள் தொடரும். நாஜிக்களின் ஆதிக்கத்தால் இருந்த ஜெர்மனியும், ஜெர்மானியர்களும் இன்றும் அந்த கொடுமைகளை விவாதிப்பதும், வரலாற்றை படிப்பதும் மீண்டும் அந்த கொடுமை தொடராமல் இருப்பதற்காக. உலகில் எங்காவது நிறவெறி நடந்தால் அது பற்றி கண்டிப்பதும் விவாதிப்பதும் மீண்டும் நிறவெறி தலைதூக்காமல் தடுக்கும் நல்ல முயற்சியாக கருதப்படுகிறது. சாதிப் பிரச்சனையையும் அதற்கு காரணங்களையும் (பார்ப்பனீய மத வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் உட்பட எல்லாவற்றையும்) பற்றி பேசாமல் சமூக, அராசியல், கலாச்சாரா, பொருளாதார விடுதலை எப்படி கிடைக்குமோ சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே இது வெளிச்சம்

முற்றிலும் அழிக்கப்படாத நெருப்பு கனலாக இருந்தால் கூட, அந்த தீக்கங்கு பரவி மீண்டும் பேராபத்தை விளைவிக்கும். சாதிக்கொடுமை இந்திய சமுதாயத்தில் பார்ப்பனீயம் மதவெறி என்கிற எரிபொருள் ஊட்டி வளர்க்கிற காட்டுத்தீ. அதை சமூகத்தில் பரவாமல் தடுக்க மீண்டும் மீண்டும் ஆரோக்கியமான விவாதங்களும், கலந்துரையாடல்களும், புரிதல்களும் மிக அவசியமானது. அது பார்ப்பனீயம் அழியும் வரை தொடரவேண்டும். பார்ப்பனீயம் எந்த சாதியில் இருப்பினும் கழைதல் அவசியம்.

என் கனவு எல்லோரும் பண்பட்ட மக்களாக அனைத்து இனத்தவரும் சமமான மனிதர்களான உரிமைகளுடன் வாழும் இந்தியா. அது பார்ப்பனீய, இந்துத்துவ பாசிச வெறிக்கு முரணானது. இதில் உயர்வு, தாழ்வு என்ற தரப்படுத்தல் கொள்கைகளுக்கு இடமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த வளர்ச்சியை அடைந்த நல்லரசாக அமையும்!

43 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

திரு

அருமையான பதிவு.

தேவையான பதிவு.

மிக்க நன்றி

சுந்தரவடிவேல் said...

//பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை.//
ஒரு மனிதரின் கருத்தியல் தளத்துக்குச் செய்யப்படும் பெரும் மோசடி இது. இதற்குக் காரணமான ஊடகங்களில் பார்ப்பனீயம் தன் வலிமையின் மூலமாக இத்தனைகாலம் மக்களின் கருத்தியலில் செலுத்திவந்த/வரும் ஆதிக்கத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும்.
பதிவுக்கு நன்றி.

மாசிலா said...

பிராமணர்களும் அதைச்சுற்றி உள்ள கும்பல் சாதாரண மனிதர்களின் மூளைகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இம்மக்களிடம் மனம்தளராத விழிப்புணர்வின் மூலம் மட்டுமே இதை தவிர்க்கவைக்க முடியும். இதுதான் நம் ஒவ்வொருவரின் கடமையும்.

திரு : //என் கனவு எல்லோரும் பண்பட்ட மக்களாக அனைத்து இனத்தவரும் சமமான மனிதர்களான உரிமைகளுடன் வாழும் இந்தியா.//

இது சாத்தியம். இதன் பொறுப்பு இப்போது நம்மிடம். வரும் தலைமுறைகளுக்கு ஒரு பண்பட்ட இந்தியாவை உருவாக்கி கொடுப்போம்!

nagoreismail said...

அருமையான பதிவு, உங்கள் கனவுகள் பலிக்கின்ர்ற கனவுகளாக ஆகட்டும், நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

இப்பதிவை படிக்கும்போது என்றோ ஒரு நாள் பார்ப்பனீயம் இல்லாதுபோகும் என்ற நம்பிக்கை வருகிறது.

Anonymous said...

என் கனவு எல்லோரும் பண்பட்ட மக்களாக அனைத்து இனத்தவரும் சமமான மனிதர்களான உரிமைகளுடன் வாழும் இந்தியா. அது பார்ப்பனீய, இந்துத்துவ பாசிச வெறிக்கு முரணானது. இதில் உயர்வு, தாழ்வு என்ற தரப்படுத்தல் கொள்கைகளுக்கு இடமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த வளர்ச்சியை அடைந்த நல்லரசாக அமையும்!

Yes despite pseudo-secularlists,
jihadi elements, pseudo-rationalists, OBC elite
that will be possible.

Anonymous said...

Excellent article my friend... You presented your points fair and clear. Good job.

Thx,
KVD.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஜாதியமும்,பிறப்பின் அடிப்படையிலான கொடுக்குறைகளும் முக்கியமான பிரச்சினைகள்தான்.ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் இவைதான்
மூலகாரணம் அல்லது ஒரே காரணம் என்பது சரியாகாது.மதத்தீவிரவாதம்
ஒரு முக்கியமான பிரச்சினை.அதற்கும் காரணம் இந்த்துவா என்று சொல்வது
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைத் திட்டி
அரசியல் செய்யும் தி.க போன்ற அமைப்புகள் பிற ஒடுக்குமுறைகள் மீது
அதிக அக்கறை காட்டுவதில்லை.அது போல்தான் உங்களைப் போன்றவர்கள்
எதற்கெடுத்தாலும் ஜாதியம்,ஆர்.எஸ்.எஸ் என்று பேச ஆரம்பித்துவிடுகிறீர்கள்.
மும்பை குண்டு வெடிப்புகளுக்கும், இன்னும் பலவற்றிற்கும் மூலகாரணம்
மதரீதியான, எல்லைதாண்டிய பயங்கரவாதம். அது இல்லாதது போல்
நடிக்கும் போலி மதச்சார்பற்ற,போலி இடதுகளை நம்ப நான் தயாரில்லை.
இந்த்துவ தீவிரவாதம் பிரச்சினையே இல்லை என்று நான் கூறவில்லை.
ஏதோ அதுதான் ஒரே பிரச்சினை, ஜாதியம்தான் ஒரே பிரச்சினை அவற்றைத்
தீர்த்துவிட்டால் சமத்துவ சமுதாயம் வந்துவிடும் என்ற கருத்தை என்னால்
ஏற்க இயலவில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஒரு பிரச்சனையை பொது தளத்தில் வைத்து விவாதிப்பது மாற்றத்திற்கு மிக அவசியம். பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது.
-----------------------------
நீங்களும் இதைத்தான் வேறுவிதங்களில் செய்கிறீர்கள்.
விடாது கறுப்பு போன்றவர்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் செய்கிறார்கள். இன்னும் பல
வலைப்பதிவாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் நிராகரித்த ஆரிய படையெடுப்பு கோட்பாட்டினை
முன்னிறுத்துவது இன்னொரு உதாரணம்.எதற்கெடுத்தாலும் ஜாதியம்,ஆர்.எஸ்.எஸ் என்று பேசுவது என்ன அறிவார்ந்த முறையில் விவாதிப்பதா.

வசந்த் said...

அருமையான பதிவு திரு அவர்களே,

//சாதிக்கொடுமைகளையும் பார்ப்பனீய சிந்தனையையும் நிலை நிறுத்த துடிப்பவர்கள் சமூக அக்கறை என்ற போர்வையில் சமாதானவாதிகள் போன்ற வேடத்துடன் வலம் வருகிறார்கள். இந்திய சமூகத்தின் சாதி ஆதிக்கத்தின் புதிய வரலாறு சமாதான வேடத்துடன் வஞ்சகத்தை மறைத்து வைத்து இயங்குகிறது //


மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி
வசந்த்

வசந்த் said...

// வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். //

வலைப்பதிவின் ஒட்டு மொத்த அரசியலையும் ஒரு பத்தியில் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விட்டீர்கள்.

இந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதை எதிர்ப்பதில் உங்கள் போன்றோரின் பதிவுகள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றன.

மிகவும் நன்றி, இது போன்ற பதிவுகள் தருவதிற்கு.

வசந்த்

வசந்த் said...

// என் கனவு எல்லோரும் பண்பட்ட மக்களாக அனைத்து இனத்தவரும் சமமான மனிதர்களான உரிமைகளுடன் வாழும் இந்தியா. அது பார்ப்பனீய, இந்துத்துவ பாசிச வெறிக்கு முரணானது. இதில் உயர்வு, தாழ்வு என்ற தரப்படுத்தல் கொள்கைகளுக்கு இடமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த வளர்ச்சியை அடைந்த நல்லரசாக அமையும் //

திரு அவர்களே, இது உங்கள் கனவு மட்டும் அல்ல, உண்மையான மனிதாபிமானம் கொண்ட அனைவரின் கனவும்தான்..

நிச்சயமாக ஒரு நாள் நிறைவேரும்.. தொடருங்கள் உங்கள் பணியை.

நன்றி
வசந்த்

thiru said...

//Réduire les commentaires
Sivabalan a dit…
திரு
அருமையான பதிவு.
தேவையான பதிவு.
மிக்க நன்றி//

நன்றி சிவா

குழலி / Kuzhali said...

// வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். //
திரு இப்படிப்பட்ட ஆட்களை சமாளிப்பது கூட பரவாயில்லை, ஆனால் எல்லோருக்கும் நல்லவர்கள் வேடம் போட்டுக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல நஞ்சை கலந்து எழுதுபவர்களை சமாளிப்பது மிகக்கடுமையாக இருக்கின்றது, இவர்களாக நடுநிலைவாதிகள் போன்ற தோற்றத்தினை உருவாக்கி பொதுத்தளத்தில் சத்தம்போடாமல் நேரடியாக இல்லாமல் மனிதர்களுக்குள் பிரிவினைகள் சகஜம் தான் என்று சாதீயத்துக்கு சப்பை கட்டுகட்டுபவர்களை சமாளிப்பதில்தான் பிரச்சினை, இவர்களை அம்பலப்படுத்த தீவிரமாக இயங்கும்போது மிகஎளிதாக நம்மை சண்டைகாரர்களாக காண்பித்து புறந்தள்ளும் சாத்தியங்கள் இருப்பதால் இது மாதிரியான இந்து மதத்தையும் அதன் மனுதர்மத்தையும் மறைமுகமாக தூக்கிபிடிப்பவர்களின் முகங்களை கிழிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது, இந்த வலைப்பதிவிற்கு வந்த பின் எப்படி மனுதர்மம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றது என புரிகின்றது, இந்துமத மனுதர்மத்திற்கு தீவிர ஆதரவு, நடுநிலை என்ற போர்வையில் ஆதரிப்பது, மென்மையாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல ஆதரிப்பது என எல்லா விதங்களிலும் இவர்களின் ஊடுறுவலை பார்த்தபோதுதான் எப்படிடா ஆயிரம் ஆயிரம் காலமாக புத்தன், பெரியாரை எல்லாம் தாண்டி உயிரோடு இருக்கின்றது என புரிந்துகொண்டேன்

//ஒரு பிரச்சனையை பொது தளத்தில் வைத்து விவாதிப்பது மாற்றத்திற்கு மிக அவசியம். பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது
//
வெகுசன ஊடகங்கள் வகுத்தது இதோ இன்று வலைப்பதிவு வரை வந்துவிட்டது.

Hariharan # 03985177737685368452 said...

// வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். //

பதிவுக்கு, கருத்துக்கு எதிர்கருத்தாக பார்ப்பனீய எதிர்ப்பு / பெரியார்மத வாதிகள் அனுப்பும் பின்னூட்டங்களில் "உனது தாயை, தாரத்தை, குழந்தைகளை விபசாரத்திற்கு அனுப்பு ரேட் ஃபிக்ஸ் செய்யலாம்" என்பது மாதிரியானது எம்மாதிரி அரசியல் திரா"விட" பெத்தடின் எதிர்ப்பு?

தொடர்ந்து அரசியல் திரா'விட'த்துக்கு எதிர்கருத்துப் பதிவிட்டால் பதிவரது பெயரிலேயே போலிஆபாசத் தளம் தொடங்குவது படித்த அரசியல் திரா'விட' ப் பெத்தடின் தாக்கத்தில் இயங்கும் இளைஞர்கள் கணினிப்படிப்பு படித்தவர்கள் தானே? திரு?

bala said...

//இவர்களாக நடுநிலைவாதிகள் போன்ற தோற்றத்தினை உருவாக்கி பொதுத்தளத்தில் சத்தம்போடாமல் நேரடியாக இல்லாமல் மனிதர்களுக்குள் பிரிவினைகள் சகஜம் //

குழலி அய்யா,

நீங்க யாரை மனசில வெச்சி இது மாதிரி நொந்து போய் சொல்லியிருக்கீங்கன்னு தெரியுது..
நம்ம முத்து(தமிழினி) அய்யாவைத்தானே?
ஆனா அவர் இப்பவெல்லாம் நீங்க நினைக்கிறபடி நடுநிலைவாதியா வேஷம் போடறதில்லை.நீங்க கவலையே பட வேண்டாம்.அவர் நடுநிலைவாதி அல்ல,அல்ல.

அவர் உண்மையான பாசறை செர்டிஃபைட் தீவிரவாத திராவிடன் தான்.

பாலா

மிதக்கும்வெளி said...

மிக நல்ல பதிவு. விமர்சிக்கப்பட வேண்டியது ஆதிக்கக் கருத்தியல்கள் மட்டுமில்லை. 'நடுநிலை'யான கருத்துக்களும்தான். நடுநிலை என்பது ஒரு மாயை. ஒடுக்குமுறையையும் ஒடுக்குமுறையைக்கு எதிரான செயல்பாடுகளையும் ஒரே மாதிரியான தரப்படுத்தும் கயமை. சமீபத்தில் கூட பேட்நியூஸ் இந்தியா இதுபோன்ற ஒரு 'நடுநிலை'ப் பதிவு போட்டிருந்தார். சாதியை எதிர்ப்பது என்பது சாதி பற்றி பேசாமலோ விவாதிக்காமலோ இருப்பதல்ல, மாறாக ஆரோக்கியமாக விவாதித்து அதற்கெதிராக செயல்படுவது மட்டுமே. 'எல்லோரும் சமம், நமக்கிடையில் சாதி கிடையாது' என்று சொல்லிவிடுவதால் எல்லாம் சாதி ஒழிந்து விடாது. 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பது அயோக்கியத்தனம். எதார்த்தத்தை மூடிமறைக்கும் முயற்சி. 'சாதிகள் வேண்டாம் பாப்பா' என்று வேண்டுமானால் சொல்லித் தரலாம். ரவிசீனிவாஸ் சொல்வதுபோல முஸ்லீம்வன்முறையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான ஊற்றுக்கண் எது? 1992ல் பாபர்மஸ்ஜிதை இடித்தது யார்? ஆரியப் படையெடுப்பை எந்த வரலாற்றாசிரியர்கள் மறுத்திருக்கிறார்கள்? ரவி விரிவாக விளக்கட்டுமே. அகழ்வாராய்வில் பா.ஜ.க செய்த தகிடுதத்தங்கள்தான் சந்தி சிரித்ததே

thiru said...

//சுந்தரவடிவேல் a dit…
//பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை.//

ஒரு மனிதரின் கருத்தியல் தளத்துக்குச் செய்யப்படும் பெரும் மோசடி இது. இதற்குக் காரணமான ஊடகங்களில் பார்ப்பனீயம் தன் வலிமையின் மூலமாக இத்தனைகாலம் மக்களின் கருத்தியலில் செலுத்திவந்த/வரும் ஆதிக்கத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும்.
பதிவுக்கு நன்றி.//

சுந்தரவடிவேல்ம் வருகைக்கு நன்றி! இன்னும் பார்ப்பனீயம் இந்த ஆதிக்கத்தை தான் செய்யத்துடிக்கிறது. பின்னூட்டங்களும் அதற்கான வலைப்பதிவுகளும் சாட்சி!

thiru said...

//மாசிலா said...
இம்மக்களிடம் மனம்தளராத விழிப்புணர்வின் மூலம் மட்டுமே இதை தவிர்க்கவைக்க முடியும். இதுதான் நம் ஒவ்வொருவரின் கடமையும்.//

உண்மை தான் மாசிலா!

thiru said...

//அனானி...
இப்பதிவை படிக்கும்போது என்றோ ஒரு நாள் பார்ப்பனீயம் இல்லாதுபோகும் என்ற நம்பிக்கை வருகிறது.//

உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும் அனானி நண்பரே!

thiru said...

//Mohamed Ismail a dit…
அருமையான பதிவு, உங்கள் கனவுகள் பலிக்கின்ர்ற கனவுகளாக ஆகட்டும், நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நாகூர் இஸ்மாயில்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே

thiru said...

//என் கனவு எல்லோரும் பண்பட்ட மக்களாக அனைத்து இனத்தவரும் சமமான மனிதர்களான உரிமைகளுடன் வாழும் இந்தியா. அது பார்ப்பனீய, இந்துத்துவ பாசிச வெறிக்கு முரணானது. இதில் உயர்வு, தாழ்வு என்ற தரப்படுத்தல் கொள்கைகளுக்கு இடமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த வளர்ச்சியை அடைந்த நல்லரசாக அமையும்!

Yes despite pseudo-secularlists,
jihadi elements, pseudo-rationalists, OBC elite
that will be possible. //

அனானி உங்கள் மனவிகாரமா இந்த பதில்? ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம்...?

thiru said...

//Excellent article my friend... You presented your points fair and clear. Good job.

Thx,
KVD.//

நன்றி KVD

thiru said...

//ravi srinivas...
ஜாதியமும்,பிறப்பின் அடிப்படையிலான கொடுக்குறைகளும் முக்கியமான பிரச்சினைகள்தான்.ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் இவைதான்
மூலகாரணம் அல்லது ஒரே காரணம் என்பது சரியாகாது.//

இந்திய சமுதாயத்தின் அடிப்படையே இந்த பிரச்சனை தான் ரவி. இதை அவ்வளவு எளிதாக மறைத்து விட இயலாது!

//மதத்தீவிரவாதம்
ஒரு முக்கியமான பிரச்சினை.அதற்கும் காரணம் இந்த்துவா என்று சொல்வது
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைத் திட்டி
அரசியல் செய்யும் தி.க போன்ற அமைப்புகள் பிற ஒடுக்குமுறைகள் மீது
அதிக அக்கறை காட்டுவதில்லை.அது போல்தான் உங்களைப் போன்றவர்கள்
எதற்கெடுத்தாலும் ஜாதியம்,ஆர்.எஸ்.எஸ் என்று பேச ஆரம்பித்துவிடுகிறீர்கள்.
மும்பை குண்டு வெடிப்புகளுக்கும், இன்னும் பலவற்றிற்கும் மூலகாரணம்
மதரீதியான, எல்லைதாண்டிய பயங்கரவாதம். அது இல்லாதது போல்
நடிக்கும் போலி மதச்சார்பற்ற,போலி இடதுகளை நம்ப நான் தயாரில்லை.//

ஆர்.எஸ்.எஸ் பாணியிலான இந்த சொத்தை வாதத்தை நிராகரிக்கிறேன். 1989 வரை இந்த நாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும் இல்லை எனலாம். அத்வானியும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களும் ஊட்டிய மதவெறி தீயின் எதிர்விளைவு தான் இன்றைய தீவிரவாதம். இந்தியாவில் தீவிரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும். அதற்கு அதன் மூலமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்களை நிரந்தரமாக இயங்கவிடாமல் தடுக்கவேண்டும்.

//இந்த்துவ தீவிரவாதம் பிரச்சினையே இல்லை என்று நான் கூறவில்லை.
ஏதோ அதுதான் ஒரே பிரச்சினை, ஜாதியம்தான் ஒரே பிரச்சினை அவற்றைத்
தீர்த்துவிட்டால் சமத்துவ சமுதாயம் வந்துவிடும் என்ற கருத்தை என்னால்
ஏற்க இயலவில்லை.//

இந்துத்துவ தீவிரவாதம் பிரச்சனை என்கிறீர்கள் தானே அதையும் சேர்த்து ஒழித்துவிடுவோம் என்கிறேன். சாதீயம் பற்றி அனுபவப்பட்ட மக்களுக்கு தெரியும் ரவி! ஏட்டுப்படிப்பு மட்டும் அதன் வலியை உணர்த்தாது.

thiru said...

//ravi srinivas a dit…
ஒரு பிரச்சனையை பொது தளத்தில் வைத்து விவாதிப்பது மாற்றத்திற்கு மிக அவசியம். பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது.
-----------------------------
நீங்களும் இதைத்தான் வேறுவிதங்களில் செய்கிறீர்கள்.
விடாது கறுப்பு போன்றவர்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் செய்கிறார்கள்.//

ரவி யாருடைய எழுத்தையும் தடுக்கும்/ஆதிக்கம் செலுத்தும் பர்ப்பனீய எண்ணம் எனக்கில்லை. வலைப்பூக்களில் மிக மோசமான இந்த பர்ப்பனீயத்தை ஆதரிக்க உங்களுக்கு என்ன அவசியமோ?

//இன்னும் பல
வலைப்பதிவாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் நிராகரித்த ஆரிய படையெடுப்பு கோட்பாட்டினை
முன்னிறுத்துவது இன்னொரு உதாரணம்.//

ஆரியம் பற்றி வேறு கருத்து வழங்கிய பலரும் வரலாற்றாய்வாளர்கள் தான். அதையும் ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்? ஆரியத்திற்கு விளக்கம் சொல்ல நான் முயலவில்லை. அது பற்றி தேவையெனில் தனிப்பதிவில் எழுதிவேன். உங்கள் ஆத்திரங்களை பின்னூட்டத்தில் வெளிப்படுத்துகிறீர்கள். நிதானமாக சிந்தியுங்கள் நண்பரே.

//எதற்கெடுத்தாலும் ஜாதியம்,ஆர்.எஸ்.எஸ் என்று பேசுவது என்ன அறிவார்ந்த முறையில் விவாதிப்பதா.//

ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள் நண்பரே!

thiru said...

//வசந்த் a dit…
// வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். //

வலைப்பதிவின் ஒட்டு மொத்த அரசியலையும் ஒரு பத்தியில் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி விட்டீர்கள்.

இந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதை எதிர்ப்பதில் உங்கள் போன்றோரின் பதிவுகள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றன.

மிகவும் நன்றி, இது போன்ற பதிவுகள் தருவதிற்கு.

வசந்த்//

நன்றி வசந்த். தொடர்ந்து விழிப்புணர்வாய் இருப்போம்.

thiru said...

//குழலி / Kuzhali a dit…
இது மாதிரியான இந்து மதத்தையும் அதன் மனுதர்மத்தையும் மறைமுகமாக தூக்கிபிடிப்பவர்களின் முகங்களை கிழிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது, இந்த வலைப்பதிவிற்கு வந்த பின் எப்படி மனுதர்மம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றது என புரிகின்றது, இந்துமத மனுதர்மத்திற்கு தீவிர ஆதரவு, நடுநிலை என்ற போர்வையில் ஆதரிப்பது, மென்மையாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல ஆதரிப்பது என எல்லா விதங்களிலும் இவர்களின் ஊடுறுவலை பார்த்தபோதுதான் எப்படிடா ஆயிரம் ஆயிரம் காலமாக புத்தன், பெரியாரை எல்லாம் தாண்டி உயிரோடு இருக்கின்றது என புரிந்துகொண்டேன்//

குழலி,

தளராத மனதுடன் களமாடுங்கள் கருத்துக்களால். காலமும் காட்சியும் மாறும். விடுதலை பிறக்கும்.

thiru said...

//Hariharan # 26491540 a dit…
பதிவுக்கு, கருத்துக்கு எதிர்கருத்தாக பார்ப்பனீய எதிர்ப்பு / பெரியார்மத வாதிகள் அனுப்பும் பின்னூட்டங்களில் "உனது தாயை, தாரத்தை, குழந்தைகளை விபசாரத்திற்கு அனுப்பு ரேட் ஃபிக்ஸ் செய்யலாம்" என்பது மாதிரியானது எம்மாதிரி அரசியல் திரா"விட" பெத்தடின் எதிர்ப்பு?

தொடர்ந்து அரசியல் திரா'விட'த்துக்கு எதிர்கருத்துப் பதிவிட்டால் பதிவரது பெயரிலேயே போலிஆபாசத் தளம் தொடங்குவது படித்த அரசியல் திரா'விட' ப் பெத்தடின் தாக்கத்தில் இயங்கும் இளைஞர்கள் கணினிப்படிப்பு படித்தவர்கள் தானே? திரு?//

அந்த மாதிரியான வாய்கூசும் வார்த்தைகளாலான வசைபாடல்களை ஆதரிப்பது என் வேலையில்லை நண்பரே! அதை பலரும் கண்டித்துள்ளனர், அந்த குரல்களில் என் குரலும் சேர்ந்துள்ளது. கருத்துக்களை நேர்மையான தளத்தில் வைத்து வாதிடுவது தான் என் ரகம். அதிலிருந்து வழுவ நான் தயாரில்லை.
இந்த வசைபாடல்களை காரணம் காட்டி பார்ப்பனீய வலைப்பூ அரசியலை மறைத்துவிட இயலாது. இது அனைவரும் காண்கிற வெளிச்சமான் உண்மை.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஆரியப் படையெடுப்பை எந்த வரலாற்றாசிரியர்கள் மறுத்திருக்கிறார்கள்? ரவி விரிவாக விளக்கட்டுமே

Read Romila Thapar, particularly her lecture at JNU.

bala said...

//இப்பதிவை படிக்கும்போது என்றோ ஒரு நாள் பார்ப்பனீயம் இல்லாதுபோகும் என்ற நம்பிக்கை வருகிறது.//

அனானி அய்யா,

எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது.இந்த பதிவை படித்ததும் போய் விட்டது.திரு அய்யா திரு ம்ப திரு ம்ப பார்ப்பனீயம் இருக்கு இருக்கு அப்படீன்னு புருடா விட்டு பிழைப்பை நடத்துவார்.

பாலா

வசந்த் said...

குழலி,

//திரு இப்படிப்பட்ட ஆட்களை சமாளிப்பது கூட பரவாயில்லை, ஆனால் எல்லோருக்கும் நல்லவர்கள் வேடம் போட்டுக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல நஞ்சை கலந்து எழுதுபவர்களை சமாளிப்பது மிகக்கடுமையாக இருக்கின்றது, இவர்களாக நடுநிலைவாதிகள் போன்ற தோற்றத்தினை உருவாக்கி பொதுத்தளத்தில் சத்தம்போடாமல் நேரடியாக இல்லாமல் மனிதர்களுக்குள் பிரிவினைகள் சகஜம் தான் என்று சாதீயத்துக்கு சப்பை கட்டுகட்டுபவர்களை சமாளிப்பதில்தான் பிரச்சினை, இவர்களை அம்பலப்படுத்த தீவிரமாக இயங்கும்போது மிகஎளிதாக நம்மை சண்டைகாரர்களாக காண்பித்து புறந்தள்ளும் சாத்தியங்கள் இருப்பதால் இது மாதிரியான இந்து மதத்தையும் அதன் மனுதர்மத்தையும் மறைமுகமாக தூக்கிபிடிப்பவர்களின் முகங்களை கிழிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது, இந்த வலைப்பதிவிற்கு வந்த பின் எப்படி மனுதர்மம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றது என புரிகின்றது, இந்துமத மனுதர்மத்திற்கு தீவிர ஆதரவு, நடுநிலை என்ற போர்வையில் ஆதரிப்பது, மென்மையாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல ஆதரிப்பது என எல்லா விதங்களிலும் இவர்களின் ஊடுறுவலை பார்த்தபோதுதான் எப்படிடா ஆயிரம் ஆயிரம் காலமாக புத்தன், பெரியாரை எல்லாம் தாண்டி உயிரோடு இருக்கின்றது என புரிந்துகொண்டேன் //

சரியாகச் சொன்னீர்கள். உண்மையாகவே சமாதானவாதிகள் என்ற போர்வையில் எழுதுவோரின் பதிவுகளை படிக்கும் போது நஞ்சு குழைத்த விசம் போல்தான் எனக்கும் தோன்றுகிறது.

நன்றி,
வசந்த்

வசந்த் said...

// நஞ்சு குழைத்த விசம் போல்தான் எனக்கும் தோன்றுகிறது//

நஞ்சு குழைத்த தேன் என்பதைதான் மாற்றி எழுதி விட்டேன்.

ஜோ/Joe said...

திரு,
தெளிவான கண்ணோட்டம்.பதிவுக்கு நன்றி!

Anonymous said...

//எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது.இந்த பதிவை படித்ததும் போய் விட்டது.திரு அய்யா திரு ம்ப திரு ம்ப பார்ப்பனீயம் இருக்கு இருக்கு அப்படீன்னு புருடா விட்டு பிழைப்பை நடத்துவார்.//

இந்தக் காலத்தில் பார்ப்பனீயக் கொள்கைகள் மடிந்து விட்டது போலவும், அந்தக் கொள்கைகளால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் எதுவும் நடைமுறையில் நிகழ்வதில்லை போலவும் பாலா எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

மேலும் பார்ப்பனீயக் கொள்கைகளைப் பற்றி தன் வலைப்பதிவில் ஒருவர் எழுதுவதன் மூலம் (பாலாவின் வார்த்தையின்படி புருடா விடுவதன் மூலம்) எப்படி ஒருவர் பிழைப்பு நடத்துவது என்பதும் புரியவில்லை.

தருமி said...

திரு,
உங்களின் நல்ல இப்பதிவையும் அதில் கூறப்படுள்ள அய்யாவழியினையும் எனது இந்தப் பதிவில் மேற்கோள் காட்டியுள்ளேன்.

நன்றி.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள் நண்பரே

Communal clashes were in British
India too.Are you blaming RSS for
that also.This country was colonised by the British.Many
of our problems could be traced to what British did and failed to do.
Their policies resulted in large
scale starvation, pauperisation
of masses.If RSS is responsible for
communalising the country how about
Muslim League.Justice Venugopal
in his report on MandaiKaddu
clashes had mentioned that conversion by christians was
one of the reasons for the
clashes.I hold no brief for RSS.
But I am not so naive as to blame
RSS and casteism for all ills of
India.Psuedo-secularlists, and
Periyarists can make a career out
of blaming RSS and brahmins.They will pretend as if cross-border
terrorism and religious terrorism
do not exist.They will pretend as
if there was no Al-Queida or LeT
or other such groups.They will
blame casteism,brahmins and RSS.
I am not a fool to buy such cock
and bull stories.

thiru said...

//ravi srinivas a dit…
Communal clashes were in British
India too.Are you blaming RSS for
that also.//

ரவி,

ஆர்.எஸ்.எஸ் புனிதமானது என தாங்கிப் பிடிக்க முனைகிற உங்கள் நிலை புரிகிறது. 1925ல் ஆர்.எஸ்.எஸ் உருவானதிலிருந்து மதக்கலவரங்கள் இந்துத்துவ வெறியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு மொத்த உரிமையும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய இயக்கத்தை சார்ந்தது. தேவைப்படின் புள்ளி விபரங்களையும் தரலாம். காலனியாதிக்கம் தான் மதவெறிக்கு காரணம் என பொய்யுரைக்க வேண்டாம். காலனியாதிக்கத்தின் எச்சத்தை பயன்படுத்தி மதவெறியை சாவர்க்கர் முதல் ஹெட்கேவார், கோல்வால்கர் என வளர்த்து அத்வானி, வாஜ்பாய், நரேந்திர மோடி வகையறாக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. பார்ப்பனீய தீவிரவாதம் வேதகாலம் முதல் இந்த வெறியாட்டங்களை நடத்தியிருக்கிறது. சமணர்களை கழுவிலேற்றியது, அவர்கள் ஆலயங்களையும், பௌத்த விகாரைகளையும் தீயிட்டு கொழுத்தியதும் சூறையாடியதும் என இந்த தீவிரவாத வரலாறு நீண்ட பாதையில் உருவானது.

//This country was colonised by the British.Many
of our problems could be traced to what British did and failed to do.
Their policies resulted in large
scale starvation, pauperisation
of masses.//
இதற்கு மறுப்பு சொல்லவில்லை. வறுமை மற்றும் இதர பிரச்சனைகளை இதில் நுழைத்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்.

//If RSS is responsible for
communalising the country how about
Muslim League.//
அடடா உங்கள் அறிவு கலைகிறது ரவி. இந்துத்துவ இயக்கங்களின் சொத்தை வாதம் இது, என்னை மட்டுமா சொல்வாய்? அவனை என்ன சொல்கிறாய் என்கிற ஒப்புதல் வாக்குமூலம் இது.

//Justice Venugopal
in his report on MandaiKaddu
clashes had mentioned that conversion by christians was
one of the reasons for the
clashes.//
இல.கணேசன் என்கிற பார்ப்பனீயவாதி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை உருவாக்கி மதவெறியை ஒரே குடும்பத்தினருக்குள் விதைத்ததும், அதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் உருவாக்கியதே இந்த கலவரம். கிறிஸ்தவ மதமாற்றம் தான் குமரி மாவட்ட மண்டைக்காடு கலவரத்தின் காரணம் என்பதை மறுக்கிறேன். மதமாற்றம் 19 நூற்றாண்டிற்கும் முன்னரே குமரியில் காலூன்றி விட்டது. சவேரியார் காலத்தில் கிறிஸ்தவ மதம் குமரியில் பரவ ஆரம்பித்து விட்டதாக வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன. அப்படியானால் மண்டைக்காடு கலவரம் 1980களில் நடந்ததற்கும் இதற்கும் என்ன தொடர்பு? அப்படியே மதமாற்றம் காரணமாக இருப்பின் கலவரங்களை உருவாக்கி அறுவடை செய்யும் ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்டது? இதில் அதன் வேடம் கலைகிறது.

கலவரம் வழி இயக்கததை வலுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்க்கு கை தேர்ந்த கலை. இதற்கு பல ஒளிப்படங்களும் சாட்சியாக இருக்கிறது.

//I hold no brief for RSS.//

இன்னும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன் :)

//But I am not so naive as to blame
RSS and casteism for all ills of
India.//

ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல, பார்ப்பனீய வேதங்கள், தர்மசாஸ்திரங்கள் என பலவும் தான்...

//Psuedo-secularlists, and
Periyarists can make a career out
of blaming RSS and brahmins.They will pretend as if cross-border
terrorism and religious terrorism
do not exist.They will pretend as
if there was no Al-Queida or LeT
or other such groups.They will
blame casteism,brahmins and RSS.
I am not a fool to buy such cock
and bull stories.//
ரவி, நீங்கள் உங்கள் கனவுலகில் வாழுங்கள் தவறில்லை. உங்கள் உலகத்தை விட்டு வெளியேயும் பாருங்கள் உண்மை விளங்கும். இதற்கு மேல் இதில் சொல்ல ஒன்றும் இல்லை. "தூங்கினால் தானே எழுப்ப இயலும்!"

thiru said...

//kalai a dit...
//எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது.இந்த பதிவை படித்ததும் போய் விட்டது.திரு அய்யா திரு ம்ப திரு ம்ப பார்ப்பனீயம் இருக்கு இருக்கு அப்படீன்னு புருடா விட்டு பிழைப்பை நடத்துவார்.//

இந்தக் காலத்தில் பார்ப்பனீயக் கொள்கைகள் மடிந்து விட்டது போலவும், அந்தக் கொள்கைகளால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் எதுவும் நடைமுறையில் நிகழ்வதில்லை போலவும் பாலா எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

மேலும் பார்ப்பனீயக் கொள்கைகளைப் பற்றி தன் வலைப்பதிவில் ஒருவர் எழுதுவதன் மூலம் (பாலாவின் வார்த்தையின்படி புருடா விடுவதன் மூலம்) எப்படி ஒருவர் பிழைப்பு நடத்துவது என்பதும் புரியவில்லை. //

கலை, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! வலைப்பூக்களில் நகைச்சுவையும் அவசியம் தானே. சர்க்கஸ்ல் நகைச்சுவை போல வலைப்பூ நகைச்சுவைக்கு பாலா என்கிற பெயரில் வந்திருக்கிறார் ஒருவர். சீரியஸாக எடுக்கவேண்டாம் :)

thiru said...

ஜோ வருகைக்கு நன்றி!

//Dharumi a dit…
திரு,
உங்களின் நல்ல இப்பதிவையும் அதில் கூறப்படுள்ள அய்யாவழியினையும் எனது இந்தப் பதிவில் மேற்கோள் காட்டியுள்ளேன். நன்றி.//

நன்றி தருமி அய்யா! உங்கள் பதிவை கவனித்தேன் நல்ல விவாதம் நடைபெறுகிறது.

அசுரன் said...

//. இந்திய சமூகத்தின் சாதி ஆதிக்கத்தின் புதிய வரலாறு சமாதான வேடத்துடன் வஞ்சகத்தை மறைத்து வைத்து இயங்குகிறது. அதற்கான சிந்தனை, ஆள்சேர்ப்பு, களங்களை உருவாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் என்கிற பார்ப்பனீய மதவெறி இயக்கம் மிக நன்றாகவே செய்து வருகிறது. சாதாரண மக்களின் ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி நாம் அனைவரும் இந்துக்கள் என்ற வட்டத்தில் ஒரு மதத்தினர் என்ற பொய்யான மாயையை உருவாக்கி பார்ப்பனீய ஆதிக்கத்தை தக்க வைக்க ஆள் சேர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவம் என்கிற மதவெறி கொள்கைக்கும் மாரியாத்தா, குலதெய்வங்கள் என நாட்டார் வழக்கியல் தெய்வ வழிபாட்டுமுறைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் உண்டு. எந்த மக்கள் பார்ப்பனீயத்தால் அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அந்த மக்களை ஒன்று திரட்டி தனது அரசியல் இலட்சியத்தை அடையும் படையை உருவாக்குகிறது ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு பார்ப்பனர் அல்லாத ஒருவர் வர முடியாத அளவு வர்ணாஸ்ரம சாதியாதிக்க கொள்கையில் ஊறியது அது. //

//இது எல்லா தலவழிபாட்டு முறைகளிலும் பார்ப்பனீய இந்துத்துவம் எடுக்கிற பண்பாட்டு படையெடுப்பு. வரலாற்றை அழிப்பது, திரிப்பது, திருத்தி தங்களுக்கு சாதகமாக எழுதுவது என அனைத்திலும் பார்ப்பனீயவாதிகள் கை தேர்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கலாச்சாரப் பிரிவுகள் இந்த பணியை செய்து வருகிறது. இதற்கான சமையலறை ஆய்வாளர்கள் பலர் தங்களது முன்முடிவுகளுடன் ஆய்வு அறிக்கைகளை உருவாக்கி வருகின்றனர். வலைப்பூவிலும் இந்த திரித்தல் பணி பல வடிவங்களில் சிறப்பாக நடக்கிறது.
//

//திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா.//

//பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது.//

அருமையான பதிவு திரு...

ரவி ஸ்ரினிவாஸ் அவர்களே,

இஸ்லாமிய அடிப்படைவாதம் இன்றைக்கு தனக்கான உலக மேலாதிக்க நோக்கத்துடன் பரிணமித்துள்ளது உண்மைதான். ஆனால் இதன் ஒரு முனையை பேசும் நீங்கள் மறுமுனையும், மூலமுமான அமெரிக்க ஏகாதிபத்திய வெறியையும், பிற ஏகாதிபத்தியங்களின் பொருளாதார அரசியல் சாகசங்களின் பின்விளைவுகளையும், இந்தியாவில் இந்து மத/பார்ப்பினிய வெறியையும் ஏன் பேசுவதில்லை?

அதை பேசும் போதெல்லாம் வந்து அடைப்பாக வேலை செய்வதேன்?

இன்னும் சொன்னால் அவற்றுக்கு புனித வட்டம் கட்டும் முயற்சியில் மிக தந்திரமாக இறங்குகிறேர்களே?

இந்தியாவின் ஆக முக்கியமான பிரச்சனை இந்துமத/பார்ப்பினிய காலாச்சார பொருளாதார அடக்குமுறையும், ஏகாதிபத்திய சுரண்டலும்தான்..

இவற்றை ஒழித்தால் உங்களது நண்பர்களான இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பிடறியில் அடித்து மக்களே துரத்தி விடுவார்கள்.

இவை இரண்டையும்(ஏகாதிபத்தியம்/பார்ப்பினியம்) பற்றி ரவி சிரினிவாசின் நேர்மையான அணுகுமுறை அனைவருக்கும் தெரிந்ததே...

ஒரு வேளை உங்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது இந்து மத தீவிரவாதத்தை மறைக்கு சல்லாத் துணியாக தேவைப்படலாம். அதற்க்காக அந்த சல்லாத் துணியை விளம்பரப்படுத்துவதற்க்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு எங்களையும் கூப்பிட வேண்டாம்.

எங்களுக்கு பிரச்சனை தீர வேண்டும் என்பது விருப்பம் கனவு,... உங்களுக்கு பிரச்சனைகளை கிளறிவிட்டு தின்ற சோறு செரிக்க குளிர் காயும் கனவு, விருப்பம்...

என்ன செய்ய வரலாறு தனி மனிதர்கள், குழுக்களின் விருப்பத்திற்க்கு காத்திருப்பதில்லை...

அசுரன்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Read my writings in Thinnai and blog posts in my blogs.I have criticised RSS and other hindutva
forces.I have written on so many
issues.I have no faith in the
PJ/PK rhetoric.I have never supported Bush or U.S imperialism.

அசுரன் said...

ரவி சிரினிவாஸ்,

செக்குலரிசம் பற்றி பேசும் போது அதுவும் குறிப்பாக ஆடு கிடா வெட்டு சட்டம் குறித்து பேசும் போது, மதவெறியின் முரன் கூறான செக்குலரிசமும் கூட அது சார்ந்த வன்முறைக்கு வித்திடுகிறது என்ற பார்க்க முடிந்த தங்களால், ஏன் இஸ்லாம் அடிப்படைவாதத்தின் முக்கிய முரன் ஊக்கியான அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியாவில் இந்து ப்யங்கரவாதம் இவற்றை தொடர்பு படுத்தி பேச் முடிவதில்லை.

எனக்கு ஒரு கேள்வி உள்ளது அதற்க்கு பதில் சொல்லவும். காஸ்மீரில் 1947 வரை மத நல்லிணக்கம் கடைப் பிடிக்கப்பட்டதன் மர்ம்ம, என்ன?

அங்கு பெரும்பான்மை முஸ்லிமகள் ஒரு இந்து மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்ததன் மர்மம் என்ன?

1947க்கு பிற்ப்பாடே மத அடிப்படைவாதம் அங்கு வேர் விடத் துவங்கியதன் மர்மம் என்ன?

ரவி சிரினிவாஸ், உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். வாய்ப்பிருந்தால் இயக்கவியல் ஆய்வு முறைகளை உள்வாங்க முயற்சி செய்யவும்.


அசுரன்.

Anonymous said...

என்னமோ இவங்க இல்லென்னா இந்து மதமும், பார்பனியமும், தமிழகமும் இருண்டுடும்னு ஒரு கும்பல்....எதிர் தரப்பில் என்னமோ இவங்களுக்கு சாதி, மத வெறி இல்லாதமாதிரி....

அட போங்கப்பா வெங்காயங்களா...சும்மா இந்த எழவ படிச்சி, படிச்சி புளிச்சு போச்சு....
இந்த இரண்டு குருப்புக்கும் இது தவிர ஒன்னும் எழுத வராதா....

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com