தொடராத பொழுது போக்குகள்
பொழுது போகாத நேரத்தில் எதாவது புதுசா செய்ய முயற்சி பண்ணுவேன். கொஞ்சம் காலம் ஒழுங்கா அதைச் எய்யுறது பிறகு நிறுத்தி வைக்கிறது என ஒரு கெட்ட பழக்கம். கார்ட்டூன், படம் வரைய ஆரம்பிச்சது பாதியில நிறுத்தி வச்சிருக்கேன். ஒழுங்கா தொடர்வது சமையல் மட்டும் :).
பலவிதமான கற்களை சேர்த்து காதணி செய்யும் பழக்கம் இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கு. தென்னாப்பிரிக்கா போய் வரும் போது ஜோகன்னஸ் விமானநிலையத்தில் இருக்கிற கைவினைப்பொருட்கள் கடையில கிடைத்த inspiration. அந்த கடையில் இருந்த அணிகலன் அனைத்தையும் செய்தது வேலைவாய்ப்பில்லாத ஒரு பெண்கள் அமைப்பு. அதில் இருந்த வர்ணங்களின் சேர்க்கை, நேர்த்தியான இணைப்புகள், கற்பனை வளம், படைப்பு திறன் எல்லம் நம்மளையும் இழுத்து போட்டுதா. அப்புறம் என்ன வழக்கம் போல சொந்த முயற்சியில் தேடல் தான்.
கற்கள், அதற்கான கம்பிகள் என பல விதமான பொருட்கள் வாங்கி காதணி செய்ய துவங்கியாயிற்று! காதணி செய்கிற வேளை பொறுமையா இருக்க கற்றூக் கொண்டேன். ஊரில் இருந்த நாட்களில் நகைக்கடை நடத்திக் கொண்டிருந்த 2 பேர் நட்பு கிடைத்தது. அந்த நாட்களின் நினைவுகளை மனது அசை போடுகிறது. கைவினைக் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் நகை செய்யும் தொழிலாளர்கள். எந்திரங்கள் வரவு பொலிவான, இலகுவான நகைகளை உருவாக்கி தந்தாலும் இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை நிலை பரிதாபமான சூழலில்...ம்ம்ம்ம்
இதுவரை செய்த காதணிகளில் சில இங்கே படங்களில். இதுவும் எதுவரை தொடருமோ...
4 பின்னூட்டங்கள்:
//இதுவரை செய்த காதணிகளில் சில இங்கே படங்களில்.//
செய்தியை காதில போடாமல் கண்ணுல போட்டுடிங்க !
:)
VERY CUTE.Evalavu rupakku tharuveenga.Mmm
Pavi.
நல்லா இருக்கே...
//VERY CUTE.Evalavu rupakku tharuveenga.Mmm//
உங்களிடம் ரூபா எல்லாம் வாங்க மாட்டார் திரு. பரிசாகவே தந்துவிடுவார்.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com