“ஆஸ்திரேலியா – பல கதைகள்” தமிழ்ச்சிறுகதைப் போட்டி
ஆதிக் கதைகளும், கதைசொல்லிகளும் இந்த சமூகத்தைக் குறித்த கதைகளால் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டியை ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழும் தமிழர்களுக்காக நடத்தப்படுகிறது. அதற்காக நண்பர் சத்தியா ராஜேந்திரன் அனுப்பியிருந்த அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது. கதைசொல்லிகள் நிறைந்த கண்டத்தில், கதை சொல்லிகளின் மொழி பேசுகிற மக்கள் நடத்துகிற இந்த படைப்பூக்க நிகழ்வு புதிய கதைகளையும், புதிய கதைசொல்லிகளையும் கண்டடைய உதவட்டும், ஆஸ்திரேலியா வாழ் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கலந்துகொள்ள ஊக்கப்படுத்துங்கள். சொல்வதற்கு உங்களிடமும் கதைகள் இருக்கும். நீங்களும் கதை சொல்லிகளாகலாம்.
- திரு
கீழேயுள்ளது ஏற்பாட்டாளர்களின் அறிவிப்பு:
------------------------------------------------------------------------------
பேரன்புடையீர்!
இதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.
- போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
- கதைக்களம் மற்றும் சூழல் ஆ
ஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். - கதைக்களன் குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இரு
க்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம். - கதையின் அளவு 500 வார்த்தைகளுக்குக் குறையா
மலும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். - ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
- போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.
- வெற்றிபெறும் கதைகளையும்
போட்டியில் பங்கெடுக்கும் கதை களையும் போட்டி நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம் - ஒவ்வொரு பிரிவிலும் போட்
டிக்கு வரும் கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 10 முதல் 20 கதைகள் வரை ஆஸ்திரேலிய தோ் வுக் குழுவினரால் தெரிவு செய்யப் படும். அவை அனுபவமிக்க எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் பரிசிற்குரிய கதைகள் தோ்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். - போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
- கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.
PO Box 6212 Fairfield Gardens, QLD 4103
உங்கள் கருத்து என்ன?
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com