Monday, November 27, 2006

பல்லாயிரம் மனிதர்களை காப்பாற்ற வாருங்கள்!

நண்பர்களே!

உங்கள் ஒருவரின் கையெழுத்தால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும்

6 இலட்சம் மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் கிடைக்கும்...

பல ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல இயலும்...

பலஆயிரம் உயிர்கள் நோயிலிருந்து காப்பாற்றப்படும்
...


இவை அனைத்தும் நமது அருகில் வடகிழக்கு இலங்கையில்!


இலங்கைத்தீவில் A9 சாலையை மூடி சக மனிதர்கள் 6 லட்சம் பேரை பட்டினிச்சாவின் விளிம்பில், அபாயகரமான சூழலில் தள்ளியிருக்கிறது இலங்கை அரசு!
அப்பாவித் தமிழர்கள் வாழ்வை பற்றி நமது கவலையையும், அக்கறையையும் ஒன்று சேர்ப்போம்!
நமது தமிழக தொலைக்காட்சிகளும், அரசியல் அரங்கும் செய்ய தவறியதை நமது கையெழுத்துக்களால் சாதிப்போம்!
இது பற்றிய விரிவான செய்திகளுக்கு முந்தைய பதிவுகளை படியுங்கள்: மனிதாபிமான உதவி கேட்கிறேன்!
சர்வதேச அழுத்தம் கொடுக்க உங்கள் ஆதரவை பதிய:
முந்தைய பதிவுகளில் வந்த ஆலோசனைகளின் அடிப்படையில் சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டு சபைக்கும் ஒரு முறையீட்டு கடிதத்தை அனுப்ப வடிமைத்துள்ளோம். உங்கள் ஆதரவை பதிய சுட்டியில் அழுத்தவும்! http://www.petitiononline.com/TAMEELAM/petition.html உங்களிடமிருந்து திரட்டப்படுகிற தகவல்களின் இரகசியம் காக்கப்படும். அவை வேறு எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என உறுதியளிக்கிறேன். எந்த நாட்டவராக இருப்பினும் உங்கள் நண்பர்கள், உறவினர் எல்லோரையும் ஆதரவளிக்க அழையுங்கள்...

பிரித்தானியா வாழ் நண்பர்கள் பிரித்தானியா பிரதமருக்கு முறையிட ஏற்கனவே ஒருவர் பதிந்து இருகிற திரட்டியில் உங்கள் ஆதரவை கொடுக்க இங்கே அழுத்தவும்.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கிற நண்பர்களுக்கு வேண்டுகோள்!
உங்கள் உறவுகள், நண்பர்கள், ஊரார், பொதுமக்களிடமிருந்து கையெழுத்தினை காகிதத்தில் திரட்ட முயலுங்கள். இதன் வழி சில நூறு கையெழுத்துக்களாவது ஒன்று சேர்த்தால் தமிழக அரசினை வலுயுறுத்த நேரடியாக மனுவை சமர்பித்து நமது குரல்களை பதிவு செய்யலாம். காலத்தின் சூழலில் அயல்நாட்டிலிருப்பதால் உங்களிடம் இந்த உதவியை நாடுகிறேன். யாராவது முன்வந்து இந்த பொறுப்பை எடுத்தால் உதவியாக இருக்கும்.

பொருளாதார உதவி செய்ய:
தடைகளினால் நம்மால் எளிதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழியாக கூட பொருளாதார உதவிகளை கொண்டு சேர்க்க இயலாத நிலை. நீங்கள் பொருளாதார உதவிகள் செய்ய விரும்பினால் கீழ்காணும் நிறுவனங்கள் வழியாக செய்யலாம். இப்படியான இக்கட்டான காலங்களில் அபலைகளுக்கு உதவும்
http://www.troonline.org/volunteer.htm
http://www.opusa.org/ இந்த அமைப்பு பற்றி சுந்தரவடிவேல் அவர்களது பதிவை காண அழுத்தவும்

பத்திரிக்கையில் பணியாற்றுகிற/தொடர்புடைய நண்பர்களுக்கு,
உங்களால் இயன்ற வரை இந்த மனித அவலம் பற்றிய செய்திகளை வெளியிட முயலுங்கள்.

பல்லாயிரம் மனித உயிர்களை காப்பாற்ற நாம் எடுக்கிற நல்முயற்சி அனைவருக்கும் ஆறுதலை தரட்டும்.

-------------
பின்குறிப்பு:

ஆலோசனைகளும், ஆதரவும் வழங்கி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி! இரவு முழுவதும் தூங்காது இந்த முறையீட்டு மனு எழுதிய வேளை உதவிய இவ்வார நட்சத்திரம் பொன்ஸ்க்கு என் உளம் கனிந்த நன்றிகள்!

இன்னும் உங்கள் ஆலோசனைகளும், உதவியும் தேவை! ஆர்வமுடையவர்கள் தயை கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள் thirukk@gmail.com

அன்போடு,

திரு

17 பின்னூட்டங்கள்:

ஜோ/Joe said...

Nanri Thiru..Kaiyezhuthittirukkiren

கலை said...

நன்றி திரு. நானும் கையெழுத்திட்டுள்ளேன்.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி திரு.

குறுகிய நேரத்தில் வலையேற்றியமைக்கு.

கையெழுத்திட்டு விட்டேன்

இறையடியான் said...

ந்ண்றி நல்ல முயற்சி

Anonymous said...

ரொம்பவும் நல்ல முயற்சி திரு.

நன்றி பொன்ஸ்.

மொத்தம் 23 கையெழுத்துக்களே சேர்ந்துள்ளன.

வேறு என்ன செய்யலாம் திரு??

மலைநாடான் said...

திரு!
நன்றியெனக்கூறி உறவுகளை அந்நியமாக்கி விட விரும்பாத போதும், காலத்தே செய்யும் கருமத்தின் பெறுமானம் கருதி, இப் பணியில் ஈடுபடும், உங்களிற்கும், நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

thiru said...

//சபாபதி சரவணன் said...
ரொம்பவும் நல்ல முயற்சி திரு.

நன்றி பொன்ஸ்.

மொத்தம் 23 கையெழுத்துக்களே சேர்ந்துள்ளன.

வேறு என்ன செய்யலாம் திரு??//

உங்களது தொடர்புகள் அனைவருக்கும் வேண்டுகோள் எழுப்புங்கள் நண்பரே! முடிந்த அளவு எண்ணிக்கையில் சேகரிப்போம்.

ஸ்ரீ சரவணகுமார் said...

நல்ல முயற்சி,
நம்மால் இயன்றவரை கையெழுத்துக்களை சேகரிப்போம்

பொன்ஸ்~~Poorna said...

இப்போது தான் நாற்பதை எட்டி இருக்கிறது :(

thiru said...

//கொண்டோடி said...
'இனியும் சிங்களதேசத்தையும் சர்வதேசத்தையும் நம்பிப் பலனில்லை. தனிநாடு ஒன்றே தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு எம்மை அவர்கள் தள்ளிவிட்டார்கள். அந்தச் சவாலைச் சந்தித்து வெற்றிபெறுவோம்' என்று இன்றைய மாவீரர்நாள் உரையில் பிரபாரகன் சொல்லியுள்ளார்.....அதுவே போதுமானது. 11/27/2006 02:38:11 PM //

நண்பரே!

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இன்றைய பேச்சு பற்றியதல்ல இந்த பதிவு.
மக்கள் படுகிற மனித அவலத்தை முன்வைத்து மட்டுமே இந்த பதிவில் கவனம் செலுத்தப்படுகிறது.

இனி, புகார் சம்பந்தமான பின்னூட்ட கருத்துக்களை மட்டுமே இந்த பதிவில் அனுமதிப்பேன்.

புரிதலுக்கு நன்றி!

Anonymous said...

மிகவும் நல்ல முயற்சி. இது வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஓட்டளித்தது, ஒரு நன்மையான காரியம் செய்த திருப்தி.

Akilan said...

Signed
best wishes for you efforts...

Anonymous said...

இணைய முறையீட்டு புகாரை உருவாக்கிய திருவுக்கும் அவருக்கு உதவிய பொன்ஸ் அக்காவுக்கும் என் உளமார்ந்த நன்றி. நான் கையொப்பம் இட்டுவிட்டேன்.

thiru said...

நன்றி ஜோ. தொடர்ந்து நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!

கலை said...

நான் கையெழுத்து இட்டதுடன் எனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இதுபற்றி அறிவித்தேன். ஈழத் தமிழர்கள்மேல் இத்தனை அக்கறையுடன் செயற்படும் திருவுக்கும், அவருக்கு உதவிய பொன்ஸ் க்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தற்போது கையெழுத்து எண்ணிக்கை 1025 ஆகியுள்ளது.

நாமக்கல் சிபி said...

கையொப்பமிட்டு விட்டேன்.

எனது கல்லூரி நண்பர்கள் யாஹூ குழுமத்திற்கும் அனுப்பி வைத்துள்ளேன்.

நல்ல முயற்சி திரு சகா! பாராட்டுக்கள்.

இவ்விஷயத்தில் தங்களுக்கு உதவிய பொன்ஸ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Anonymous said...

good on you mate ! i will do anything to save my people and my country. thanks a lot !!!!!!!!!!1

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com