பத்திரிக்கையாளர் மாலனுக்கு...
ஈழத்தமிழர், ஈழப்போராட்டம் பற்றியும் தாங்கள் வலைப்பதிவுகளில் எழுதியதை படித்து இந்திய தேசியம், இந்திய இறையாண்மை பற்றிய சில கேள்விகள் வருகின்றன. ஈழம் பற்றிய பதிவு எழுதுவதாக அறிவித்திருந்தீர்கள். இந்த சூழலில் ஈழத்தமிழர்களது பாஸ்போர்ட் பற்றி வேறு அக்கறைப்படுகிறீர்கள். தமிழீழ மக்களின் போராட்டங்களும், வேதனைகளும் வேடிக்கைக்காக எழுதவோ, பேசவோ வேண்டிய சாதாரண பிரச்சனையல்ல. இந்த நிலையில் பத்திரிக்கையாளர், பிரபலம் என்ற முத்திரை கொண்ட உங்களது வார்த்தைகள் எந்த அடிப்படையில் எழுகின்றன?
2002 ஆண்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை காலங்களின் போதே தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்துமஸ் அன்று இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏன்? ஆயுதம் தாங்கிய போராளியா அவர்? அப்போது என்ன யுத்தகாலமா? பேச்சுவார்த்தையில் கையை நீட்டிக்கொண்டே பேசும் தரப்பை உடைத்து துண்டாடும் 'சாணக்கிய' பார்ப்பனீய தந்திரத்தை சிங்கள அரசு கையாண்டு அதன் விளைவாக கருணா தலைமையில் துணைப்படையை உருவாக்கியது யாரை அச்சுறுத்த? யாருக்கு இதனால் இழப்பு? இன்றைய மோதல்களும், கட்டுகளற்ற வன்முறையும் உருவாக காரணமாக அமைந்ததே பேச்சுவார்த்தை நடக்கும் போது இலங்கை அரசு திரைமறைவில் நிகழ்த்திய இந்த கேவலமான அரசியல் விளையாட்டு தானே? துணைப்படைகளின் வெறியாட்டத்திற்கு பலியாவது அப்பாவி ஈழத்தமிழர்கள் தானே! நமெக்கன்ன? வீட்டு வாசலில்/வீதியில் 'வெள்ளை வேன்' எப்போது வருமோ என்ற மரண பயத்தில் கடத்தல் காரகளிடமிருந்து தப்பித்து பிழைக்கும் போராட்ட வாழ்க்கை கடலுக்கு அப்பால் வாழும் யாரோ சில மனிதர்களுக்கு தானே? நமக்கென்ன? இந்திய தேசிய/ இறையாண்மை அரசு தானே இந்த கடத்தல்கார படுகொலைகாரர்களின் நாயகர்களான சிங்கள அரசிற்கு மனித உரிமை பேரவையில் ஆதரவு கொடுத்தது?
பிரபல ஊடகவியலாளர் தராக்கி என்கிற சிவராம் அவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஏன்? யாரால்? ஊடக சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், மனித உரிமை, மாற்று அரசியல் பற்றி போதிக்க சிங்கள அரசுக்கு என்ன தகுதி? சிவராம் கொலை முதல் கடத்தப்பட்டும், எச்சரிக்கப்பட்டும் அடக்கப்படும் பலரது குரல்கள் கேட்கின்றன. சிவராமின் கல்லறையிலிருந்து எழும் பலமான கேள்விக்கு 'இந்து ராம்' மட்டுமல்ல; இலங்கை அரசின் பதிலும் மௌனமான கள்ளத்தனமே பதிலாக இருக்கும்.
செஞ்சோலையில் கடந்த ஆண்டு 51 குழந்தைகளை விமான குண்டுகள் பொழிந்து படுகொலை செய்யப்பட்டனர். யார் இந்த படுகொலைகளை நிகழ்த்தியது? சாகும் தருவாயிலும் அந்த மழலைகளின் குரல்கள் 'பெரியம்மா' எனவே கதறியிருக்கும். அந்த பெரியம்மா யார் தெரியுமா? நமக்கு இதெல்லாம் தெரிய அவசியமும் இல்லை.
உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருட்களை தடுத்து பொருளாதார தடையில் பசியால் வாடும் நிலைக்கு தள்ளி, அவர்கள் மீதே குண்டுகளை பொழிந்த பயங்கரவாத அரசை எதிர்ப்பது இந்திய இறையாண்மைக்கும், தேசியத்திற்கும் எதிரானது? அப்படிப்பட்ட மக்களுக்காக அய்யா.நெடுமாறன் அவர்களும் பலரும் திரட்டிய ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் வழி கூட அனுப்ப அனுமதி வழங்காமல் இருப்பதா இந்திய தேசியம்? இந்திய இறையாண்மை? அதே வேளை கொள்கையை மீறி இரகசியமாகவும், நேரடியாகவும் ஆயுதப்பயிற்சி, ஆயுதங்கள் என சிங்கள இராணுவத்திற்கு வழங்கும் கள்ளத்தனத்தின் பெயரா இறையாண்மையும், தேசியமும்? யாரை கொல்வதற்கு இவை? யார் மீது குண்டு பொழிய?
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வலைப்பதிவில் எழுதியிருந்தால் பொது விவாதத்தை எழுப்பியிருக்கும். ஈழத்தமிழர் பதில் சொல்ல இல்லாத பதிவர் பட்டறையில் ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட் பற்றிய உங்களது பேச்சின் அவசியம் என்ன? வலைப்பதிவுகளின் நன்னடத்தைக்கு உதாரணமாக நடந்த பல பெரிய பிரச்சனைகள் இருக்க 'இந்து ராம்'க்கு கொடி பிடிக்க வசதியாக களத்தை பயன்படுத்தியது உங்களது ஊடக அனுபவ பலம். 'தானாடா விட்டாலும் தன் தசையாடும்' என்பார்கள்.
//விடுதலைப் புலிகளை விமர்சிப்பது கூட இலங்கை அரசை ஆதரிக்கும் செயலாகிவிடக் கூடும் என்று நீங்கள் வாதிடலாம். அதே அடிப்படையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போரை ஆதரிப்பது, இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் இவற்றை பலவீனப்படுத்தும் என்பதனால் அதை எதிர்ப்பது சரிதான் என்றாகிவிடும்.//
இது உங்களது பதிவில் இட்ட பின்னூட்டத்தில் கண்டவை. உங்களது இந்த பின்னூட்டம் தடா/பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் குரலையொத்து அமைகிறது. இது தான் பத்திரிக்கையாளனின் கடமை?
விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை ஆதரிப்பது இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்னும் கருத்தாக்கத்தை பலவீனப்படுத்தும் என்பது எதனடிப்படையிலான வாதம்? இந்திய இறையாண்மையின் வரையறை என்ன? தமிழக அரசியல் தலைமைகளில் பலரும், பெரும்பான்மை தமிழக மக்களும் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தை 1970களிலிருந்து வெளிப்படையாகவும், (சட்டரீதியான அடக்குமுறை காலங்களில்) மறைமுகமாகவும் ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவாளர்கள் அனைவரும் இந்திய தேசிய மாயையை எப்படி பலவீனப்படுத்தினார்கள்? தமிழக மக்கள் இந்திய தேசிய சோதியில் ஐக்கியமானார்களே தவிர தங்களுக்கென தனியான அரசியலை, கட்டமைப்புகளை நிலைநிறுத்தவில்லை. மாநில சுயாட்சி உரிமையை பேசியவர்கள் கூட காலப்போக்கில் டெல்லி வாலாக்களாக மாறியது தான் நடந்தது. இந்திய இறையாண்மைக்கு இதில் எங்கே ஆபத்து?
இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? மாலனுக்கு தெரிந்த 'இரகசியத்தை' சொல்வாரா? அடுத்த இலங்கை ரத்னா விருது உங்களுக்கு கொடுத்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
20 பின்னூட்டங்கள்:
திரு,
நல்ல பதிவு. மிக்க நன்றி.
// இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? //
அது
/* இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? */
நான் கேள்விப்பட்ட தகவலொன்றையும் [உறுதிப்படுத்தப்படாத தகவல்] இங்கே
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.
ஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.
இந்திய நடுவண் அரசு, ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளைச் செய்து வரும் போதும் விடுதலைப் புலிகள் இந்திய நலனுக்கு எதிராகப் பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ தொடர்பு வைப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
ஆனால், புலிகளாலும், ஈழமும் இந்திய நலனுக்கு எதிரானது எனும் மாயையை ஒரு குறிப்பிட்ட சாதியினரும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த தகவற் தொடர்பு சாதனங்களும் பரப்பி வந்தன. வருகின்றன. அரசியலை நன்கு அறிந்தவகளுக்கு இது எப்படிப்பட்ட மாயை என்பது தெளிவாகப் புரியும்.
வெற்றி,
நீங்கள் குறிப்பிட்டதுபோல நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல பி.ஜே.பி எதிர்க்கட்சியில் இருந்த போது புலிகளிடம் தம்மை ஒரு இந்துஅமைப்பாகவும் பெளத்தத்துக்கும் அதற்கு ஆதரவுதெரிவிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டமே ஈழப்போரென்றும் பிரகடனப்படுத்தச் சொல்லியும் கேட்டார்கள் என்றும் அறிந்தேன். அதற்கு புலிகளோ தாம் ஒரு மதம் சாராத அமைப்பு என்றும் தம்முடன் ஆரம்ப காலத்திலிருந்தே மிகப்பல கிறிஸ்தவர்கள் இப்ப்போரில் இணந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுகூட போராட்டத்தில் ஆதரவளிக்கும் கிறிஸ்துவர்கள் , முக்கியமாக பாதிரிகள் அவ்வாறே செய்யும்படியூம் தாம் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்து தமக்கு தமிழர் விடுதலை பெறுவதே முக்கியம் எனக்கூறினர் எனவும் அறியக்கூடியதாக இருந்தது. எனினும் புலிகள் எடுத்த முடிவு தூரநோக்குள்ளதே என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டுப் பார்ப்பனப் பத்திரிக்கைகளும்,பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொள்வோரும் உண்மையான தமிழ்,தமிழின எதிரிகள்.
தமிழால்,தமிழர்களிடமே உஞ்ச விருத்தி செய்து கொண்டு தமிழ்,தமிழின உணர்வு,தமிழினத் தலைவர்கள் பற்றி அவதூறு செய்வதையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் வெட்கக் கேடு.
இதுவே ஈழத்தில் அல்லள் படுவோர் பார்ப்பனர்களாக இருந்திருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள்?
இந்தியா,இந்தியா என்று இவர்கள் வாழ்க்கைக்குப் பாது காப்பு தேடிக் கொள்வது தவிர,இந்தியாவில் பொருளாதாரக் கொள்ளை மற்ற பெரிய அநியாயங்களில் முன்னிற்பது இந்தக் கும்பல் தான்.
திரு !!
///இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? ///
இல்லை என்பதே என் பதில்...!!! ஆனால் இப்படி கும்முவதை அனுமதிக்க முடியாது. என் பங்குக்கு மாலன் ஆதரவு பதிவு இடபோகிறேன் :)))
திரு அண்ணா , காத்திரமான கேள்விகள். மனித உரிமை பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் வாய் கிழிய பேசும் இவர்களின் இயந்திர குரல்கள் "எழவுகளை" வர்னனை செய்யவே சரி. எத்துனை முறை சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
இதோ தாய் தமிழகத்தில் இருந்து முழங்குகிறோம்
"ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங்கள் ரத்தம் "
எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயர் கண்டு கலங்கக்கூட உரிமையில்லையா ?
சரியான நேரத்தில் பதிவிட்டு கடமையாற்றியதற்கு நன்றியண்னா !
வெற்றி,அனானி, தமிழன் வருகைக்கு நன்றி!
//செந்தழல் ரவி said...
திரு !!
///இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? ///
இல்லை என்பதே என் பதில்...!!! ஆனால் இப்படி கும்முவதை அனுமதிக்க முடியாது. என் பங்குக்கு மாலன் ஆதரவு பதிவு இடபோகிறேன் :))) //
:)) ரவி, தாராளமா போடுங்க. இது மாலனிடமிருந்து தெளிவு பெற எழுப்பிய கேள்விகள் தான். மாலனோ அல்லது யாராவது தனிப்பதிவாகவோ, இந்த பதிவிலோ இது சம்பந்தமான விவாதத்தை தொடரலாம்.
வருகைக்கு நன்றி செந்தில்!
ஈழத்தமிழர் பிரச்சனையை தமிழகத்திலிருந்து/இந்தியாவிலிருந்து சிலர் தவறாக பேசியும், எழுதியும் வரும்வரை அதற்கான மறுப்புகளும் தமிழகத்திலிருந்தே வரும்.
//இல்லை என்பதே என் பதில்...!!! ஆனால் இப்படி கும்முவதை அனுமதிக்க முடியாது. என் பங்குக்கு மாலன் ஆதரவு பதிவு இடபோகிறேன் :)))//
சரி. அங்கே வந்து உங்களையும் சேர்த்தே கும்முகிறோம்.
திரு!
நல்ல பதிவு; இவை உங்களின் எழுத்தில் வரும்போது;தனித்துவமானதாகிறது.
மற்றும் சங்கராச்சாரி;ராம்;குருமூர்த்தி;சோ;சுஜாதா;இந்த மாலன் இவர்கள் ;தங்களைத் தமிழராகக் கருதுவதில்லை.
அதனால் தமிழராகிய எங்களில் நெருப்புக் கக்காவிடில்;திருப்தியடைய மாட்டார்கள்.
//சங்கராச்சாரி;ராம்;குருமூர்த்தி;சோ;சுஜாதா;இந்த மாலன் இவர்கள் ;தங்களைத் தமிழராகக் கருதுவதில்லை. // சொல்லவே இல்ல.. இப்படி எப்ப சொன்னாங்கன்னு... பின்ன அவங்கல்லாம் யாராம்??? ஏம்ப்பா இப்படிபொத்தாம் பொதுவா என்னத்தயாவது ஒளரி கொட்டுறீங்க மோஹன்தாஸ்??? மற்றபடி திரு எழுப்பிய ஒவ்வொறு வினாக்களுக்கும் மாலன் பதில் த்ந்தே ஆக வேண்டும்.. அவர் எழுதியதெல்லாம் உன்மை என அவர் நம்பினால்.
//இதோ தாய் தமிழகத்தில் இருந்து முழங்குகிறோம்
"ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங்கள் ரத்தம் "
எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயர் கண்டு கலங்கக்கூட உரிமையில்லையா ?
//
ரிப்பிட்டேய்..
Dear Thiru,
I ahven been unable to geta an answer for the following questions from die hard dravida fanatics like Lucky,Mekenthiran,Senthil etc;may be as another die hard Dravid creamy layer guy ,you can answer.
"Why do creamy layer dravida tamil OBCs always behave like compulsive sons of bitches?Why are they such chronic caste fanatics?Why do they have monumental arrogance?
திரு
வணக்கம். நச் பதிவு.
ஈழ் மக்கள் படும் துயரங்களுக்கு சக தமிழனாக ஆதரவு தரவேண்டும், அல்லது அவர்களது பிரச்சினையின் ஆழம் தெரியாமல் நாம் அவர்கள் உணர்வுகளை மேலும் கொச்சைப் படுத்த கூடாது! இதில் மாலன் போன்ற மக்கள் எந்த ரகம் என்பது சாரசரி தமிழனுக்கு தெரியும்.
மயிலாடுதுறை சிவா...
//Anonymous said...
Dear Thiru,
I ahven been unable to geta an answer for the following questions from die hard dravida fanatics like Lucky,Mekenthiran,Senthil etc;may be as another die hard Dravid creamy layer guy ,you can answer.
"Why do creamy layer dravida tamil OBCs always behave like compulsive sons of bitches?Why are they such chronic caste fanatics?Why do they have monumental arrogance?//
தொரைக்கு என்ன தமிழ் தெரியாதா? கேள்வி மாலனுக்கு. உங்களிடம் பதில் இருந்ததல் வாருங்கள் விவாதிப்போம்.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி! நாங்கள் திராவிடர்களாகவே இருந்து விட்டு போகிறோம். அதில் உனக்கென்ன குறை? ஈழத்தமிழர் உரிமை பற்றி பேசியதும் இடப்பங்கீடு பற்றி பேசுவது தான் பார்ப்பனீய தந்திரமா? இதில் திராவிடர்கள் என்ன செய்தார்கள்? பதிவு சம்பந்தமில்லாத எந்த பின்னூட்டமும் இனிமேல் அனுமதிக்கப் போவதில்லை.
//ஏம்ப்பா இப்படிபொத்தாம் பொதுவா என்னத்தயாவது ஒளரி கொட்டுறீங்க //
அப்பு பேரே போடுறீங்க இல்ல பதுங்கி அடிக்கிறீங்க!!
இவங்க கிட்ட போய் "தமிழில் பூசை"; சிதம்பரத்தில் தேவாரம்; தமிழில் பாடுவது ..;என்று சொல்லிப்பாரும்;
வெட்டியே போடுவாங்க.....போட்டவங்க தானே!!!!
அப்பு... நாங்களும் புத்தகம்;பத்திரிகை படிக்கிறோமுங்க..;
இவங்க என்ன?? எழுதுராங்க இவங்க உள்ளக் கிடக்கை என்ன? என்னு எங்களுக்கும் புரியும்.
இப்போ என் எழுத்தைப் பார்த்து ;ஒங்களுக்குப் புரிய வில்லையா?? அப்படி அவங்க எழுத்தும் எண்ணமும் நல்லாத் தெரிந்துதான் சொல்லுகிறோம்.
அவங்க நாமும் தமிழர் எனும் எண்ணமுள்ளவர்கள் என்றால் இவ்வளவு விடம் இலங்கைத் தமிழரில் கொட்டமாட்டார்கள்.
//இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.
ஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.//
வெற்றியிடம் சில கேள்விகள்:
எதற்கும் முந்நிலையெடுத்தபடி ஒரு அமைப்புக்குள் நிலவும் உறவுகள் குறித்துக் கதைக்கும் நீர் இவைகளைக் கொண்டோடியாக முன்னெடுக்கிறீரா?
பாகிஸ்தானுக்கும்,சீனாவுக்கும் ஏன் புலிகளை ஆதிரிக்கும் நோக்கம் இருந்தது-தமிழர்கள் மேலான கரிசனையாலா?
இந்தியாவென்பதன் நலன்களைப் பாதிப்பதென்பதைப் புலிகள் புரிந்து,இந்தியாவோடு நட்புப் பாராட்டுவது தமிழகத்துத் தமிழர்களுக்காகவானதாக இருக்குமா?
தமிழக்கத்துத் தமிழர்கள் அங்கமாக இருக்கிறார்களா அல்லது அடக்கமாக(அடக்கி...) இருக்கிறார்களா?
ஓரு கோடிக்குள் எத்தனை இலட்சங்கள் அடக்கம்?
அறுபது மில்லியன்களும் அறுபது இலட்சங்களும் ஒன்றா?-ஆறு கோடி மக்கள் தமிழ் நாட்டிலிருப்பதாகக் கூறினால் அங்கே அறுபது இலட்சம் மக்கள் இருப்பதென்றா அர்த்தம்?
அவசரப்படாது சிந்திக்கவும்!
உங்கள் அறுவடைகள் தலையில் நெருப்பை அள்ளியபடி அலையும் உங்களாலேயே சாம்பாலாகிவிடப் போகிறது.நம்ம காலம்...
//எதற்கும் முந்நிலையெடுத்தபடி ஒரு அமைப்புக்குள் நிலவும் உறவுகள் குறித்துக் கதைக்கும் நீர் இவைகளைக் கொண்டோடியாக முன்னெடுக்கிறீரா?//
என்னைப்போய் என்னத்துக்கு இதுக்க இழுக்கிறியள்? (இராமின் மகளை யார் முதலில் இழுத்தது எண்டு போட்டியே நடக்குது. இதுக்குள்ள என்னையும் இழுக்கிறியள்)
நான் வெற்றி என்ற பெயரில் எழுதுவதில்லை. அவர் வேறு நான் வேறு.
உங்கட எல்லாக் கேள்வியும் சரிதான். ஆனால் கடசிக் கேள்வி தேவையில்லாதது. என்ன ஒரு பூச்சியத்தைக் குறைச்சுப்போட்டார். இது எல்லாருக்கும் நடக்கிறது தானே?
//அறுபது மில்லியன்களும் அறுபது இலட்சங்களும் ஒன்றா?-ஆறு கோடி மக்கள் தமிழ் நாட்டிலிருப்பதாகக் கூறினால் அங்கே அறுபது இலட்சம் மக்கள் இருப்பதென்றா அர்த்தம்?//
திரு,
நல்ல பதிவு. உங்கள் மண்ணில் 7 வருடங்கள் வாழ்ந்தவன். அன்று பத்திரிகைகளை எதிர்த்து கருத்து தெரிவிக்க இப்படி ஊடகங்கள் இருக்கவில்லை. இப்போது நீங்கள் எழுதும் கருத்து பலரை சேரும் என்பது நடை முறை யதார்த்தம், தமிழனின் உணர்வை மழுங்கடிக்கவே தேசிய சிந்தனை என்ற போர்வையில், தமிழனின் குரல் வலை நசுக்கப்படுகின்றன.
நன்றிகள்.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com