மனுதர்ம குப்பை!
மனு ஸ்மிருதியை பஞ்சகட்சம் கட்டி அலங்கரித்து புனித வட்டம் சூட்டி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள் சிலர். மனுதர்ம குப்பையை அள்ளியெடுத்து பூசிக்கொள்வது மட்டுமல்ல; நீங்களும் பூசிக் கொள்ளுங்கள் சந்தனமாக மணக்கிறது என கூக்குரலிடுவது அவர்களுக்கு பிடித்திருக்கிறது. ஆதிக்கச்சாதி மனம் கொண்டவர்களிடம் ஒடுக்கப்பட்டவர்களின் நீதியை எதிர்பார்க்க முடியாது தான். அதற்காக ஆதிக்கச்சாதியினரின் கருத்து தான் உண்மை என்றாகி விடாது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்கவும் மனிதர்கள் உள்ள காலமிது. திண்ணையில் திரு. மலர்மன்னன் என்பவர் சமீபத்தில் மனு தர்மத்தை ஆதரித்து மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தார்.
- மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை முழுவதும் புரிந்துகொள்ளவில்லை.
- சமஸ்கிருத மூலத்திலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு உள்நோக்கமுடையது. ஆங்கில வழி கல்வியால் ஊட்டப்பட்டதை நம்மவர்கள் நம்பி பயன்படுத்துகிறார்கள்.
- மனுதர்மத்தில் இடைச்சொருகல்கள் உள்ளன அவற்றை வேறுபடுத்தி பார்க்காமல் பார்ப்பனீய மதத்தை எதிர்க்க பயன்படுத்துகிறார்கள். இடைச்சொருகல்களை பிரிந்து பார்த்து நல்லவனவற்றை ஏற்கலாம்.
என மனு தர்மத்தை எதிர்ப்பவர்களை குறைகூறும் விதமாக அந்த கட்டுரைகள் அமைந்திருந்தன.
"சமஸ்கிருதம் படித்த அறிவாளி அம்பேத்கருங்கூட ஒரு மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக மனு ஸ்மிருதி நூலின் பிரதியைக் கொளுத்தியிருக்கிறார். மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டித்தான் தீண்டாமைக் கொடுமைகள் நியாயப்படுத்தப்படுவது போன்ற ஒரு பிரமையை அவர் தோற்றுவித்திருக்கத் தேவையில்லைதான். மனு ஸ்மிருதி என்கிற பெயரையே கேள்விப்படாத அடித்தட்டு மக்களால்தான் தீண்டாமைக் கொடுமைகள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன என்பதை அறியாதவரல்ல, அம்பேத்கர்." இது மலர்மன்னன் எழுதிய கட்டுரையின் பகுதி.அண்ணல் அம்பேத்கார் சமஸ்கிருதம் கற்று தனது சொந்த அறிவால் மனுஸ்மிருதியை, வேதங்களை பல ஆண்டுகளாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் எடுத்த கொள்கைப்போர் தான் மனுஸ்மிருதியை எரித்தது. அரைவேக்காட்டுத்தனமாக அம்பேத்கார் மீது சேற்றை வாரி எறியும் மலர்மன்னன் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலை எழுச்சியையே கேலிசெய்கிறார். ஆதிக்கச்சாதி திமிரின் இந்த வெளிப்பாடு மிகவும் ஆபத்தானது. சாதிக்கொடுமைகளை கடைபிடிக்க மனுஸ்மிருதியை படிக்க அவசியம் இல்லை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். மேலிலிருந்து கீழாக படிநிலையில் அடக்குமுறைய சாதி அடுக்குகளாக வைத்து 'உன்னை விட அவன் தாழ்ந்தவன்' 'உன்னை விட நான் உயர்ந்தவன்' என வர்ணாஸ்ரம தர்மத்தை மனுதர்ம சட்டமாக்கி நடைமுறைப்படுத்தும் போது தனியாக படிக்க அவசியமில்லை தான். இந்திய குற்றவியல் சட்டங்களை பற்றி அறியாமலே பாமரனும் அதற்கு அடங்கி வாழ்கிறானோ அதே அடிப்படையில் தான் மனுதர்மமும் இயங்குகிறது. சாதி அடிமைத்தனத்திற்கு காரணமான பார்ப்பனீய மதத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் அடையாளம் தான் மனுதர்மத்தை அம்பேத்கார் எரித்த போராட்டம். மனுதர்மம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அடிமை சங்கிலி எனவே அதை கடைபிடிக்க அவசியமில்லாத குப்பை என மக்களுக்கு உணர்த்த மனுதர்மத்தை எரித்தல் அவசியமாகிறது. மனுதர்மத்தால் பலன் பெற்ற/பெறும் மலர்மன்னனுக்கும் அவரது சகாக்களுக்கும் மனுதர்மம் அவசியமாக இருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த மனுதர்ம குப்பை அவசியமில்லை.
"மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்."என்கிறார் மலர்மன்னன்.
மலர்மன்னன் 10வது அத்தியாயத்தில் 65வது விதியை சுட்டிக்காட்டி 'பிறவியின் பயனாக வர்ணம் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில் தான் நிற்ணயிக்கப்படுகிறது' என்பது ஒருவித மேதாவித்தனமான் மோசடி.
மனுதர்மத்தின் ஒரு விதியை மட்டும் தனக்கு சாதகமாக பிரித்து பயன்படுத்தும் மலர்மன்னனின் கயமை வெளிப்படுகிறது. மனுதர்மத்தை படிக்கும் போது முந்தைய, பிந்தைய பகுதிகளோடு தொடர்பு படுத்தி தான் படிக்க முடியும். தொடர்பு இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனுதர்ம விதிகளை 'பொறுக்கி' எடுத்து உதாரணம் காட்டும் செயலில் மனுதர்மத்தை 'புனித பண்டமாக' மாற்றும் நோக்கம் வெளிப்படுகிறது. மனுவின் ஒரு விதிக்கு முன்னரும், பின்னரும் சொல்லப்பட்ட விதிகள் தொடர்ச்சியான நெருக்கமான தொடர்பு உண்டு. எந்த சூழ்நிலையில் பிராமணன் தனது நிலையில் தாழ்வான் என மனுதர்மம் குறிப்பிடுகிறது என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.
மனுதர்மத்தின் 10வது அத்தியாயம் (நேரமும், ஆர்வமும் உடையவர்கள் சுட்டியில் முழு பகுதியையும் படித்து அறிந்துகொள்ளலாம்) 131 விதிகளில் நான்கு வர்ணங்களையும், அதன் கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் குறிப்பிடும் பகுதி இது.
10வது அத்தியாயத்தின் 64 வது விதியில்
64. If (a female of the caste), sprung from a Brahmana and a Sudra female, bear (children) to one of the highest caste, the inferior (tribe) attains the highest caste within the seventh generation.
அதன் தொடர்ச்சியாக 65வது விதியில்
65. (Thus) a Sudra attains the rank of a Brahmana, and (in a similar manner) a Brahmana sinks to the level of a Sudra; but know that it is the same with the offspring of a Kshatriya or of a Vaisya.
இந்த 65வது விதியை தான் மலர்மன்னன் சிலாகித்து 'பிறப்பின் அடிப்படையில் அல்ல; குணநலன்களின் அடிப்படையில்' என எழுதியிருந்தார். குணநலன்களாக இந்த பகுதியில் எதை குறிப்பிடுகிறது மனுதர்மம்? அதை தெரிய தொடர்ந்து வரும் விதிகளை படிப்பது அவசியம்.
பிராமணனுக்கும், சூத்திர பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை; அல்லது பிராமண பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறக்கும் குழந்தை இருவரில் யார் உயர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டால், (மனுதர்மம் 10 அத்; 66)
'பிராமணனுக்கும், சூத்திர பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை பிறப்பின் உயர்வால் பிராமணனாக கருதப்படலாம். பிராமணப் பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறக்கும் குழந்தை பிராமணனாக அறியப்படாது.' என்பதே முடிவாகும். (மனுதர்மம் 10 அத்; 67)
முதலாவது குழந்தை ('பிராமணனுக்கும், சூத்திர பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை) பிறப்பில் தாழ்ந்ததாலும், இரண்டாவது (பிராமணப் பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறக்கும் குழந்தை) சாதி அமைப்பின் விதிகளை மீறிய (பெற்றோர் இணைந்ததால்) காரணத்தால் இருவரும் வேத சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்பதே சட்டம். (மனுதர்மம் 10 அத்; 68)
சாதிக்கலப்பில் பிறக்கும் குழந்தை இழிவானதாக மனுதர்மம் சொல்லுகிறதா இல்லையா? சாதிக்கலப்பை மீறுவது குற்றமாக மனுதர்மம் கருதுகிறதா இல்லையா? மேற்காணும் விதிகளில் பிறப்பின் அடிப்படையில் உறவுகளை தீர்மானிக்காமல் எந்த அடிப்படையில் தீர்மானிக்கின்றன? போகிற போக்கில் 'இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்' என அனுமானமாக சொல்லாமல் எந்த விதிகள் நல்லவை என மலர்மன்னன் விளக்க வேண்டும்.
'குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணம் அமைகிறது. பிறப்பின் அடிப்படையில் அல்ல' என்னும் மலர்மன்னனின் கூற்றை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் சில கேள்விகள் வருகின்றன. மனுதர்ம ஆதரவாளர்களே பதில் சொல்லுங்கள்.
- குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணப்படுத்தல் அமைகிறது என்றால், குறிப்பிட்ட அந்த குணநலன்கள் எவை?
- குறிப்பிட்ட அந்த குணநலன்கள் 'குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே' அமையுமா? இல்லை எல்லோருக்கும் பொதுவானதா?
- அந்த குணநலன்களை விதிப்பதும், காலத்திற்கேற்ப மாற்றும் அதிகாரமும் யாரிடம் இருந்தது? இருக்கிறது?
- குணநலன்களின் அடிப்படையில் தரம் பிரித்து வர்ணங்களை மாற்றி அமைக்கும் 'தரக்கட்டுப்பாட்டு முறை' எப்படி அமல்படுத்தப்பட்டது? எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை அது நடைபெறும்?
- குணம் உயர்ந்ததும் பிராமணனாக சூத்திரனை மாற்றியதற்கும், சூத்திரனாக பிராமணனை மாற்றியதற்கும் வரலாற்று ஆதாரங்கள் (புராணக் கதைகள் வேண்டாம்), நிகழ்கால சாட்சியங்கள் என்ன?
- குணநலன்கள் அடிப்படையில் கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரி இருள்நீக்கி சுப்பிரமணியம், அப்பாவி மக்களை படுகொலைகளை நிகழ்த்த ஆதரவளித்த நரேந்திர மோடி, கலவரங்கள் உருவாக காரணமான மசூதி இடிப்பை மேற்பார்வையிட்டு நிகழ்த்திய சங்கப்பரிவார தலைவர்களுக்கு வர்ணம் மாறிவிட்டதா? இப்போது அவர்கள் எந்த வர்ணத்தில் இருக்கிறார்கள்?
- அடுத்தவன் மலத்தை தின்ன வைக்கப்பட்டாலும், அடக்குமுறைகளை அனுபவித்து மனிதனாகவே அறமுடன் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்ண உயர்வு கிடைத்ததா? எங்கே? அந்த உயர்வால் அவர்கள் அடைந்த பயன் என்ன?
மனுவின் ஆதரவாளர்களே! இன்னும் கேள்விகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவற்றிற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!
20 பின்னூட்டங்கள்:
டாக்டரா பிறந்திருந்தாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா தான் டாக்டர்
டாக்டரா பிறக்கலைனாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா அவங்களும் டாக்டர் தான்…..
என்னங்க ஒன்னியும் பிரியலையா? சரி இப்போ இதை படிங்க
பிராமணராக பிறந்திருந்தாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் மட்டுமே பிராமணராக முடியும் பிராமணராக பிறக்கவில்லையென்றாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் அவர்களும் பிராமணர்களே– யஜீர் வேதத்தில் சொல்லப்பட்டதாக ‘சோ’ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இதையே மலர்மன்னனும் கீழ்கண்டவாறு சொல்லியிருக்கிறார்
//ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது.
//
ம்ம்...ம்..
உங்கள் கோபமும், கோபத்தின் நியாயமும் புரிகிறது.
சே! 64-ஐ மறைத்து விட்டால் 65 ஜெகஜோதியாகத்தான் தெரிகிறது.
உடைத்தமைக்கு நன்றி.மேலும் வருவதை எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்
////ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது.
//
ஆகா, என்னே ஒரு சாத்தியம்.
வியப்பில்லை எனக்கு!!!!!!!!!!!
;)
சாரா
1. மனுஸ்ருமிதியை தமிழில் மொழி பெயர்த்தவர் (அல்லது நான் படித்தது) திரிலோக சீத்தாராம். அவர் மொழி பெயர்ப்பில் வல்லவர். இந்திய தத்துத்துவ அறிவும், மொழி ஆளுமையும் கொண்டவர். அவரது புகழ்பெற்ற இன்னொரு மொழிபெயர்ப்பு ஹெர்மன் ஹெஸ் எழுதிய சித்தார்த்தா. அதை வாசித்தாலும் மொழிபெயர்ப்பாலரின் தத்துவ புலமையும் மொழி ஆளுமையும் விளங்கும்.
2. சாதிப்பிரிவுகள் குணங்களால் அமைந்தவை; பிறப்பால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவையே துணைக்கழைக்கிறார் அவர். சுட்டியை தேடிக் கிடைத்தால் தருகிறேன்.
3. இவைகளை மலர்மன்னன் அறியாதவர் அல்ல; (தன்னெஞ்சறிவது பொய்யற்க என்பதெல்லாம் தமிழில் இருக்கிறது!)
சில கேள்விகள்
தாங்கள் மனுஸ்ம்ருதியை படித்திருக்கிறீர்களா? பொருள் புரிந்ததா?
சும்மா மற்றவர்கள் சொன்னதை வைத்து ப்ளாக் போட்டு பஜனை செய்யாதீர்கள்.
நான் அதைப் படித்திருக்கிறேன். புரிந்துகொண்டுள்ளேன். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. நீங்களும் படித்துவிட்டு, புரிந்துகொண்டு வாருங்கள். விரிவாக விவாதிக்கலாம். அதன்பிறகு இருவரும் சேர்ந்து அதைப்பற்றிக் கருத்து சொல்லலாம்.
மற்றவர் ஏன் உங்களுக்கு பதில் சொல்லவேண்டும்? ப்ரதி ஒன்று வாங்கி உங்அளால் படிக்க இயலாதா?
சற்றும் சுயமாக படித்துணராதவர்கள் அதைப்பற்றி எப்படிப் பேசமுடிகிறது?
உங்களுக்கே அதன் அறிவீனம் புரியவில்லையா?
வெட்டியாக அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்வதை விட்டு, உங்களது சொந்த ஞானத்தில் அதாரிடியில் எதாவது சொல்லுங்கள். அப்போது கேட்கிறேன்.
//டாக்டரா பிறந்திருந்தாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா தான் டாக்டர்
டாக்டரா பிறக்கலைனாலும் எம்.பி.பி.எஸ், எம்.டி. பி.எஸ்.எம்.எஸ், ஆர்.எம்.பி யெல்லாம் படிச்சிருந்தா அவங்களும் டாக்டர் தான்…..
என்னங்க ஒன்னியும் பிரியலையா? சரி இப்போ இதை படிங்க
பிராமணராக பிறந்திருந்தாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் மட்டுமே பிராமணராக முடியும் பிராமணராக பிறக்கவில்லையென்றாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் அவர்களும் பிராமணர்களே–//
குழலி "டாக்டர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் டாக்டருக்கு படிச்சாத்தான் டாக்டர் ஆக முடியும். டாக்டர் குடும்பத்தில பிறக்கலைன்னாலும் டாக்டருக்கு படிச்சா டாக்டர் ஆக முடியும்." அப்படீன்னு எடுத்துக்குங்க. இது சும்மா வார்த்தை விளையாட்டு அப்படியும் ஆடலாம் இப்படியும் ஆடலாம். ஆனா இங்க முக்கியமான பிரச்சனையை விட்டுட்டீங்க. மனு ஸ்மிருதியில் சூத்திரன் பிராம்மணன் ஆக முடியுங்கறது சும்மா வர்ணத்தை மாத்திகிற சமாச்சாரமில்லைன்னு திரு காமிச்சுருக்காரு. இதுதான் முக்கியம்.
//சாதிப்பிரிவுகள் குணங்களால் அமைந்தவை; பிறப்பால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார்//.
Actually it's otherway arround ..
http://www.kamakoti.org/hindudharma/part20/chap2.htm
Thangamani you are wrong!!
சாதிப்பிரிவுகள் பிறப்பால் அமைந்தவை; குணங்களால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவையே துணைக்கழைக்கிறார் அவர். சுட்டி
http://www.kamakoti.org/hindudharma/part20/chap2.htm
http://www.kamakoti.org/hindudharma/part20/chap3.htm
http://www.kamakoti.org/hindudharma/part20/chap4.htm
Dear Thiru please go through this and translate this for all those
hindu nazis who says jati is based
on guna and fools us here
// குழலி / Kuzhali said...
பிராமணராக பிறந்திருந்தாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் மட்டுமே பிராமணராக முடியும் பிராமணராக பிறக்கவில்லையென்றாலும் கல்வி மற்றும் நற்குணங்கள் கொண்டிருந்தால் அவர்களும் பிராமணர்களே– யஜீர் வேதத்தில் சொல்லப்பட்டதாக ‘சோ’ எழுதிய எங்கே பிராமணன் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது,//
குழலி,
இப்படி குழப்பமாக பேசுவது 'சோ' போன்றவர்களுக்கு ஒரு கலை. இதை தான் அவரது ரசிகர்கள் அறிவுமேதாவித்தனமாக மெச்சி குளிந்து போகிறார்கள்.
உங்கள் கருத்திற்கு நன்றி!
// தருமி said...
ம்ம்...ம்..
உங்கள் கோபமும், கோபத்தின் நியாயமும் புரிகிறது.
சே! 64-ஐ மறைத்து விட்டால் 65 ஜெகஜோதியாகத்தான் தெரிகிறது.
உடைத்தமைக்கு நன்றி.மேலும் வருவதை எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்//
தனக்கு சாதகமானதை மட்டும் 'பொறுக்குவது' பார்ப்பனீயத்தின் யுக்தி. இங்கும் அதே. வருகைக்கு மகிழ்ச்சி அய்யா!
//Anonymous said...
////ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது.
//
ஆகா, என்னே ஒரு சாத்தியம்.
வியப்பில்லை எனக்கு!!!!!!!!!!!
;)
சாரா//
:) விளக்கமாக சொல்லியிருக்கலாம் சாரா.
//Thangamani said...
1. மனுஸ்ருமிதியை தமிழில் மொழி பெயர்த்தவர் (அல்லது நான் படித்தது) திரிலோக சீத்தாராம். அவர் மொழி பெயர்ப்பில் வல்லவர். இந்திய தத்துத்துவ அறிவும், மொழி ஆளுமையும் கொண்டவர். அவரது புகழ்பெற்ற இன்னொரு மொழிபெயர்ப்பு ஹெர்மன் ஹெஸ் எழுதிய சித்தார்த்தா. அதை வாசித்தாலும் மொழிபெயர்ப்பாலரின் தத்துவ புலமையும் மொழி ஆளுமையும் விளங்கும்.//
வருகைக்கு நன்றி தங்கமணி! கூடுதல் தகவல்கள் அறியத்தந்தீர்கள்.
//2. சாதிப்பிரிவுகள் குணங்களால் அமைந்தவை; பிறப்பால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவையே துணைக்கழைக்கிறார் அவர். சுட்டியை தேடிக் கிடைத்தால் தருகிறேன்.//
சொல்ல வந்ததை மாற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். காஞ்சி மடாதிபதி சொன்னது பிறப்பின் அடிப்படையில் தான் வர்ணம், குண அடிப்படையில் அல்ல.
//3. இவைகளை மலர்மன்னன் அறியாதவர் அல்ல; (தன்னெஞ்சறிவது பொய்யற்க என்பதெல்லாம் தமிழில் இருக்கிறது!)//
:)
//Deva Udeepta said...
சில கேள்விகள்
தாங்கள் மனுஸ்ம்ருதியை படித்திருக்கிறீர்களா? பொருள் புரிந்ததா?
சும்மா மற்றவர்கள் சொன்னதை வைத்து ப்ளாக் போட்டு பஜனை செய்யாதீர்கள்.
நான் அதைப் படித்திருக்கிறேன். புரிந்துகொண்டுள்ளேன். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. நீங்களும் படித்துவிட்டு, புரிந்துகொண்டு வாருங்கள். விரிவாக விவாதிக்கலாம். அதன்பிறகு இருவரும் சேர்ந்து அதைப்பற்றிக் கருத்து சொல்லலாம்.
மற்றவர் ஏன் உங்களுக்கு பதில் சொல்லவேண்டும்? ப்ரதி ஒன்று வாங்கி உங்அளால் படிக்க இயலாதா?
சற்றும் சுயமாக படித்துணராதவர்கள் அதைப்பற்றி எப்படிப் பேசமுடிகிறது?
உங்களுக்கே அதன் அறிவீனம் புரியவில்லையா?
வெட்டியாக அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்வதை விட்டு, உங்களது சொந்த ஞானத்தில் அதாரிடியில் எதாவது சொல்லுங்கள். அப்போது கேட்கிறேன்.
3/21/2007 11:25:00 PM//
Deva Udeepta,
வலைப்பதிவிற்கு புது வரவாக நீங்கள் இருப்பதால் முதலில் வரவேற்கிறேன் :). மனுதர்மத்தை படித்து, புரிந்து, கரைத்து குடித்த நீங்கள் அது பற்றியும் உங்கள் வலைப்பதிவில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
மனுவை நான் படித்திருக்கிறேனா என்பதற்கு எனது கட்டுரைகளிலும், கேள்விகளிலும் பதில் இருக்கிறது. பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் இந்த கேவலமான சட்டத்தை எனது மூதாதையர்கள் அறியாமல் அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதற்காகவே புரியாத மொழியில், மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த வன்கொடுமை சட்டங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்பதை எங்களது தலைமுறை அறியாமல் இல்லை.
இந்த பதிவில் என்னுடைய கேள்வி மனுவின் ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக மலர்மன்னனுக்கும் அவரது சகாக்களுக்கும். நீங்கள் அதில் ஒருவராக இருந்து பதில் இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இல்லையேல் ஓரமாக சென்று கவனியுங்கள். நேரடியாகவே கேட்டிருக்கிறேன். வாதத்திற்கு வருவதாக இருந்தால் இந்த பதிவிலேயே வாருங்கள். வீண் பேச்சுக்களும் அடையாளமில்லாத வேடங்களும் வேண்டாம்.
//Anonymous said...
குழலி "டாக்டர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் டாக்டருக்கு படிச்சாத்தான் டாக்டர் ஆக முடியும். டாக்டர் குடும்பத்தில பிறக்கலைன்னாலும் டாக்டருக்கு படிச்சா டாக்டர் ஆக முடியும்." அப்படீன்னு எடுத்துக்குங்க. இது சும்மா வார்த்தை விளையாட்டு அப்படியும் ஆடலாம் இப்படியும் ஆடலாம்.//
அனானி
சோ, மலர்மன்னனின் குழப்பமான வார்த்தை விளையாட்டை சுட்ட வேடிக்கையான சொற்றொடரை சொல்லியிருக்கிறார். கட்டுரையில் கருத்தில் மாறுபடவில்லை என தெரிகிறது.
//மனு ஸ்மிருதியில் சூத்திரன் பிராம்மணன் ஆக முடியுங்கறது சும்மா வர்ணத்தை மாத்திகிற சமாச்சாரமில்லைன்னு திரு காமிச்சுருக்காரு. இதுதான் முக்கியம்.//
மனுதர்மத்தில் சொல்லியுள்ளதை கட்டுரையில் மேற்கோளிட்டு காட்டியிருக்கிறேன். வர்ணகலப்பு ஏற்படும் வேளையில் பிராமணன் தாழ்ந்துவிடுவான் என மிரட்டுகிறது மனுதர்மம். இந்த மிரட்டல் வழி சாதிக்கட்டமைப்பை கட்டிக்காக்கிறது.
//Gopalan Ramasubbu said...
//சாதிப்பிரிவுகள் குணங்களால் அமைந்தவை; பிறப்பால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார்//.
Actually it's otherway arround ..
http://www.kamakoti.org/hindudharma/part20/chap2.htm//
கோபாலன், அனானி தங்கமணி பின்னூட்டத்தின் திருத்தங்களுக்கு நன்றி. நேரம் இருக்கும் போது காஞ்சி மட வலைப்பக்கத்தின் ஆங்கில பதிப்பின் சாரத்தை பதிவு செய்வேன்.
கேள்விக்கு பதில் சொல்ல ஆட்களை காணோம்.
படாது, படாது. இப்படி எல்லாம் சொல்லப்படாது. அவார்கள் இந்த ஸ்லோகம் எல்லாம் இடையில் சேர்க்கப்பட்டது என்று சொல்லிவிடுவார்கள்.
//சாதிப்பிரிவுகள் குணங்களால் அமைந்தவை; பிறப்பால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவையே துணைக்கழைக்கிறார் அவர். சுட்டியை தேடிக் கிடைத்தால் தருகிறேன்.//
மன்னிக்கவும். மேற்கண்ட என் பின்னூட்டம் பின்வருமாறு இருக்கவேண்டும். சுட்டிகளை எடுத்துத்தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.
//சாதிப்பிரிவுகள் பிறப்பால் அமைந்தவை; குணங்களால் உண்டானவை அல்ல என்பதை மறைந்த காஞ்சிப்பெரியவரே தெளிவாக அவர்களது காஞ்சி மட வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார். //
விடாதுகருப்பு said...
அருமையான கட்டுரை நண்பரே.
வேதம் படித்தாலும் சமஸ்கிருதம் படித்தாலும் எல்லாரும் பார்ப்பனர்தான் என்று ஜடாயு (திருத்தம்) என்பவரின் பதிவில் திருமலை, கால்கரி போன்றவர்கள் பிதற்றி இருந்தனர்.
....கத்தரிக்கோல் வைக்கப்பட்டது...
//மலர்மன்னன் 10வது அத்தியாயத்தில் 65வது விதியை சுட்டிக்காட்டி 'பிறவியின் பயனாக வர்ணம் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில் தான் நிற்ணயிக்கப்படுகிறது' என்பது ஒருவித மேதாவித்தனமான் மோசடி.
///
திரு இப்படி ஒரு கட்டுரை பதியப்பட்டதே எனக்கு தெரியாது. அதுவும் மலர்மன்னன் கோஸ்டி வர்ணாஸ்ரமம் குறித்து எந்த குறீபிட்ட வார்த்தைகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேனோ அதே வார்த்தைகள்.
குணம்தான் வர்ணத்தை தீர்மானிக்கிறது என்பதாகத்தான் வர்ணாஸ்ரமம் சொல்கிறது.
இதில் நமக்கு மாற்றூ கருத்து இல்லை. இதனை நோண்டும் விதமாக கேள்வி கேட்டுள்ளீர்களே அங்குதான் பாப்பன பய்ங்கரவாதிகளுக்கு ஆப்பு செருகப்பட்டுள்ளது.
அந்த குணங்கள் எப்படி உருவாகின்றன?
அய்யஹோ!... அவை ஒருவன் வாழும் சூழலால தீர்மானிக்கப்படுகின்றன. வாழும் சூழலோ பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்றன. இவையெல்லாம் தெரியாத திருடர்களா இந்த பார்ப்ப்ன பயங்க்ரவாதிகள். தெரிந்தாலும் கூட தமது இன்றைய இக்கட்டிலிருந்து விடுபடுவதற்க்காக மேல்நிலையாக்கம் மடைந்த பிற சாதியினரையும் பார்ப்பனாராகா மாற்றி வர்ண வர்க்க முரன்பாட்டை சரி கட்டும் முயற்சியில் தற்போது பார்ப்ப்னியம் ஈடுப்பட்டுள்ளது. அதனால்தான் நடுத்த்ர வர்க்க தலித் பார்ப்ப்னியத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலையும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆயினும் குணம், வர்ணம் என்ற இந்த சித்தாந்தம் அடிப்ப்டையில் பிறப்ப்னினடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் இயல்பு கொண்டது என்பதாலேயே கம்யுனிஸ்டுகளின் முதல் எதிரியாக நிற்கிறது.
நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.
அசுரன்
பிராமணன் இந்த சாஸ்திரத்தை மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்ககூடாது
அத் 1 ,சு 103
http://www.sacred-texts.com/hin/manu/manu01.htm
பிரம்மா இந்த உலகத்தை காப்பாற்றுவதற்கு த முகம் ,தோள் ,தொடை ,பாதம் இவைகளிலிருந்து உண்டான் பிராமண ,சத்திரிய ,வைசிய ,சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களை பகுத்தார்.
அத் 1,சு 87
http://www.sacred-texts.com/hin/manu/manu01.htm
பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாகியிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க (பிச்சை எடுக்க) அவனே பிரபுவாகிறான்.
அத் 1,சு 100
http://www.sacred-texts.com/hin/manu/manu01.htm
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com