Sunday, November 12, 2006

தலித்மக்கள் நிலை ஒளிப்படம்...

இந்தியாவில் சக மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது பற்றிய ஒரு ஒளிப்படம். சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டு CNN/CBC யில் காட்டப்பட்ட இந்த ஒளிப்படம் 14 நிமிடங்களில் நீங்கள் நேரில் சந்தித்திராத ஒரு சூழலுக்கு அழைத்துச் செல்லும்... இந்தியா வளர்கிறது, ஒளிர்கிறது என்பதற்கு இது சாட்சியா? பார்ப்பனீய வர்ணாஸ்ரமம் அழிந்து விட்டதன் அடையாளமா? முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்... உங்கள் மன உணர்வுகளை பதியுங்கள்...

வீடியோவை காண இங்கே அழுத்தவும்: இந்தியாவின் தலித்மக்கள்

நன்றி: CNN / CBS, கூகிள் வீடியோஸ்

4 பின்னூட்டங்கள்:

வசந்த் said...

திரு அவர்களே,

இப்போதுதான் உங்களுடைய "வலையுலகமும் சமூகக் கடமையும்... " பதிவு படித்தேன். அதற்குள் அடுத்த பதிவா!!!!!!!!!!!!. பொறுமையாக் பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

வசந்த்

மாசிலா said...

பார்த்தேன்.
உதவிக்கு நன்றி.

"உனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன,
எழுந்திரு மடையா! தூங்காதே!
போய் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய்!"
என என் மண்டையில் ஓங்கி
செருப்பால் அடித்திருக்கிறீர்.

பாவம் இம்மக்கள். என் மக்கள். என் இரத்தம். அக்குழந்தைகள், பெண்கள்
அந்த பிணங்கள், அழுகைகள், மனம் தாங்கவில்லை.

பாரதத்தின் 'அழகை' படம்போட்டு காட்டிய அந்த அம்மையார் வாழ்க.

Anonymous said...

shame to be indian

don't matter wheather your guys are good in software or become super in south asia
But don't know how treat humans aND YOUR OWN PEOPLE

shame shame shame

வசந்த் said...

திரு அவர்களே,

// உனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன,
எழுந்திரு மடையா! தூங்காதே!
போய் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய்!"
என என் மண்டையில் ஓங்கி
செருப்பால் அடித்திருக்கிறீர் ///

இதேதான் எனது கருத்தும். இதை பார்த்து விட்டு ஒரு நிமிடம் மட்டும் உச்சு கொட்டிவிட்டு செல்வதற்கல்ல உங்கள் பதிவு என் நினைக்கிறேன்.

//பாவம் இம்மக்கள். என் மக்கள். என் இரத்தம். அக்குழந்தைகள், பெண்கள்
அந்த பிணங்கள், அழுகைகள், மனம் தாங்கவில்லை //

பாவம் எம்மக்கள்.. பீக்கூடை தூக்கியே முதுகு குணிந்தவர்கள். இந்த பதிவிற்கு "கண்ணீர் விட்டால் நான் பொறுப்பல்ல" என்ற தலைப்பும் பொருந்தும் என நினைக்கிறேன்.

இது சம்மந்தமாக கீற்று வலைத்தலத்தில் ஒரு பதிவு ஒன்று படித்தேன் (http://keetru.com/dalithmurasu/oct06/meena.html ) . இதிலும் மனதை கசக்கும் புகைப்படம் ஒன்று உள்ளது. என்று வரும் விடிவு காலம் என் மக்களுக்கு.....

வசந்த்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com