சென்னையில் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த பத்திரிகை ஊழியர் மரணம்!
ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் சென்னையில் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே புலியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் முத்துக்குமரன். இவர் பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் கவிதா நடத்தும் பெண்ணே நீ மாத இதழில் டி.டீ.பி. ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் இன்று காலை 10.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அலுவலகம் அருகே 10 லிட்டர் மண்ணென்ணெய்யோடு சென்றார். அப்போது 10 லிட்டர் மண்ணென்ணெய்யையும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி, தீக்குளித்த முத்துக்குமரனை தடுத்து நிறுத்தி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால் முத்துக்குமரனின் உடல் தீக்குளித்ததில் பெரும் காயங்கள் ஏற்பட்டு, தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துக்குமரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முத்துக்குமரனின் இந்த தீக்குளிப்புச் சம்பவம் ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முத்துக்குமரனின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பெரும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் மரணம்
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்தார்.
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
செய்தி: நக்கீரன்
32 பின்னூட்டங்கள்:
மிகவும் வருத்தமாக உள்ளது.
ஈழத்திலே ஆயிரக்கணக்கான மாக்களை இழந்து தவிக்கும் பொது சென்னையிலும் ஒரு இழப்பா? தமிழக அரசியல் வாதிகளுக்கும் தங்கபாலு , மன்மோகன் சிங்க், சோனியா , போன்றோர்கள் இறந்த இந்த ஆத்மாவால் நிம்மதியாக இருக்கமுடியாது . ஈழத்திற்காக தன் உயிரையே விட்ட அந்த வீரனுக்கு வீர வணக்கங்கள்
மிகவும் அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டது.
தமிழின தலைவர்கள் என சொல்லிக்கொண்டு தம் குடும்பநலனிலேயே கருத்தாக இருப்பவர்களை நினைத்து வெட்கி தலைகுனிகிறேன்
மேலதிக தகவல்
உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.
இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.
மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.
இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
செய்தி: நக்கீரன்
we should kill as many as congress rascals!
தியாகி முத்துக்குமரனுக்கு என் அஞ்சலிகள்.
தமிழக உறவுகள் தீக்குளிப்பு போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
இலங்கை அரசோ அல்லது இந்திய நடுவண் அரசோ தமிழர்களின் உயிரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது என் கருத்து.
குறிப்பாக 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சிங்களப் படைகள் கொன்ற போதும், அதை கண்டிக்கக் கூட இல்லை இந்திய நடுவண் அரசு.
நெஞ்சு வலிக்கிறது! அந்தச் சகோதரனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.
எங்களுக்காக தமிழுறவுகளாகிய நீங்கள் செய்யும் போராட்டங்களுக்கு என்றைக்கும் உங்களுக்கு கடன்பட்டு இருப்போம். ஆனால் உண்ணாவிரதத்தாலோ, தீக்குளிப்பாலோ
என்ன பயனை அடைய முடியும் என்று விளங்கவில்லை. இதுபோன்ற செய்கைகளால் ஒருபோதும் நிலை நமக்கு சாதகமாகாது. தயவு செய்து போராட்டவடிவத்தை மாற்றி,
அரசியல்ரீதியாக செயல்பட்டு, தமிழர்களுக்கு விடிவைத்தருகிற அரசை பதவியில் அமர்த்துங்கள்.
எல்லாவற்றையும் இழந்து கொண்டு வருகிறோம்! உங்களையும் நாம் இழக்க விரும்பவில்லை.
தமிழின தலைவர்கள் என சொல்லிக்கொண்டு தம் குடும்பநலனிலேயே கருத்தாக இருப்பவர்களை நினைத்து வெட்கி தலைகுனிகிறேன்
//
மீன்சூர் ராசா - இங்கேயுமா வந்து உன் அரசியல் பசப்பை செய்யவேண்டும்? தயவு செய்து இங்கேயாச்சும் அதை நிறுத்து..
மிகவும் வேதனையாக உள்ளது.அவருக்கு உணர்வகளுக்கு மதிப்புக் கொடுத்து எனது வணக்கங்களையும் அவரது குடும்பத்திற்கு எனது கவலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு இளைஞர் இப்படி தனது உயிரை இழந்தது வருந்தத்தக்கது.
இப்படியான உயிர் இழப்புக்கள் எனிமேல் நடக்கக் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். .
இப்படிப்பட்ட கொள்கை உள்ள இளைஞர்கள் எமது எதிர்கால சந்ததிக்கு தேவை .தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் ,சுய நலமும் ஆட்சி அதிகார ஆசையும் மட்டுமே கொண்ட அரசியல் வாதிகளால் நிரம்பி உள்ளது.
ஈழத்தமிழர் பிரச்சினை வேறு வழிகளில் போராடப் பட வேண்டும்.
இளைஞர்களை உண்மையான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் சரியான முறையில் வழி நடத்தி இப்படியான உயிர் இழப்புக்களை தடுக்க வேண்டும்.
முத்துகுமரன் உடலை பார்த்த வைகோ
தீக்காயங்களோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மருத்துவமனை உள்ளே சென்று முத்துக்குமரனின் கருகிப்போன சடலத்தைப் பார்த்து அழுதார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வீரத்தமிழன் முத்துக்குமரன் ஈழத்தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை போக்கியிருக்கிறார். மருத்துவர்கள் தன்னுடைய உயிரை காப்பாற்றிவிடக் கூடாது என்பதை வைராக்கியமாக, லட்சியத்தோடு தீக்குளித்திருக்கிறார். கருகிப்போன முத்துக்குமரனின் கால்களைப் பிடித்து அழுதேன். ஈழத்தமிழர்களுக்காக போராடும் வரலாற்றில் முத்துக்குமரனுக்கு தனி இடம் உண்டு.
வசந்தம் தேடும் வாலிப வயதில் ஈழத்தமிழர்களுக்கா தன்னுடைய இன்னுயிரை கொடுத்திருக்கிறார். 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தல் தமிழக இளைஞர்கள் எரிமலை போல் வெடித்தார்கள்.
அதேபோலத்தான் இப்போது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக, தமிழக இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த போராட்டம் பெரிய அளவில் எழுச்சித் தரும்.
முத்துக்குமரனின் மரணத்துக்கு பின்பாவது இந்திய அரசு இலங்கையில் நடக்கும் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியில் கைக்குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் என ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்துக்கு அஞ்சி தவிக்கின்றனர்.
இலங்கை அதிபர் சர்வதேச செஞ்சுலுவை சங்கங்கள், பத்திரிகையாளர்களை அழைத்து உண்மை நிலவரம் என்ன என்பதை அறிவிக்க வேண்டும்.
செய்தி: நக்கீரன்
மிகவும் வருத்தமாக உள்ளது.
:(
மிகவும் மன வேதனையளிக்கிறது :(
மிக மிக வருத்தமான செய்தி.
போர்நிறுத்தம் கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
செய்தி: நக்கீரன்
//கருகிப்போன சடலத்தைப் பார்த்து அழுதார்.
//
இத மட்டும் தான் செய்வானுங்க இவனுங்க
முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம்: திருமா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமரன் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது.
சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முத்துக்குமரன் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் என்றார்.
செய்தி: நக்கீரன்
மிகத்துயரமான செய்தி! உண்மை உணர்வாளனுக்கு அஞ்சலி! களப்பலி ஈழத்திலிருந்து தமிழகத்திற்கும் நீளத் தொடங்கி இருக்கிறது.
சகோதரனுக்கு வீர வணக்கங்கள். அவரது பெற்றோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
மிக வருத்தத்திற்க்குரிய செய்தி
மிக வேதனையான செய்தி!
தயவு செய்து இதை ஊக்கப்படுத்த வேண்டாம். இப்படிப்பட்ட உணர்வுள்ளோர் உயிருடன் எங்களுடன்
வாழந்து உதவ வேண்டும்.
அவர்களைப் பொறுத்தமட்டில் அங்கே ஆயிரம் அத்தோடு இதுவும் ஒன்று எனத் தான் கணக்கில் எடுப்பார்கள்.
தமிழகச் சகோதரர்களே! உங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். தகவல் துறையினர் இதைத் தவிர்க்குப்படி பரப்புரை செய்யுங்கள்.
அவர் ஆத்மா சாந்தியடையவேண்டி;அவர் பெற்றோர் உற்றோர் ஆறுதலடைய மனச்சாந்தியும் வேண்டுகிறேன்.
மிக வருத்தத்திற்க்குரிய செய்தி
இது குறித்து மருத்துவர் ராமதாஸ் அறிக்கை,
’’இலங்கையில் நடைபெறும் தமிழினப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகம் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள எவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம். அத்தகைய முயற்சியில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.
சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்த நிகழ்வை பின்பற்றி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் எவரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர். எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனை இலங்கைத் தமிழர்களே விரும்ப மாட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
செய்தி: நக்கீரன்
//இதனை இலங்கைத் தமிழர்களே விரும்ப மாட்டார்கள்//
என்று மருத்துவர் ராமதாஸ் கூறியதை ஆமோதிக்கிறேன். உயிரைப்போக்கித்தான், உங்கள் அன்பை எமக்கு உணர்த்தவேண்டும் என்பதில்லை.
மிக மிக வருத்தமான செய்தி.............
முத்துக்குமார் மரண எதிரொலி: இலங்கை வங்கி மீது தாக்குதல்
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயிர்நீத்த வாலிபர் முத்துக்குமாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை அரசுக்கு சொந்தமான வங்கி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிகவளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த போலீசாரை மீறி உருட்டுக்கட்டைகளுன் உள்ளே நுழைந்தனர்.
வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டன.
இந்த தீடீர் தாக்குதலால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொறூக்கப்பட்டன.
வங்கி அதிகாரிகளின் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
வங்கியின் அலுவலக நேரம் முடியும் சமயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததால் பதட்ட நிலை உண்டானது.
பின்னர் போலீசார் வநது பதட்ட நிலையை சரிப்படுத்தினர்.
மேலும் இந்த வங்கியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: நக்கீரன்
முத்துக்குமார் செத்ததா முக்கியம்
சில நாய்களுக்கு?
என் ராசா கருணாநிதி கண்ணு,
நீ ஒன்னும் கவலைப்படாதே.அறிவிலி சாவான்,நீ இன்னும் நூறு வருஷம் முதலமைச்சராக இருக்கவேண்டும்.
நமது பரம்பரை மட்டுமே முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்கள்.நீ எப்போதும் போல் பார்ப்பனர்களுடன் ஒத்துவாழ்.அது மட்டுமே நமது பதவி நீடிக்க ஒரே வழி.
நீ சூத்திரன் என்று கூறிக்கொண்டு தமிழர்கள் மீது மூத்திரம் பெய்.விளங்கா மடத்தமிழர்கள்.
அவருடைய உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்: ஏ.பி.பரதன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் சென்னையில் இன்று
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,
’’இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உணர்ச்சி வயப்பட்டு தீக்குளித்த இளைஞரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவருடைய உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
இதன் மூலம் அப்பிரச்சினையை தீர்க்காது என்று இளைய தலைமுறையினருக்கும், மாணவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ’’ பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்று அதிபர் ராஜபக்சேவுடன் நடத்திய பேச்சுவார்த்தை பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
செய்தி: நக்கீரன்
வெகு முட்டாள்தனமான முடிவு.. அவருக்கு என் கண்டனங்கள்...
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது... இவரின் தற்கொலை எத்தனை நாளைக்குப் பேசப்படும்?? நாளை?? நாளை மறுநாள்??? இன்னும் ஒரு வாரம்??
கண்மூடித்தனமாக மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கும், ஆமாம் சாமி போட்டு, மக்களை ஏமாற்றும் அதன் பக்கத்து நாடுகளுக்கும் எங்கோ ஒரு மூலையில் நடந்த இம்மரணம் சிறு வலியைக் கூட ஏற்படுத்தாது என்பதுதான் வேதனை..
இங்குள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைத்து போராட்டங்கள் நடத்தவேண்டும். அப்படி நடந்தால் நானும் பங்கெடுக்கத் தயாராக இருக்கிறேன்.. சும்மா, அங்கொன்றும் இங்கொன்றுமா உண்ணாவிரதம், தீக்குளிப்பு எல்லாம், வீண்.... பேருக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
செய்தி கேட்டதும் மனம் கனத்துப் போனது. அந்தச் சகோதரனுக்கு என் மனமார்ந்த
அஞ்சலிகள். முத்துக்குமார் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த வருத்தங்கள்.
அன்று ஈழத்தமிழ் தேசத்தில் அன்னை பூபதி, திலீபன், தமிழகத்தில் அப்துல் ராவூப் இன்று முத்துக்குமார்.
அருண்
மிகவும் வேதன்னையான செய்தி. முத்துக்குமார் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் அவரது நண்பர்களுக்கும் எமது வருத்தங்கள். முத்துகுமாரின் கடைசி பிரசாரங்களை படிக்கும் பொழுது அவர் எடுத்த முடிவு அதிர்ச்சிகரமனதே.
இனி முத்துகுமாரின் இழப்பை அரசியல்வாதிகள் அரசியல் ஆக முயல்வார்கள்.
இல்லை எனில் அதை மரக்கடிக்க முயல்வார்கள்.
"என்திரனுகாக" காத்திருக்கும் நம் மக்கள் எத்துனை நாள் முத்துகுமார் நினைவில் கொள்வார்களோ!!!.
இன்று எரிந்தது முத்துக்குமார்.
நாளை எரியப் போவது இந்தியக் காங்கிரசு அரசு.
தி.மு.க். வேதனையின் பக்கமா?
சாம்பலின் பக்கமா?
கலைஞர் முடிவெடுக்கட்டும்.
உங்கள் பேர் உள்ளத்தின் தமிழ் ஈழ தாயக தாகம் உண்மையில் மலரும்..அமையும்.. ஒப்பிலா அர்ப்பணிப்பு.. இப்படி இனி எவருமே செய்துவிடாதீர்கள்.. நம் உறுதியான வாழ்வே மெய்யான போர்..
வீரவணக்கம் நண்பா..
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com